உள்ளடக்கத்துக்குச் செல்

வெப்பமண்டல மழைக்காடுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரேஸிலில் உள்ள அமேசான் மழைக்காடு.

நிலநடுக் கோட்டிற்கு 28 அகலாங்குகள் வடக்கிலும் தெற்கிற்கும் இடைப்பட்ட பிரதேசங்களில் உள்ள மழைக்காடுகளே வெப்பமண்டல மழைக்காடுகள் (இலங்கை வழக்கு: அயனமண்டல மழைக்காடுகள்) எனப்படும். வெப்பமண்டல மழைக்காடுகள் அதிகமான வெப்பத்தையும் மழைவீழ்ச்சியையும் கொண்டுள்ள மழைக்காடுகளாகும். இதன் சராசரி வெப்பநிலை 18 °C தொடக்கம் 27 °C வரை காணப்படும்[1]. இதன் வருட சராசரி மழைவீழ்ச்சி 1680 மிமீ ஐ விடக்குறையாமல் காணப்படும். இது சில பிரதேசங்களில் 10000 மிமீ ஐ விட அதிகமாகும். பொதுவாக மழைவீழ்ச்சி 1750 மிமீ (175 செமீ) தொடக்கம் 2000 மிமீ (200 செமீ) வரை இருக்கும்.[2]

வெப்பமண்டல மழைக்காடுகள் காணப்படும் இடங்கள்

[தொகு]

ஆசியா

[தொகு]
  • ஹரப்பன் மழைக்காடுகள்
  • சிங்கராஜ மழைக்காடுகள்
  • மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மழைக்காடுகள்

ஆபிரிக்கா

[தொகு]
  • இதூரி மழைக்காடு
  • கிலம் இஜிம் மழைக்காடு
  • மடகஸ்கார் மழைக்காடு

மத்திய மற்றும் தென்னமெரிக்கா

[தொகு]

அவுஸ்திரேலியா

[தொகு]
  • டெய்ன்த்ரீ மழைக்காடு

மேற்கோள்கள்

[தொகு]