பியூபோர்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூபோர்ட் நகரம்
Beaufort Town
சபா
Beaufort main road
பியூபோர்ட் நகரின்
முக்கிய சாலை.
Location of பியூபோர்ட் நகரம்
பியூபோர்ட் நகரம் is located in மலேசியா
பியூபோர்ட் நகரம்
பியூபோர்ட் நகரம்
சபாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 5°20′44.84″N 115°44′40.43″E / 5.3457889°N 115.7445639°E / 5.3457889; 115.7445639
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுஉட்பகுதி பிரிவு
மாவட்டம்பியூபோர்ட் மாவட்டம்
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்12,742
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு89800
மலேசியத் தொலைபேசி+6-087
மலேசிய வாகனப் பதிவெண்கள்SB

பியூபோர்ட் என்பது (மலாய்: Pekan Beaufort; ஆங்கிலம்: Beaufort Town; சீனம்: 博福特) மலேசியா, சபா மாநிலம், உட்பகுதி பிரிவு, பியூபோர்ட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.[1]

இந்த நகரத்திற்கு முன்னாள் பிரித்தானிய ஆளுநர் லெய்செஸ்டர் பால் பியூபோர்ட் (Leicester Paul Beaufort) என்பவரின் பெயர் வைக்கப்பட்டது.

பொது[தொகு]

பியூபோர்ட் நகரத்தில் பாயும் படாஸ் ஆற்றில் அவ்வப்போது வெள்ளம் ஏற்படுவது வழக்கம். அதைத் தவிர்ப்பதற்காக, சாலைகளில் உயரமாகக் கட்டப்பட்ட கடைகள் உள்ளன.[2]

பியூபோர்ட் நகரத்தில் பிசாயா (Bisaya), புரூணை மலாய்க்காரர்கள், கடாசான் (Kadazan); டூசுன் (Dusun); லுன் பவாங் (Lun Bawang); லுன் டாயே (Lun Dayeh); மூருட் (Murut) மற்றும் சீனர்கள் (முக்கியமாக ஹக்கா இனத்தவர்) வாழ்கிறார்கள். இவர்களில் பிசாயா பூர்வீக இனத்தவர்தான் அதிகமாக உள்ளார்கள்.[3]

சபாவில் உள்ள மற்ற நகரங்களான கோத்தா கினபாலு; பெனாம்பாங்; தாவாவ்; பாப்பார்; கூடாட் மற்றும் தெனோம் போன்ற நகரங்களைப் போலவே, பியூபோர்ட் நகரிலும் தொடக்கக் காலத்தில் இருந்து சீன ஹக்கா மக்கள் மிகையாக வாழ்கின்றனர்.[4]

வரலாறு[தொகு]

சபாவின் உள்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவதற்காக பியூபோர்ட் நகரம் முதலில் அமைக்கப்பட்டது. அந்த வகையில் பியூபோர்ட்டின் தொடக்கக் காலச் செழிப்பு ரப்பர் உற்பத்தியுடன் நெருக்கமாக இணைந்து உள்ளது.

1945-ஆம் ஆண்டின் பிற்பகுதியில், இரண்டாம் உலகப் போரின் போது, ஜப்பானியப் படைகளுக்கும் மற்றும் ஆஸ்திரேலியப் படைகளுக்கும் இடையே இந்த நகரில்தான் கடுமையான போர் நடந்தது.

மேற்கோள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பியூபோர்ட்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூபோர்ட்&oldid=3640098" இருந்து மீள்விக்கப்பட்டது