உள்ளடக்கத்துக்குச் செல்

பிந்துலு பிரிவு

ஆள்கூறுகள்: 03°11′56″N 113°06′07″E / 3.19889°N 113.10194°E / 3.19889; 113.10194
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிந்துலு பிரிவு
Bintulu Division
சரவாக்

கொடி
சரவாக் மாநிலத்தில் பிந்துலு பிரிவு
சரவாக் மாநிலத்தில் பிந்துலு பிரிவு
ஆள்கூறுகள்: 03°11′56″N 113°06′07″E / 3.19889°N 113.10194°E / 3.19889; 113.10194
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுபிந்துலு பிரிவு
நிர்வாக மையம்பிந்துலு
பிந்துலு பிரிவு அமைவிடம்பிந்துலு
உள்ளூர் நகராட்சிபிந்துலு மேம்பாட்டு ஆணையம்
Bintulu Development Authority
அரசு
 • ஆளுநர் (Resident)ஜேக் அமான் லுவாட் (Jack Aman Luat)
பரப்பளவு
 • மொத்தம்12,166.2 km2 (4,697.4 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்2,19,529
இனக்குழுக்கள்
 • இபான்41.6%
 • சீனர்16.2%
 • மெலனாவ்10.7%
 • இதர மக்கள்31.5%
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்QT

பிந்துலு பிரிவு (மலாய் மொழி: Bahagian Bintulu; ஆங்கிலம்: Bintulu Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். இந்த டிவிசன் எனும் நிர்வாகப் பிரிவை ஆங்கிலம்: Division மலாய் மொழி: Bahagian) என்று அழைக்கிறார்கள்.

மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும் ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப் படுகிறது. பிந்துலு பிரிவின் பரப்பளவு 12,166 சதுர கிலோமீட்டர்.

பொது

[தொகு]

பிந்துலு பிரிவு மாவட்டங்கள்

[தொகு]

சரவாக் மாநிலத்தின் காப்பிட் பிரிவு; மற்றும் மிரி பிரிவு ஆகிய பிரிவுகளுக்குப் பிறகு, பிந்துலு பிரிவு மூன்றாவது பெரிய பிரிவு ஆகும். பிந்துலு பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

பிந்துலு பிரிவில் உள்ள மூன்று முக்கிய நகரங்கள்: பிந்துலு; தாதாவு (Tatau) மற்றும் செபாவு (Sebauh). சரவாக்கின் நான்காவது பெரிய நகரமாக பிந்துலு நகரம் விளங்குகிறது. பிந்துலு பிரிவின் பெரும்பாலான மக்கள் இந்த நகரத்தில் தான் அதிகமாக உள்ளனர்.

சொல் பிறப்பியல்

[தொகு]

16-ஆம் நூற்றாண்டின் போது, போர்த்துகீசியகடலோடிகளால் "ரிவர் டி புருலு" (River de Burulu) என்று பிந்துலுவிற்குப் பெயரிடப்பட்டது. பிந்துலு என்ற பெயரில் பல புராணக் கதைகள் உள்ளன. புரூக் வம்சத்தின் வெள்ளை இராஜா ஆட்சியின் போது, சரவாக் பழங்குடியினரின் சமூகத்தில், தங்கள் சமூகத் தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள தலை வேட்டையாடுதல் (Headhunting) எனும் பழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.[1]

பின்னர் வேட்டையாடிய தலைகளை கெமெனா ஆற்றில் (Kemena River) வீசி விடுவார்கள். அதன் பிறகு ஆற்றில் இறங்கி அந்தத் தலைகளைச் சேகரிப்பார்கள். தலைகளைச் சேகரிக்கும் நடைமுறையை "மெந்து உலாவ்" (Mentu Ulau) என உள்ளூர்ப் பூர்வீக மொழியில் அழைத்தார்கள்.[2]

இந்த மெந்து உலாவ் எனும் சொல்லில் இருந்து பிந்துலு எனும் சொல் உருவாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.[3]

புள்ளி விவரங்கள்

[தொகு]
இனவாரியாக பிந்துலு பிரிவு[4][5]
நிர்வாக மாவட்டம் மொத்தம்
மக்கள் தொகை
மலாய்
மக்கள்
இபான் பிடாயூ மெலனாவ் மற்றவர்
பூமிபுத்ரா
சீனர்கள் மற்றவர்
பூமிபுத்ரா
அல்லாதவர்
குடிமக்கள்
அல்லாதவர்
பிந்துலு 186,100
(84.5%)
17,500
(9.4%)
71,300
(38.3%)
2,500
(1.4%)
21,200
(11.4%)
8,700
(4.7%)
33,300
(17.9%)
900
(0.4%)
30,700
(16.5%)
தத்தாவ் 28,900
(15.5%)
1,200
(4.2%)
18,200
(63.0%)
200
(0.7%)
1,700
(5.9%)
2,800
(9.7%)
1,500
(5.2%)
100
(0.3%)
3,300
(11.4%)
மொத்தம் 215,000
(100%)
18,700
(8.7%)
89,500
(41.6%)
2,700
(1.3%)
22,900
(10.7%)
11,500
(5.3%)
34,800
(16.2%)
1000
(0.5%)
34,000
(15.8%)

நிர்வாகம்

[தொகு]
பிந்துலு பிரிவின் நிர்வாக மாவட்டங்கள்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Broek, Jan O.M. (1962). "Place Names in 16th and 17th Century Borneo". Imago Mundi 16 (1): 132. doi:10.1080/03085696208592208. "Fig. 2. Borneo Place Names, 16th century – D.H. 1558: R. de burulu = Bintulu". 
  2. "Penyelidikan dan kajian dijalankan untuk mendokumentasi sejarah Bintulu (Research and studies conducted to document the history of Bintulu)". The Borneo Post. 23 October 2012 இம் மூலத்தில் இருந்து 5 June 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150605125502/http://www.theborneopost.com/2012/10/23/penyelidikan-dan-kajian-dijalankan-untuk-mendokumentasi-sejarah-bintulu/. 
  3. De Ledesma, Charles; Lewis, Mark; Savage, Pauline (2003). Malaysia, Singapore, and Brunei. Rough Guides. p. 459. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843530947. பார்க்கப்பட்ட நாள் 5 April 2016. The name "Bintulu" is, in fact, derived from the Malay "Menta Ulau" – "the place for gathering heads"; before Bintulu was bought by Charles Brooke from the Sultan of Brunei in 1853, Melanau pirates preyed on the local coast, attacking passing ships and decapitating their crews.
  4. Sarawak Ethnic Statistic from Sarawak Journal.
  5. Sarawak Ethnic Statistic from Sarawak Journal.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Bintulu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்துலு_பிரிவு&oldid=3650219" இலிருந்து மீள்விக்கப்பட்டது