கோத்தா சமரகான்
கோத்தா சமரகான் நகரம் | |
---|---|
Kota Samarahan Town | |
சரவாக் | |
கிழக்கு மலேசியா சரவாக் மாநிலத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 4°12′47″N 114°01′48″E / 4.21306°N 114.03000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
நகரம் | சமரகான் |
அமைவு | 1800-இல் (முவாரா துவாங்) 19 ஆகஸ்டு 1983 (கோத்தா சமரகான்) |
நகராட்சி | 11 நவம்பர் 2016 |
பரப்பளவு | |
• மொத்தம் | 407 km2 (157 sq mi) |
மக்கள்தொகை (2010)[1] | |
• மொத்தம் | 12,724 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
அஞ்சல் குறியீடு | 94300 |
தொலைபேசி எண்கள் | +6082 |
போக்குவரத்துப் பதிவெண்கள் | QC; QP; HQ |
இணையதளம் | mpks.sarawak.gov.my கோத்தா சமரகான் நகராட்சி மன்றம் |
கோத்தா சமரகான் அல்லது சமரகான், (மலாய்: Samarahan அல்லது Kota Samarahan; ஆங்கிலம்: Samarahan; அல்லது Kota Samarahan; சீனம்: 三马拉汉); என்பது கிழக்கு மலேசியா, சரவாக் மாநிலத்தின், சமரகான் பிரிவு (Samarahan Division); சமரகான் மாவட்டத்தில் (Samarahan District) அமைந்து உள்ள ஒரு நகரம். கூச்சிங் மாநகரத்திற்கான துணைக்கோள் நகரமாகவும் விளங்குகிறது.
கோத்தா சமரகான் நகர்ப்பகுதி, சரவாக் மாநிலத்தின் மருத்துவம் மற்றும் கல்வி மையமாக மாறி வருகிறது. மேலும் இந்த நகரம் இப்போது அறிவின் நகரம் என்றும் பேச்சு வழக்கில் அறியப் படுகிறது.
பொது
[தொகு]சமரகான் மாவட்டம் (Samarahan District); அசா செயா மாவட்டம் (Asajaya District); சாடோங் செயா (Sadong Jaya District); துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[2]
2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, கோத்தா சமரகான் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 12,724 ஆகும். மேலும் கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தினால் நிர்வகிக்கப்படும் அனைத்து நகரங்களின் மக்கள் தொகை 85,495 ஆகும்.[3]
சொல் பிறப்பியல்
[தொகு]முவாரா துவாங் (Muara Tuang) என்றால் மலாய் மொழியில் "துவாங் கழிமுகம்" என்று பொருள்.[4] தொடக்கக் காலக் குடியேற்றம், சுங்கை துவாங்கி ஆற்றின் முகப்பில் அமைந்து இருந்ததால் முவாரா துவாங் என்று பெயரிடப்பட்டது.
கோத்தா சமரகான்
[தொகு]1983 ஆகஸ்டு 19-ஆம் தேதி முவாரா துவாங் எனும் துணை மாவட்டம் முழு மாவட்ட நிலைக்குத் தகுதி உயர்த்தப் பட்டது. அதன் பின்னர் சமரகான் மாவட்டம் என புதுப் பெயரில் மாற்றம் கண்டது.
மாவட்டத் தகுதி உயர்வுக்கு ஏற்ற வகையில், சமரகான் நகர்ப் பகுதியில் இருந்த முவாரா துவாங் சந்தையும் (Muara Tuang bazaar) ஒரு நகரம் எனும் தகுதிக்கு நிலை உயர்த்தப்பட்டது. அந்த வகையில் கோத்தா சமரகான் என்று இப்போது அனைவராலும் அறியப் படுகிறது.
கோத்தா சமரகான் என்பது மலாய் மொழியில் "சமரகான் நகரம்" என்று பொருள்படும்.[5] சமரகான் மாவட்டத்தின் பெயரால் பெயரிடப்பட்டது.
இந்த நகரம் தொடக்கக் காலக் குடியேற்றத்தின் மையப் புள்ளியாக இருந்தது. அப்போது ஒரு முக்கிய நதியாக விளங்கிய பாத்தாங் சமரகான் எனும் பெயரில் இந்த நகரமும் அழைக்கப் படுகிறது.
அமைவு
[தொகு]கோத்தா சமரகான் என்பது கூச்சிங் பெருநகரப் பகுதியின் புறநகர்ப் பகுதியாகும். கூச்சிங்கில் இருந்து தென் கிழக்கே சுமார் 30 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.
சமரகான் பகுதியில் உள்ள நிலங்கள் பெரும்பாலும் மலைகள் இல்லாதவை. தட்டையான, தாழ்வான நிலப் பகுதிகள். தென்னை, எண்ணெய் பனை மற்றும் அன்னாசி தோட்டங்களுக்கு ஏற்ற கரி மண் நிலங்கள்.
காலநிலை
[தொகு]கோத்தா சமரகான் வெப்பமண்டல மழைக்காடுகள் காலநிலையைக் கொண்டது. அயனமண்டல மழைக்காடுகள் என்றும் சொல்வார்கள். ஆண்டு முழுவதும் கனமழை; அல்லது மிக அதிக மழைப் பொழிவைக் கொண்டு உள்ளது. அதாவது அதிகமான வெப்பத்தையும்; அதிகமான மழை வீழ்ச்சியையும் கொண்டு உள்ளது.
தட்பவெப்ப நிலைத் தகவல், கோத்தா சமரகான், சரவாக் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.7 (85.5) |
29.9 (85.8) |
31.0 (87.8) |
32.0 (89.6) |
32.4 (90.3) |
32.2 (90) |
32.1 (89.8) |
32.1 (89.8) |
31.7 (89.1) |
31.6 (88.9) |
31.3 (88.3) |
30.6 (87.1) |
31.38 (88.49) |
தினசரி சராசரி °C (°F) | 26.1 (79) |
26.2 (79.2) |
26.9 (80.4) |
27.5 (81.5) |
27.8 (82) |
27.6 (81.7) |
27.3 (81.1) |
27.4 (81.3) |
27.1 (80.8) |
27.1 (80.8) |
26.9 (80.4) |
26.6 (79.9) |
27.04 (80.68) |
தாழ் சராசரி °C (°F) | 22.6 (72.7) |
22.6 (72.7) |
22.8 (73) |
23.0 (73.4) |
23.3 (73.9) |
23.0 (73.4) |
22.6 (72.7) |
22.7 (72.9) |
22.6 (72.7) |
22.7 (72.9) |
22.6 (72.7) |
22.6 (72.7) |
22.76 (72.97) |
மழைப்பொழிவுmm (inches) | 578 (22.76) |
447 (17.6) |
314 (12.36) |
280 (11.02) |
248 (9.76) |
198 (7.8) |
189 (7.44) |
235 (9.25) |
269 (10.59) |
319 (12.56) |
349 (13.74) |
474 (18.66) |
3,900 (153.54) |
ஆதாரம்: Climate-Data.org[6] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sarawak Statistics Yearbook 2019". Buku Tahunan Perangkaan Sarawak / Yearbook of Statistics Sarawak (Department of Statistics, Malaysia): 17. December 2020. பன்னாட்டுத் தர தொடர் எண்:0128-7613. https://www.dosm.gov.my/. பார்த்த நாள்: 20 February 2021.
- ↑ "Laman Web Rasmi Majlis Perbandaran Kota Samarahan". mpks.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
- ↑ "Sarawak Statistics Yearbook 2019". Buku Tahunan Perangkaan Sarawak / Yearbook of Statistics Sarawak (Department of Statistics, Malaysia): 17. December 2020. பன்னாட்டுத் தர தொடர் எண்:0128-7613. https://www.dosm.gov.my/. பார்த்த நாள்: 09 December 2021.
- ↑ "muara in English". Glosbe.
- ↑ "kota in English". Glosbe.
- ↑ "காலநிலை: கோத்தா சமரகான், சரவாக்". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 09 December 2021.
{{cite web}}
: Check date values in:|access-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]