உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டார் பாரு மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°10′N 100°35′E / 5.167°N 100.583°E / 5.167; 100.583
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டார் பாரு மாவட்டம்
Bandar Baharu District
 மலேசியா
கெடா மாநிலத்தில் பண்டார் பாரு மாவட்டம் அமைவிடம்
கெடா மாநிலத்தில்
பண்டார் பாரு மாவட்டம் அமைவிடம்
Map
பண்டார் பாரு மாவட்டம் is located in மலேசியா
பண்டார் பாரு மாவட்டம்
      பண்டார் பாரு மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°10′N 100°35′E / 5.167°N 100.583°E / 5.167; 100.583
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாவட்டம்பண்டார் பாரு மாவட்டம்
மாவட்ட
அமைவு
3 டிசம்பர் 1965
நகராட்சிபண்டார் பாரு நகராட்சி மன்றம்
(Bandar Baharu District Council)
அரசு
 • மாவட்ட அதிகாரிரொகைசாட் ரசீட்
(Rohaizad Rashid)
பரப்பளவு
 • மொத்தம்271.27 km2 (104.74 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்41,659
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
மலேசிய அஞ்சல் குறியீடு
34xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-04
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்K
பண்டார் பாரு மாவட்ட ஊராட்சி
Bandar Baharu District Council
Majlis Daerah Bandar Baharu
வகை
வகை
உள்ளூராட்சி
வரலாறு
தோற்றுவிப்பு1 மார்ச் 1979
தலைமை
தலைவர்
ரொகைசாட் ரசீட்
(Rohaizad Rashid) 01.01.2022
கூடும் இடம்
09800 செர்டாங், கெடா
வலைத்தளம்
pbt.kedah.gov.my/index.php/majlis-daerah-bandar-baharu/

பண்டார் பாரு மாவட்டம் (ஆங்கிலம்: Bandar Baharu District அல்லது Bandaq Baqhu அல்லது Bandaq Baru; மலாய்: Daerah Bandar Baharu; சீனம்: 万拉峇鲁县) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில் அமைந்து உள்ள ஒரு மாவட்டம் ஆகும்.

இந்த மாவட்டத்திற்கு ஒரு கட்டத்தில் பண்டார் கரஸ்டேசியா (Bandar Crustacea) என மறுபெயரிட முன்மொழியப்பட்டது. அத்துடன் பண்டார் பாரு ஒரு நகரம், ஒரு மாவட்டம் மற்றும் ஒரு மாநிலச் சட்டமன்றத் தொகுதியும் ஆகும். கெடா மாநிலத்தின் தெற்கு முனையில் உள்ளது.[1])

கெடா மாநிலத்தின் தென்கிழக்குப் பகுதியில், பினாங்கின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்கு தென்கிழக்கே 27 கி.மீ. தொலைவில், கெடா - பினாங்கு - பேராக் மாநிலங்களின் எல்லை முக்கோணத்தில் அமைந்துள்ளது.

பொது

[தொகு]

பண்டார் பாரு மாவட்ட உள்ளூராட்சி (ஆங்கிலம்: Bandar Baharu District Council; மலாய்: Majlis Daerah Bandar Baharu) (சுருக்கம்: MDBB) பண்டார் பாரு மாவட்டம் முழுவதையும் நிர்வகிக்கிறது. இதன் அதிகார வரம்பு 169.3 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டது.

பண்டார் பாரு நகரத்திலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள செர்டாங் நகரம்தான் பண்டார் பாரு மாவட்டத்தின் நிர்வாக நகரமாகும்.

பண்டார் பாரு மாவட்டத்தின் கிழக்கில் தென் செபராங் பிறை மாவட்டம்; தெற்கில் லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் மற்றும் கிரியான் மாவட்டம்; வடக்கில் கூலிம் மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் எல்லைகளைக் கொண்டுள்ளன.

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]

பண்டார் பாரு மாவட்டம் 6 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. ஒரு மாவட்டத்தின் ஒரு துணைப் பிரிவு முக்கிம் (Mukim) என அழைக்கப் படுகின்றது.

  • பாகன் சாமாக் (Bagan Samak)
  • ரெலாவ் (Relau)
  • செலாமா (Selama)
  • செர்டாங் (Serdang, Kedah)
  • சுங்கை பத்து (Sungai Batu)
  • சுங்கை கெச்சில் ஹிலீர் (Sungai Kechil Hlir)

மலேசிய நாடாளுமன்றம்

[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) பண்டார் பாரு மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள்.

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P18 கூலிம்-பண்டார் பாரு சைபுடின் நசுத்தியோன் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)

கெடா மாநிலச் சட்டமன்றம்

[தொகு]

கெடா மாநிலச் சட்டமன்றத்தில் பண்டார் பாரு மாவட்டப் பிரதிநிதிகள்; (2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்):

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P18 N36 பண்டார் பாரு நோர் சபரினா பாரிசான் நேசனல் (அம்னோ)

போக்குவரத்து

[தொகு]
Bandar Baharu Interchange (Exit 153).

சீருந்து

[தொகு]

வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (North–South Expressway Northern Route) 153; பண்டார் பாரு நகருக்கு சாலை அமைப்பை வழங்குகிறது.

பொது போக்குவரத்து

[தொகு]

கே.டி.எம். இன்டர்சிட்டி (KTM Intercity) பண்டார் பாரு நகருக்கு தொடருந்து சேவைகளை வழங்கவில்லை. மிக அருகாமையில் பேராக் மாநிலத்தின் உள்ள பாரிட் புந்தார் தொடருந்து நிலையம் உள்ளது.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Warga Kedah Sifatkan Keputusan MB Tukar Nama Bandar Baharu Sebagai 'Penyundalan' Bahasa Melayu". Suara.tv. Archived from the original on 2 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 18 February 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bandar Baharu District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டார்_பாரு_மாவட்டம்&oldid=3728503" இலிருந்து மீள்விக்கப்பட்டது