சரிக்கே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சரிக்கே நகரம்
Sarikei Town
சரவாக்
மேலிருந்து, இடமிருந்து வலமாக:
சரிக்கே நகரச் சின்னம், சரிக்கே மருத்துவமனை, சரிக்கே மத்திய சந்தை, சரிக்கே ஏரிப்பூங்கா, சரிக்கே சமூக மையம்
சரிக்கே is located in மலேசியா
சரிக்கே
     சரிக்கே நகரம்
      மலேசியா
ஆள்கூறுகள்: 2°7′32″N 111°31′19″E / 2.12556°N 111.52194°E / 2.12556; 111.52194
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசரிக்கே பிரிவு
மாவட்டம்சரிக்கே மாவட்டம்
அரசு
 • ஆளுநர் (Resident)சுனைடி மொகிடீன்
Mohamad Junaidi Bin Mohidin
பரப்பளவு
 • மொத்தம்985 km2 (380 sq mi)
மக்கள்தொகை
 (2010[1])
 • மொத்தம்56,228
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
மலேசிய அஞ்சல் குறியீடு
96xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6084
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்QR
இணையதளம்www.sarikei.sarawak.gov.my

சரிக்கே (மலாய் மொழி: Sarikei; ஆங்கிலம்: Sarikei) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சரிக்கே பிரிவு, சரிக்கே மாவட்டத்தின் தலைநகரமாகும். தென்சீனக் கடலில் ராஜாங் ஆறு கலக்கும் இடத்தில் இருந்து 48 கி.மீ. உட்பாகத்தில் சரிக்கே அமைந்துள்ளது.[2]

இந்த நகரத்தின் மையத்தில் உள்ள 3.6 மீட்டர் உயரமான அன்னாசிச் சிலை, தனித்துவமாக விளங்குகிறது.[3] தவிர சரிக்கே மாவட்டத்தில் மிக உயரமான கட்டிடமான விஸ்மா ஜூப்லி முத்தியாரா (Wisma Jubli Mutiara) இந்த நகரில்தான் உள்ளது.

வரலாறு[தொகு]

1840-ஆம் ஆண்டுகளில், ராஜாங் ஆற்றின் வர்த்தகம் சரிக்கேயில் இருந்த மலாய்க்காரர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களில் டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமான் என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருந்தார்.

அப்போது சரிக்கேயில் பிரபலமான வணிகப் பொருட்கள்; அரிசி, தேன் மெழுகு, காட்டுப் பொருட்கள், ஆடைகள் மற்றும் உலர்ந்த மீன்கள் போன்றவையாகும்.

1845 ஏப்ரல் 30-ஆம் தேதி, ராஜா ஜேம்சு புரூக் முதன்முதலில் சரிக்கேயில் கால் பதித்தார். அவர் அங்கு வந்த போது கடற்கொள்ளைகள் அதிகமாக இருந்தன. இபான் மக்களின் கடற்கொள்ளையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமானைக் கேட்டுக் கொண்டார். ஆனால் அப்துல் ரகுமான் இபான் மக்களைக் கட்டுப்படுத்த தவறிவிட்டார்.

1853-இல், புரூணை சுல்தானகத்திடம் இருந்து ராஜாங் நதி மற்றும் அதைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளை ராஜா ஜேம்சு புரூக் பெற்றுக் கொண்டார்.[4]

டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமான்[தொகு]

இந்தக் கட்டத்தில் இபான் மக்களின் தலைவர்களில் ஒருவராக இருந்த சரிப் மசோர் (Syarif Masahor) என்பவர் இபான் மக்கள் உதவியுடன் டத்தோ பாதிங்கி அப்துல் ரகுமானைத் தாக்கினார். தாக்குதலில் வெற்றி அடைந்தார். அத்துடன் 1849 தொடங்கி 1861 வரை சரிக்கே பகுதியைத் தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்தார்.

1856-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி, ஜூலாவைச் (Julau) சேர்ந்த டயாக் மக்களால் (Dayaks) சரிக்கே நகரம் எரிக்கப்பட்டது. அதே மாதத்தில், இபான் மக்களின் கடற்கொள்ளைகளை அடக்குவதற்கு, சரிக்கேயில் ஜேம்ஸ் புரூக் ஒரு கோட்டையைக் கட்டினார். பின்னர் சரிக்கே நகரம் ஜேம்ஸ் புரூக்கின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.

மக்கள் தொகை[தொகு]

சரிக்கே மாவட்டத்தின் இனங்களின் புள்ளி விவரம்[1][5]
மொத்தம்
மக்கள் தொகை
மலாய்க்காரர் இபான் பிடாயூ மெலனாவ் பூமிபுத்ரா சீனர் இந்தியர் பூமிபுத்ரா
அல்லாதவர்
மலேசியர்
அல்லாதவர்
56,228 9,192 18,559 456 3,933 594 21,772 116 370 1,236

சரிக்கே காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Total population by ethnic group, sub-district and state, Malaysia, 2010, Jabatan Perangkaan Malaysia, Retrieved 1 January 2014
  2. "Sarikei is situated about 48km from the mouth of the Rajang River". www.rajangport.gov.my. பார்க்கப்பட்ட நாள் 23 May 2022.
  3. "Sarikei is dubbed as the pineapple town of the state and the fruits are in abundance here". New Sarawak Tribune. 3 June 2019. பார்க்கப்பட்ட நாள் 23 May 2022.
  4. Nicholas, Tarling (17 June 2013). Southeast Asia and the Great Powers. Routledge. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135229405. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018. Brooke had been able to take over Rajang river in 1853, and managed to secure Mukah and surrounding rivers in 1861.
  5. "Official website of Sarikei Administrative Division". Archived from the original on 12 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 12 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sarikei
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சரிக்கே&oldid=3929622" இலிருந்து மீள்விக்கப்பட்டது