மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலேசியாவில் உள்ள அனைத்துத் தனியார்; வணிக வாகனங்களின் முன்புறத்திலும், பின்புறத்திலும் மலேசியா போக்குவரத்துப் பதிவெண்கள் (நம்பர் பிளேட்டுகள்) காட்டப்பட வேண்டும் என்பது அரசு சட்டமாகும். போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை (மலாய்: Jabatan Pengangkutan Jalan Malaysia) வழங்குகிறது.

மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறையை, மலேசியாவில் சுருக்கமாக சே.பி.சே. (JPJ) என்று அழைக்கிறார்கள். மிக அண்மையில் வழங்கப்பட்ட போக்குவரத்துப் பதிவெண்களை மலேசிய சாலைப் போக்குவரத்துத் துறை இணையத்தளம் மூலம் சரிபார்க்கலாம். [1] அதன் இணைய முகவரி: https://www.jpj.gov.my/en/web/main-site/semakan-nombor-pendaftaran-terkini

தற்போது பயன்படுத்தப்படும் வடிவங்களின் எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு;

பதிவெண்களின் வகை தளவமைப்பு
தனியார் மற்றும் வணிக வாகனங்கள் ABC 4567 அல்லது WD 4567 C அல்லது QAA 4567 C அல்லது SAB 4567 C அல்லது KV 4567 B
வாடகை மோட்டார் (Taxi) HAB 4567
இராணுவம் (Military) ZA 4567
தற்காலிகம் (Temporary) A 2341 A (W/TP 2341 for Kuala Lumpur)
தூதரகங்கள் (Diplomatic Corps) 12-34-DC
அரச குடும்பங்கள்; அரசாங்கம் (Royals and government) முழுப் பெயர் (Full title)

வடிவமைப்பு[தொகு]

1900-ஆம் ஆண்டுகளில் மலாயாவில் இயந்திரம் பொருத்தப்பட்ட வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது போக்குவரத்துப் பதிவெண்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பின்னர் 1932-ஆம் ஆண்டு மாற்றம் கண்டது. ஆங்கில எழுத்துருவான தடித்த ஏரியல் (Arial Bold) பயன்படுத்தப் படுகிறது.[2] மலாயா சுதந்திரம் அடைந்த பிற்கு பல முறை பற்பல மாற்றங்களை அடைந்து உள்ளது.

Sxx ## ## வழிமுறை[தொகு]

ALU 1128

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லங்காவி போன்ற இடங்களில் பயன்படுத்தப்படும் வாகனங்கள்; பொது வாடகைக் கார்கள் எனும் டாக்சிகள்; தூதரகங்களின் வாகனங்கள்; ஆகியவை மலேசியச் சாலைப் போக்குவரத்து பதிவெண்கள் நடைமுறையில் இருந்து மாறுபட்டு உள்ளன.

அவற்றைத் தவிர்த்து மலேசியாவில் உள்ள மற்ற அனைத்து வாகனங்களும் Sxx ## ## எனும் வழிமுறையைப் பயன்படுத்துகின்றன.

தீபகற்ப மலேசியா[தொகு]

ALU 1128
தீபகற்ப மலேசியா பதிவெண்கள்
முன்னொட்டு மாநிலம் முன்னொட்டு மாநிலம்
A பேராக் M மலாக்கா
B சிலாங்கூர் N நெகிரி செம்பிலான்
C பகாங் P பினாங்கு
D கிளாந்தான் R பெருலிசு
F புத்திரா செயா T திரங்கானு
J சொகூர் V புத்திரா செயா
K கெடா W கோலாலம்பூர்
(முதல் அறிமுகம்)

சரவாக்[தொகு]

சரவாக் போக்குவரத்துப் பதிவெண்கள்
முன்னொட்டு கோட்டம் முன்னொட்டு கோட்டம் முன்னொட்டு கோட்டம்
QK, QA கூச்சிங் QL லிம்பாங் QR சரிக்கே
QB சிரீ ஆமான் & பெத்தோங் QM மிரி QS சிபு & முக்கா
QC சாமாராகான் & செரியான் QP கப்பிட் QT பிந்துலு

சபா[தொகு]

தற்சமயம் பயன்படுத்தப்படும் பதிவெண்கள்

SK 3268 C
SU64N
SMB 9511
SYE 1224


ஒரு வாகனத்தின் மாதிரி பதிவெண்கள் பட்டை

சபா போக்குவரத்துப் பதிவெண்கள்
சபா போக்குவரத்துப் பதிவெண்கள்
முன்னொட்டு கோட்டம் முன்னொட்டு கோட்டம் முன்னொட்டு கோட்டம்
SA, SY மேற்குக் கரை கோட்டம் SG சபா அரசாங்கம் SS, SM சண்டாக்கான்
SB பீபோர்ட் SK கூடாட் ST, SW தாவாவ்
SD லகாட் டத்து SL லபுவான் SU கெனிங்காவ்

வாடகைக் கார்கள்[தொகு]

வாடகைக் கார்கள் பதிவெண்கள் (1980-க்குப் பின்னர்)
முன்னொட்டு மாநிலம் முன்னொட்டு மாநிலம்
HA பேராக் HM மலாக்கா
HB சிலாங்கூர் HN நெகிரி செம்பிலான்
HC பகாங் HP பினாங்கு
HD கிளாந்தான் HQ சரவாக்
HE சபா HR பெர்லிஸ்
HJ ஜொகூர் HS சபா
HK கெடா HT திரங்கானு
HL லபுவான் HW கோலாலம்பூர்

மலேசியாவில் உள்ள தூதரகங்களுக்கான வாகனப் பதிவெண்கள்[தொகு]

மலேசியாவில் உள்ள தூதரகங்களுக்கான வாகனப் பதிவெண்கள்
எண் நாடு எண் நாடு எண் நாடு
10  இலங்கை 50  செக் குடியரசு 90  லக்சம்பர்க்
11  தாய்லாந்து 51  துருக்கி 91  கென்யா
12  சுவிட்சர்லாந்து 52  சிலவாக்கியா 92  கினியா
13 - 53  பின்லாந்து 93  கசக்கஸ்தான்
14  லிபியா 54  குவைத் 94  கானா
15  ஆத்திரேலியா 55  பிரேசில் 95  கிர்கிசுத்தான்
16  ஐக்கிய அமெரிக்கா 56  கிழக்குத் திமோர் 96  யோர்தான்
17  பாக்கித்தான் 57  ஈரான் 97  கியூபா
18  செருமனி 58  பகுரைன் 98  செனிகல்
19  வங்காளதேசம் 59  ஓமான் 99  யேமன்
20  இத்தாலி 60  நோர்வே 100  ஐரோப்பிய ஒன்றியம்
21  சிரியா 61  பலத்தீன் 101  நேபாளம்
22  கனடா 62  அர்கெந்தீனா 102  பப்புவா நியூ கினி
23  நெதர்லாந்து 63  உக்ரைன் 103  லெபனான்
24  உருசியா 64  எசுப்பானியா 104  கத்தார்
25  பெல்ஜியம் 65  பிஜி 105  மாலைத்தீவுகள்
26  பிலிப்பீன்சு 66  மொரோக்கோ
27  உருமேனியா 67  மொரிசியசு 107  அசர்பைஜான்
28  வட கொரியா 68  சிலி
29  இந்தோனேசியா 69  சூடான் 109  சாம்பியா
30  போலந்து 70  நைஜீரியா 110  வத்திக்கான் நகர்
31  சுவாசிலாந்து 71  மெக்சிக்கோ 111  சோமாலியா
32  எகிப்து 72  லாவோஸ்
33  சுவீடன் 73  வெனிசுவேலா
34  கம்போடியா 74  சிம்பாப்வே 114  சியார்சியா
35  நியூசிலாந்து 75  அங்கேரி 115  கம்பியா
36  தென் கொரியா 76  பெரு
37  ஆஸ்திரியா 77  அல்ஜீரியா 117  தஜிகிஸ்தான்
38  ஐக்கிய இராச்சியம் 78  அல்பேனியா
39  சிங்கப்பூர் 79  தென்னாப்பிரிக்கா
40  இந்தியா 80  பொசுனியா எர்செகோவினா
41  மியான்மர் 81  எக்குவடோர்
42  வியட்நாம் 82  உருகுவை
43  டென்மார்க் 83  அயர்லாந்து
44  ஈராக் 84  கொலம்பியா
45  சீசெல்சு 85  ஐக்கிய அரபு அமீரகம்
46  சப்பான் 86  குரோவாசியா
47  பிரான்சு 87  ஆப்கானித்தான்
48  சவூதி அரேபியா 88  நமீபியா
49  சீனா 89  உஸ்பெகிஸ்தான்

மலேசிய இராணுவம்[தொகு]

ZC 5010

மலேசியாவில் உள்ள அனைத்து இராணுவ வாகனங்களுக்கும் Z எனும் முன்னொட்டு பயன்படுத்தப் படுகிறது.[3][4][5]

ZB #### கருப்பு பட்டையில் வெள்ளை எழுத்துக்களைக் கொண்ட வடிவம். முன்னணிச் சுழியங்கள் எதுவும் இல்லை. அதாவது சுழியங்களைக் கொண்டு பதிவெண்கள் தொடங்குவது இல்லை. I மற்றும் O எழுத்துக்கள் பயன்படுத்தப்படுவது இல்லை.

  • Z - அனைத்து மலேசிய ஆயுதப்படை வாகனங்களுக்கான நிலையான முன்னொட்டு.
  • B - கிளை முன்னொட்டு. (எ.கா.: D = மலேசிய இராணுவம்; U = அரச மலேசிய விமானப்படை
  • # - எண் வரிசை. (எ.கா.: 1, 2, 3 ... 9998, 9999)
மலேசிய இராணுவ வாகனப் பதிவெண்கள்
முன்னொட்டு பிரிவு
Z, ZA, ZD மலேசிய இராணுவம்; ZL, ZU, ZZ தொடர்களை அறிமுகப் படுத்துவதற்கு முன்பு அனைத்து இராணுவ வாகனங்களும் ஒரே வடிவத்தைப் பகிர்ந்து கொண்டன.
ZL அரச மலேசிய கடல்படை; L என்றால் "Laut" ("கடல்")
ZU அரச மலேசிய விமானப்படை; U என்றால் "Udara" ("வான்")
ZZ மலேசியத் தற்காப்பு அமைச்சு (MINDEF)
T/Z இராணுவப் பின்தொடர் வாகனம்

மலேசிய அரச வாகனங்கள்[தொகு]

மலேசியாவின் சுல்தான்கள், மாநிலங்களின் ஆட்சியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் தனித்துவமான பதிவுத் தகடுகளைப் பயன்படுத்துகின்றனர்.

TMJ
SJ
YTM TUNGKU TEMENGGONG KEDAH (AHLI JEMAAH PEMANGKU SULTAN KEDAH DARUL AMAN)

இந்த அதிகாரப்பூர்வமான எண் தட்டுகள் பெரும்பாலானவை, மஞ்சள் பின்னணியைக் கொண்டவை. மேலும் வாகன உரிமையாளர்களின் அதிகாரப்பூர்வமான அரசப் பெயர் அல்லது சின்னங்களை அந்தத் தட்டுகள் தாங்கி நிற்கின்றன.[6]

சான்றுகள்[தொகு]

  1. https://www.jpj.gov.my/en/web/main-site/semakan-nombor-pendaftaran-terkini
  2. "Standardised number plate production coming later this year". 13 January 2016.
  3. "Hicom Handalan (ZB 5277)". military-vehicle-photos.com. 30 October 2012. Archived from the original on 2 டிசம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Malaysian Army Toyota Hilux K9". military-vehicle-photos.com. 3 May 2012. Archived from the original on 29 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Malaysia - Air Force Provost". police-car-photos.com. 16 November 2010. Archived from the original on 30 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "GCar". flickr. 23 November 2005. பார்க்கப்பட்ட நாள் 28 February 2013.