உள்ளடக்கத்துக்குச் செல்

காப்பிட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°01′0″N 112°56′0″E / 2.01667°N 112.93333°E / 2.01667; 112.93333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்பிட் மாவட்டம்
Kapit District
சரவாக்
காப்பிட் நகரத்தில் ஆமைகள் குளம்
காப்பிட் நகரத்தில் ஆமைகள் குளம்
காப்பிட் மாவட்டம் is located in மலேசியா
காப்பிட் மாவட்டம்
      காப்பிட் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 2°01′0″N 112°56′0″E / 2.01667°N 112.93333°E / 2.01667; 112.93333
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுகாப்பிட் பிரிவு
மாவட்டம்காப்பிட் மாவட்டம்
நிர்வாக மையம்காப்பிட் நகரம்
மாவட்ட அலுவலகம்காப்பிட்
உள்ளாட்சிகாப்பிட் மாவட்ட மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்15,595.60 km2 (6,021.49 sq mi)
மக்கள்தொகை
 (2020)[1]
 • மொத்தம்65,800
 • அடர்த்தி4.2/km2 (11/sq mi)
இணையதளம்kapitdc.sarawak.gov.my

காப்பிட் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Kapit; ஆங்கிலம்: Kapit District; சீனம்: 加帛区) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; காப்பிட் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தை ராஜாங் ஆறு ஊடுருவிச் செல்கிறது.[2][3]

இந்த மாவட்டத்தில் இபான் சமூகத்தவர் ராஜாங் ஆற்று பகுதிகளில் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். மாவட்டத்தின் தலைநகரமான காப்பிட் நகரத்தில், 1800-ஆம் ஆண்டுகளில் இருந்து நீள வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

பொது

[தொகு]
காப்பிட் மாவட்டத்தின் வரைபடம்

காப்பிட் மாவட்டம் போர்னியோவின் உட்பகுதியில் இருப்பதால், முன்னர் காலத்தில் ராஜாங் ஆற்று வழியாகத்தான் அங்கு செல்ல முடியும். இப்போது புது தார் சாலைகளை அமைத்து இருக்கிறார்கள்.[4]

இந்த மாவட்டம் சிபு நகரில் இருந்து 140 கி.மீ. தொலைவில் உள்ளது. விரைவுப் படகு மூலம் செல்லலாம். 2 மணி நேரத்திற்கும் மேலாகப் பிடிக்கும். இலகுரக விமானம் மூலமாகவும் செல்லலாம். கார் மற்றும் பேருந்தில் செல்ல சுமார் 1 மணி 30 நிமிடங்கள் பிடிக்கும்.

வரலாறு

[தொகு]

வெள்ளை இராஜா சார்லஸ் புரூக் மன்னரின் ஆட்சியின் போது, 1880-ஆம் ஆண்டில், காப்பிட் பகுதியில் ’காப்பிட் கோட்டை’ (Fort Kapit) கட்டப்பட்டது. இந்தக் கோட்டை கட்டப் படுவதற்கு முன்னர் இபான் மக்கள் ஆற்றின் வழியாகச் சென்று ஒராங் உலு (Orang Ulu) மக்களைத் தாக்கி வந்தனர். கோட்டை கட்டப்பட்டதும் தாக்குதல் நிறுத்தப்பட்டது.[5]

கோட்டையின் பாதுகாப்பினால், கோட்டையைச் சுற்றி இருந்த பகுதிகளில், 1880-இல் சீனர்கள் (Hokkien Chinese) படிப்படியாகக் குடியேறினர்.

1924-ஆம் ஆண்டில், காப்பிட் கோட்டையில், இபான் மற்றும் ஒராங் உலு மக்களுக்கு இடையே ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்தானது. இதனால் இரு பழங்குடி மக்களுக்கும் இடையிலான பல நூறு ஆண்டுகள் பகைமை நிரந்தரமான முடிவிற்கு வந்தது.[6]

ராணியார் சில்வியா கோட்டை

[தொகு]
ராணி சில்வியா புரூக் கோட்டை

1925-ஆம் ஆண்டில், காப்பிட் கோட்டை, ராஜா சார்லசு வைனர் புரூக்கின் மனைவி ராணி சில்வியா புரூக்கின் (Rani Sylvia Brooke) நினைவாக, ’சில்வியா கோட்டை’ (Fort Sylvia) என மறுபெயரிடப்பட்டது.[5] இந்தக் கோட்டை 1887, 1934, 1961 மற்றும் 1983-ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளையும் தாங்கி நின்றது.[6]

28 ஜனவரி 1934-இல், காப்பிட் வரலாற்றிலேயே மிகக் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. ராஜாங் ஆற்றின் நீர் மட்டம் 162 அடி (49 மீ) வரை உயர்ந்தது.[5]

ஜப்பானியர் ஆக்கிரமிப்பு

[தொகு]

1941-ஆம் ஆண்டில், ஜப்பானியர் ஆக்கிரமிப்பின் போது (Japanese Occupation), காப்பிட்டில் 37 கடைவீடுகள் கொண்ட இரண்டு வரிசைகள் இருந்தன. போரின் போது நேச நாடுகளின் குண்டுவீச்சினால் காப்பிட் நகரம் முற்றிலும் அழிந்தது.

1973 ஏப்ரல் 2-ஆம் தேதி, சரவாக் மாநிலத்தில் ஒரு பிரிவாகக் காப்பிட் மேம்படுத்தப்பட்டது. ஒரு காலத்தில் சில்வியா கோட்டையில், காப்பிட் மாவட்ட அலுவலகம்; காப்பிட் நீதிமன்றம் இருந்தன. 1973-க்குப் பிறகு, அது காப்பிட் பிரிவின் அலுவலகமாக மாற்றப் பட்டது.[7]

சான்றுகள்

[தொகு]
  1. "The Official Portal of the Sarawak Government". sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2022-05-25.
  2. "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  3. "Malaysia: Administrative Division". City Population. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  4. "Gawai revellers jam incomplete road to Kapit - The Star".
  5. 5.0 5.1 5.2 "Reminiscing Kapit's rich history". The Borneo Post. 7 July 2015 இம் மூலத்தில் இருந்து 25 July 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170725095808/http://www.theborneopost.com/2015/07/07/reminiscing-kapits-rich-history/. 
  6. 6.0 6.1 "Fort Kapit, was built to prevent the Iban from expanding upriver into Orang Ulu territory. Over the years, the fort witnessed both punitive expeditions and peace treaties with the final one made on Nov 16, 1924 – the Kapit Peace-making between the Iban and Orang Ulu". web.archive.org. 2 October 2018. Archived from the original on 2 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2022.
  7. "Kuil Hock Leong Tieng Kapit". Kapit District Office. Archived from the original on 4 அக்டோபர் 2018. பார்க்கப்பட்ட நாள் 3 October 2018.{{cite web}}: CS1 maint: unfit URL (link)

இவற்றையும் பார்க்க

[தொகு]

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்பிட்_மாவட்டம்&oldid=3647837" இலிருந்து மீள்விக்கப்பட்டது