அசா செயா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அசா ஜெயா மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அசா செயா மாவட்டம்
Asajaya District
சரவாக்
அசா செயா மாவட்டம் is located in மலேசியா
அசா செயா மாவட்டம்
      அசா ஜெயா மாவட்டம்
ஆள்கூறுகள்: 1°34′42″N 110°34′52″E / 1.57833°N 110.58111°E / 1.57833; 110.58111ஆள்கூறுகள்: 1°34′42″N 110°34′52″E / 1.57833°N 110.58111°E / 1.57833; 110.58111
நாடு மலேசியா
மாநிலம்Flag of Sarawak.svg சரவாக்
பிரிவுசமரகான் பிரிவு
மாவட்டம்அசா செயா மாவட்டம்
நகரம்அசா செயா நகரம்
சரவாக் மாநிலத்தில் அசா ஜெயா மாவட்டத்தின் அமைவு

அசா செயா மாவட்டம் (மலாய் மொழி: Daerah Asajaya; ஆங்கிலம்: Asajaya District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சமரகான் பிரிவில் ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அசா செயா நகரம்.

அசா ஜெயா முன்பு நோனோ (Nono) என்று அழைக்கப்பட்டது. 1970-ஆம் ஆண்டு முதல் கூச்சிங் பிரிவின் கீழ் ஒரு துணை மாவட்டமாக இருந்தது.

1993-ஆம் ஆண்டு முதல், புதிதாக உருவாக்கப்பட்ட சமரகான் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அசா செயா என மறுபெயரிடப்பட்டது. 1999 டிசம்பர் 31-ஆம் தேதி அசா ஜெயா ஒரு மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது.[1]

சமரகான் பிரிவு[தொகு]

சமரகான் பிரிவு சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். இந்தப் பிரிவு 1986 சூலை 24-ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 4,967.4 சதுர கி.மீ.[2]

சமரகான் பிரிவில் நான்கு நிர்வாக மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் அசாஜெயா மாவட்டமும் ஒன்றாகும்.

கோத்தா சமரகான் நகராண்மைக் கழகம்[தொகு]

சமரகான் மாவட்டம்; அசா ஜெயா (Asajaya) மாவட்டம்; சாடோங் ஜெயா (Sadong Jaya) துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[3]

மக்கள் தொகை[தொகு]

அசா ஜெயா மாவட்டத்தின் இனங்களின் புள்ளி விவரம்[4]
மொத்தம்
மக்கள் தொகை
மலாய்க்காரர் இபான் பிடாயூ மெலனாவ் பூமிபுத்ரா சீனர் இந்தியர் பூமிபுத்ரா
அல்லாதவர்
மலேசியர்
அல்லாதவர்
31190 26032 2593 177 63 48 2038 18 17 204

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sejarah". Pusat Ekonomi Digital Pekan Asajaya.
  2. 2.0 2.1 "Portal Rasmi Pentadbiran Bahagian Samarahan". samarahan.sarawak.gov.my. 23 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Laman Web Rasmi Majlis Perbandaran Kota Samarahan". mpks.sarawak.gov.my. 9 December 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Official website of Sarikei Administrative Division". 12 ஜூலை 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 12 July 2014 அன்று பார்க்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசா_செயா_மாவட்டம்&oldid=3648495" இருந்து மீள்விக்கப்பட்டது