புக்கிட் மாபோங் மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°04′0″N 113°40′0″E / 2.06667°N 113.66667°E / 2.06667; 113.66667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் மாபோங் மாவட்டம்
Bukit Mabong District
சரவாக்
புக்கிட் மாபோங் மாவட்டம் is located in மலேசியா
புக்கிட் மாபோங் மாவட்டம்
      புக்கிட் மாபோங் மாவட்டம்
      மலேசியா
ஆள்கூறுகள்: 2°04′0″N 113°40′0″E / 2.06667°N 113.66667°E / 2.06667; 113.66667
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுகாப்பிட் பிரிவு
மாவட்டம்புக்கிட் மாபோங் மாவட்டம்
நிர்வாக மையம்காப்பிட் நகரம்
மாவட்ட அலுவலகம்காப்பிட்
உள்ளாட்சிபுக்கிட் மாபோங் மாவட்ட மன்றம்
பரப்பளவு
 • மொத்தம்11,976 km2 (4,624 sq mi)
மக்கள்தொகை (2015)
 • மொத்தம்22,145
 • அடர்த்தி1.8/km2 (4.8/sq mi)
இணையதளம்kapit.sarawak.gov.my
புக்கிட் மாபோங் மாவட்டத்தின் வரைபடம்

புக்கிட் மாபோங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Bukit Mabong; ஆங்கிலம்: Bukit Mabong District; சீனம்: 武吉马蓬区) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; காப்பிட் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும்.[1]

சரவாக்கில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் புக்கிட் மாபோங் மாவட்டமும் ஒன்றாகும். இது 3 நவம்பர் 2015 அன்று அதிகாரப்பூர்வமாக ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. சரவாக் முதல்வர் டத்தோ பாத்திங்கி டான் ஸ்ரீ அஜி அடேனான் பின் அஜி சதேம் (Datuk Patinggi Tan Sri (Dr) Haji Adenan Bin Haji Satem) அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

நிர்வாகம்[தொகு]

புக்கிட் மாபோங் மாவட்டமானது, புக்கிட் மாபோங் மாவட்ட அலுவலகத்தால் நிர்வகிக்கப் படுகிறது. புக்கிட் மாபோங் மாவட்டத்தின் நிர்வாக எல்லையானது பத்து பான்சு (Batu Bansu) பகுதியில் இருந்து தொடங்குகிறது.

முன்பு பெலாகா மாவட்டத்தின் நிர்வாகத்தின் கீழ் இருந்த லாங் புசாங் (Long Busang), லாங் உனாய் (Long Unai) மற்றும் சாங் அனாவ் (Sang Anau) ஆகிய 3 கிராமங்கள் புதிய மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.

மக்கள்தொகை[தொகு]

புக்கிட் மாபோங் மாவட்டத்தில் சுமார் 22,145 பேர் வாழ்கின்றனர். லாங் புசாங், கிராமத்தில் சுமார் 1000 பேர் வசிக்கின்றனர். அவர்கள் கென்னியா பழங்குடியினரைச் (Kenyah Tribe) சேர்ந்தவர்கள். லாங் புசாங்கில் வசிப்பவர்களில் 70 விழுக்காட்டுப் பேர் கிறிஸ்தவர்கள், மீதமுள்ளவர்கள் முசுலிம்கள்.[2][3]

புவியியல்[தொகு]

பாலே (Baleh) வடக்குப் பகுதியில் உள்ள துனோ (Tunoh) பகுதியில் புக்கிட் மாபோங் அமைந்துள்ளது. இங்குதான் ஓசு மலை (Hose Mountains) உள்ளது. இம்மாவட்டத்தின் மிக உயரமான இடமான புக்கிட் பத்து (Bukit Batu) 2,028 மீட்டர் உயரத்தில் உள்ளது.[4]

இந்த மாவட்டத்தில் உள்ள கெலாங்காங் மலை (Gunung Gelanggang), புக்கிட் பத்து தீபான் மலை (Bukit Batu Tiban); மலேசியா - இந்தோனேசியா எல்லையில் அமைந்துள்ளன. புக்கிட் மாபோங் மாவட்டத்திற்கு காப்பிட் மாவட்டம், பெலாகா மாவட்டம், சோங் மாவட்டம் ஆகிய மாவட்டங்களும்; இந்தோனேசியாவின் கிழக்கு கலிமந்தான் (East Kalimantan), மேற்கு கலிமந்தான் (West Kalimantan) மாநிலங்களும்; எல்லைகளாக உள்ளன.

சான்றுகள்[தொகு]

  1. "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  2. "Malaysia: Administrative Division". City Population. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.
  3. https://www.sinarharian.com.my/article/29642/LIFESTYLE/Sinar-Islam/Menjejaki-penduduk-Long-Busang
  4. https://cpn.carnivorousplants.org/articles/ICPS2002confp25_30.pdf

இவற்றையும் பார்க்க[தொகு]

புற இணைப்புகள்[தொகு]