கினபாத்தாங்கான் வனவிலங்கு சரணாலயம்
கினபாத்தாங்கான் வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
Kinabatangan Wildlife Sanctuary | |
அமைவிடம் | சபா, மலேசியா |
அருகாமை நகரம் | கினபாத்தாங்கான் |
ஆள்கூறுகள் | 5°37′34″N 118°34′21″E / 5.626139°N 118.572611°E |
பரப்பளவு | 270 சதுர கிலோமீட்டர்கள் (100 sq mi) |
நிறுவப்பட்டது | 1997 |
கினபாத்தாங்கான் வனவிலங்கு சரணாலயம் (மலாய்: Santuari Hidupan Liar Kinabatangan; ஆங்கிலம்: Kinabatangan Wildlife Sanctuary) என்பது மலேசியா, சபா மாநிலம், சண்டக்கான் பிரிவு, கினபாத்தாங்கான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும்.
1997-ஆம் ஆண்டில், கினபாத்தாங்கான் ஆற்றுப் படுகையில் உள்ள 270 ச.கி.மீ. (104 சதுர மைல்) பரப்பளவு மழைக்காடுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன. 1999-ஆம் ஆண்டில், மேலும் கூடுதலாக 28,000 ஹெக்டேர் (69,190 ஏக்கர்) பரப்பளவு மழைக்காடுகள் அந்தச் சரணாலயத்தின் கீழ் கொண்டு வரப்பட்டன[1]
2001-ஆம் ஆண்டில், அரசு சாரா நிறுவனங்களின் முயற்சியின் மூலமாக, கீழ் கினபாத்தாங்கான் ஆற்றுப் படுகையில் பறவைகளின் சரணாலயப் பகுதி உருவாக்கப்பட்டது.[2]
பொது
[தொகு]உலகில் இரண்டு இடங்களில் மட்டுமே, பத்து வகையான ஓராங் ஊத்தான் (Orangutan) மனித குரங்கினங்கள் ஒன்றாக இணைந்து வாழ்கின்றன. அந்த இடங்களில், இந்தக் கினபாத்தாங்கான் வனவிலங்கு சரணாலயமும் ஒன்றாகும்.[1]
மேலும் 50 வகையான பாலூட்டிகள்; 200 வகையான பறவைகள்; தும்பிக்கை குரங்குகள் (Proboscis monkeys); சபா குள்ள யானைகள் (Sabah Pygmy elephants); சுமத்திரா காண்டாமிருகங்கள்; நீள்மூக்கு கொக்குகள்; பாம்புத் தாராக்கள்; மரத் தலையன் பறவைகள்; இந்தச் சரணாலயத்தில் பாதுகாக்கப் படுகின்றன.[3]
கினபாத்தாங்கான் பகுதியில் கோமந்தோங் எனும் பெயரில் ஒரு மலை உள்ளது. அந்த மலையில் மிகப்பெரிய சுண்ணங்கல் குகைகள் உள்ளன. அவற்றின் பெயர் கோமந்தோங் குகைகள் (Gomantong Caves).
ஒராங் ஊத்தான் பாதுகாக்கப்பட்ட பகுதி
[தொகு]கோமந்தோங் குகைகளைச் சுற்றியுள்ள பகுதிகள் ஒராங் ஊத்தான் மனிதக் குரங்குகளுக்குப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பல நூற்றாண்டுகளாக, கோமந்தோங் குகைகள் அவற்றின் கூட்டு உழவாரன் பறவைகளின் கூடுகளுக்கு புகழ்பெற்றவை. இந்தக் கூடுகள் பறவை கூடு சூப் தயாரிப்பிற்காக அறுவடை செய்யப் படுகின்றன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Kinabatangan Wildlife Sanctuary - The sanctuary is one of only two areas in the world inhabited by ten species of primate, four of which are endemic to Borneo". www.wildlifeworldwide.com. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
- ↑ Charlotte J. Fletcher (2009). Conservation, livelihoods and the role of tourism: a case study of Sukau village in the Lower Kinabatangan District, Sabah, Malaysia (Thesis). Lincoln University. hdl:10182/1339.
- ↑ "Kinabatangan Wildlife KINABATANGAN WILDLIFE SANCTUARY - It is one of the only two places in the world where ten primate species are found cohabiting, next to some 50 species of mammals and 200 species of bird, Orangutans, Proboscis monkeys, Sabah Pygmy elephants, Sumatran Rhino, Storm's stork, Oriental Darter and all eight species of Hornbill in Borneo". Sabah Travel Guide - Ultimate travel guide! Sabah, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
- ↑ Ee Lin Wan (2 December 2002). "Gomantong Caves: A Walk into Nature and History". ThingsAsian. Archived from the original on 22 October 2017. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
மேலும் காண்க
[தொகு]மலேசியத் தேசியப் பூங்காக்களின் பட்டியல்
வெளி இணைப்புகள்
[தொகு]- "Rafflesia Forest Reserve". சபா வனத்துறை. Archived from the original on 2012-02-06. பார்க்கப்பட்ட நாள் 2022-04-06.