பெத்தோங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெத்தோங் மாவட்டம்
Betong District
சரவாக்
பெத்தோங் மாவட்டம் is located in மலேசியா
பெத்தோங் மாவட்டம்
      பெத்தோங் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 01°24′45″N 111°31′30″E / 1.41250°N 111.52500°E / 1.41250; 111.52500ஆள்கூறுகள்: 01°24′45″N 111°31′30″E / 1.41250°N 111.52500°E / 1.41250; 111.52500
நாடு மலேசியா
மாநிலம்Flag of Sarawak.svg சரவாக்
பிரிவுபெத்தோங் பிரிவு
மாவட்டம்பெத்தோங் மாவட்டம்
நிர்வாக மையம்பெத்தோங் நகரம்
மாவட்ட அலுவலகம்பெத்தோங் மாவட்ட மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்4,904 km2 (1,893 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்29,366
 • அடர்த்தி6.0/km2 (16/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு98000
பெத்தோங் வரைப்படம்

பெத்தோங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Betong; ஆங்கிலம்: Betong District; சீனம்: 木中县) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பெத்தோங் பிரிவில் ஒரு மாவட்டமாகும்.[1]

முன்பு இந்த மாவட்டம், சரிபாசு (Saribas) என்ற பெயரில் செரி அமான் பிரிவின் (Sri Aman Division) நிர்வாகத்தின் கீழ் இருந்தது. இன்றும் சரவாக் மக்களிடையே சரிபாசு எனும் சொல் புழக்கத்தில் உள்ளது.

பொது[தொகு]

பெத்தோங் பிரிவு மாவட்டங்கள்[தொகு]

பெத்தோங் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

சரிபாசு அதன் இபான் மக்களின் நீளவீடுகளுக்கு (Longhouses) பிரபலமானது; மற்றும் இபான் கலாசாரத்தின் மையமாகவும் கருதப் படுகிறது. சரிபாசு பகுதியில் 222 நீளவீடுகள் உள்ளன.

இங்குள்ள இபான் மக்கள், சரவாக் மாநிலத்தின் பூர்வீகப் பழங்குடியினர். இவர்கள் கடல் டயாக் (Sea Dayaks) மக்கள் என்று அழைப்பதும் உண்டு.[2][3]

1849-ஆம் ஆண்டு ஜூலை 31-ஆம் தேதி சரவாக், பெத்திங் மாரு (Beting Maru) எனும் இடத்தில் ஒரு போர் நடந்தது (Battle of Beting Maru). செக்ராங் (Sekrang) இபான் மக்கள்; மற்றும் சரிபாசு இபான் (Saribas Iban) மக்கள் மீது வெள்ளை இராஜா ஜேம்ஸ் புரூக் (Rajah James Brooke) நடத்திய போர். அதில் ஜேம்சு புரூக் வெற்றி பெற்றார். அதன் பிறகு, சரிபாசு பகுதி சரவாக் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

இனக்குழுக்கள்[தொகு]

பெத்தோங் மாவட்டம் பாரம்பரியமாக இபான், மலாய் மக்கள் மற்றும் சீனர் மக்களின் தாயகமாக உள்ளது. பெரும்பாலான இபான் மக்கள் பெத்தோங் மற்றும் சரதோக் கிராமப் புறங்களில் பரவி உள்ளனர். மொத்தம் இபான் மக்கள் 12,492 பேர் வாழ்கின்றனர்.

சீன மக்கள் பெத்தோங் மற்றும் சரதோக் போன்ற நகரப் பகுதிகளில் அதிக அளவில் உள்ளனர். பிற இனங்களான பிடாயூ, மெலனாவ் மற்றும் ஒராங் உலு ஆகியோர் பெத்தோங் பிரிவை சேர்ந்தவர்கள் அல்ல.

இருப்பினும், சரவாக் முழுவதும் இருந்தும், அண்மைய காலங்களில் அதிகமானோர் பெத்தோங் மாவட்டத்திற்குள் குடியேறி வருகிறார்கள். வெளிநாட்டு தொழிலாளர்கள் அரிதாகவே காணப் படுகின்றனர். அவர்களில் பலர் செம்பனைத் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்.

சான்றுகள்[தொகு]

  1. "Malaysia Districts". Statoids.com. 3 November 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Iban of Brunei". People Groups.
  3. Sutrisno, Leo (2015-12-26). "Rumah Betang". Pontianak Post. 2015-12-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-10-03 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெத்தோங்_மாவட்டம்&oldid=3650393" இருந்து மீள்விக்கப்பட்டது