மலேசியாவின் மாவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாவட்டம்
District
Also known as:
ஆட்சி
Jajahan (கிளாந்தான்)
பிரிவு
Division (சபா&சரவாக்)
வகைஇரண்டாம் நிலை நிர்வாகப் பிரிவு
அமைவிடம்மலேசியா
எண்ணிக்கை162
87 - 3 மாந்கரங்கள் (தீபகற்ப மலேசியா)
28 (சபா)
43 (சரவாக்)
1 மாநகரம் (லபுவான்) (as of 2020)
மக்கள்தொகைமிகப்பெரியது: பெட்டாலிங் மாவட்டம், சிலாங்கூர்—1,812,633 (2010)
சிறியது: பெக்கான் மாவட்டம், சரவாக்—15,480 (2010)[1]
பரப்புகள்மிகப்பெரியது: காப்பிட் பிரிவு, சரவாக்—38,934 km2 (15,033 sq mi)
சிறியது: புத்தாத்தான் மாவட்டம், சபா—29.7 km2 (11.5 sq mi)
அரசுமாநகர் மன்றம், மாநகர் கழகம், நகராண்மைக் கழகம், மாவட்ட மன்றம்
லபுவான் & புத்ராஜெயா)
நகர சபை (கூடாட், சபா)
மேம்பாட்டு நிர்வாகம் பிந்துலு, சரவாக்)
உட்பிரிவுகள்முக்கிம்
மாவட்டம் - Daerah - District (கிளாந்தான், சபா & சரவாக்)

தீபகற்ப மலேசியாவில் மாவட்டம் என்பது மாநிலத்தின் ஒரு துணைநிலைப் பிரிவாகும். மாநிலத்தை விடக் கீழ் மட்டத்தில் உள்ள ஒரு நிருவாக அலகைக் குறிக்கும்.

மாவட்டம் ஒன்றின் துணைப் பிரிவுகள் முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.[2] ஆங்கிலம்: (District), மலாய் மொழியில் (Daerah) என்று அழைக்கப் படுகின்றது. கிளாந்தான் மாநிலத்தில் மட்டும் சாச்சாகான் (Jajahan) என்று அழைக்கப்படுகிறது.

கிழக்கு மலேசியாவில் ஒரு பெரிய மாவட்டத்தை பிரிவு அல்லது கோட்டம் (Division, டிவிசன்) என்று அழைக்கிறார்கள். அந்தக் கோட்டத்தின் கீழ் பல சிறுமாவட்டங்கள் வருகின்றன.[3] ஒரு மாநிலத்தைக் கோட்டங்களாகப் பிரித்து, அந்தக் கோட்டங்களை மாவட்டங்களாகப் பிரித்துள்ளார்கள்.

ஒரு மாவட்டம் என்பது ஒரு கோட்டத்தில் ஒரு துணைக் கோட்டமாகும்.[4] சபா மாநிலத்தில் ஐந்து கோட்டங்கள் உள்ளன. அந்த ஐந்து கோட்டங்களையும் 25 மாவட்டங்களாகப் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.[5]

சரவாக் மாநிலத்தில் 11 கோட்டங்கள் உள்ளன. அவற்றை 29 மாவட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[6]

தீபகற்ப மலேசியா[தொகு]

மலேசியாவில் உள்ள மாவட்டங்களின் பட்டியல்:

  • நகராட்சி மாவட்டம்
  • மாநகராட்சி மாவட்டம்


ஜொகூர்[தொகு]

ஜொகூர் மாவட்டங்கள்

கெடா[தொகு]

கிளாந்தான்[தொகு]

மலாக்கா[தொகு]

நெகிரி செம்பிலான்[தொகு]

பகாங்[தொகு]

பினாங்கு[தொகு]

பினாங்கு மாவட்டங்கள்

பேராக்[தொகு]

பெர்லிஸ்[தொகு]

சிலாங்கூர்[தொகு]

திரங்கானு[தொகு]

கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசம்[தொகு]

புத்ராஜெயா[தொகு]

  • புத்ராஜெயா (புத்ராஜெயா கூட்டரசு பிரதேசத்தின் ஒரே மாவட்டம்.)

கிழக்கு மலேசியா[தொகு]

சபா[தொகு]

மலேசியாவில் உள்ள மாவட்டங்கள் சபா

சரவாக்[தொகு]

லபுவான் கூட்டரசு பிரதேசம்[தொகு]

  • வடக்கு
    • பத்து மானிக்கார், போகோன் பத்து, காங்காராக் / மெரிண்டிங், தஞ்சோங் அறு, லாஜாவ், லூபோக் தெமியாங், புக்கிட் கூடா
  • மேற்கு
    • லாயாங்-லாயாங்கான், சுங்கை லாபு, புக்கிட் கலாம், கிலான் / கிலான் புலாவ் அக்கார், சுங்கை பங்காட்
  • தெற்கு
    • சுங்கை பூத்தோன், சுங்கை பெடாவுன் / சுங்கை செம்பிலாங், சுங்கை மிரி / பாகார், பெலுக்குட், பெபூலோ, சுங்கை லாடா
  • விக்டோரியா நகரம் / கிழக்கு
    • பந்தாய், டுரியான் தஞ்சோங், பத்து ஆராங், கெர்சிக் / சாகுகிங் / ஜாவா / பாரிட், பாத்தாவ்-பாத்தாவ் 1, பாத்தாவ்-பாத்தாவ் 2, சுங்கை கெலிங், ரஞ்சா ரஞ்சா, நாகாலாங் / கெருப்பாங்

மேற்கோள்கள்[தொகு]