உள்ளடக்கத்துக்குச் செல்

கூச்சிங் மாவட்டம்

ஆள்கூறுகள்: 01°33′40″N 110°20′30″E / 1.56111°N 110.34167°E / 1.56111; 110.34167
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கூச்சிங் மாவட்டம்
Kuching District
சரவாக்
கூச்சிங் மாவட்டம் is located in மலேசியா
கூச்சிங் மாவட்டம்
      கூச்சிங் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 01°33′40″N 110°20′30″E / 1.56111°N 110.34167°E / 1.56111; 110.34167
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுகூச்சிங் பிரிவு
மாவட்டம்கூச்சிங் மாவட்டம்
நிர்வாக மையம்கூச்சிங் நகரம்
மாவட்ட அலுவலகம்கூச்சிங்
உள்ளூர் நகராட்சி1. தென்மாநகர மன்றம்
Kuching South City Council (MBKS)
2. வடமாநகர மன்றம்
Kuching North City Hall (DBKU)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்6,17,887
போக்குவரத்துப் பதிவெண்கள்QK, QA
கூச்சிங் மாவட்ட வரைப்படம்

கூச்சிங் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Kuching; ஆங்கிலம்: Kuching District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; கூச்சிங் பிரிவில்; ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கூச்சிங் மாநகரம் ஆகும்.

இந்த மாவட்டம் கூச்சிங் பெருநகரம் (Kuching Proper) என்றும்; படவான் (Padawan) என்றும் இரண்டு துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கூச்சிங் மாவட்டத்தின் மக்கள் தொகை 617,887.

கூச்சிங் பெருநகரத் துணை மாவட்டம்[தொகு]

கூச்சிங் பெருநகரத் துணை மாவட்டம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

  • நகர்ப்புற பகுதி; பொதுவாக கூச்சிங் நகரம் என்று அழைக்கப்படுகிறது.[1][2]
  • புறநகர் மற்றும் கிராமப்புற பகுதிகள்; கூட்டாக படவான் நகராட்சி (Padawan Municipality) என்று அழைக்கப் படுகின்றன. முன்பு இந்தத் துணை மாவட்டம், கூச்சிங் கிராமப்புற மாவட்டம் (Kuching Rural District) என்று அழைக்கப்பட்டது. இதன் தலைமையகம் கோத்தா படவான் (Kota Padawan). முன்பு 10-ஆவது மைல் பஜார் (10th Mile Bazaar) என்று அழைக்கப்பட்டது.[3]

படவான் துணை மாவட்டம்[தொகு]

1983 ஆகசுடு 11-ஆம் தேதி படவான் துணை மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இதன் தலைமையகம் தெங் புக்காப் (Teng Bukap).

கூச்சிங் வரலாறு[தொகு]

1827-ஆம் ஆண்டில் புரூணை பேரரசின் நிர்வாகத்தின் போது, சரவாக்கின் மூன்றாவது தலைநகராக கூச்சிங் இருந்தது. 1841-ஆம் ஆண்டில், கூச்சிங்கில் ஒரு கிளர்ச்சியை அடக்குவதற்கு உதவிய ஜேம்சு புரூக்கிற்கு கூச்சிங் பகுதியின் ஒரு சிறு பகுதி கொடுக்கப்பட்டது.

அதற்குப் பின்னர் கூச்சிங், சரவாக் இராச்சியத்தின் தலைநகரானது. உள்துறை போர்னியோ காடுகளில் வாழ்ந்த டயாக் மக்களில் பெரும்பாலோர் ஜேம்சு புரூக்கினால் மன்னிக்கப் பட்டார்கள். பின்னர் அவரின் விசுவாசிகளானார்கள். கூச்சிங் நகரம் வளர்ச்சி கண்டது.

சார்லஸ் வைனர் புரூக்[தொகு]

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, கூச்சிங் நகரில் பெரிய மாற்றங்கள் ஏற்படவில்லை. இருப்பினும், 1946-ஆம் ஆண்டில் சரவாக்கின் கடைசி ஆளுநராக இருந்த ராஜா சர் சார்லஸ் வைனர் புரூக் (Sir Charles Vyner Brooke) என்பவர் ஒரு முடிவு எடுத்தார்.

சரவாக் மாநிலத்தை பிரித்தானிய அரசாங்கத்திற்கு ஒரு காலனிப் பகுதியாக (British Crown Colony) விட்டுக்கொடுக்க முடிவு செய்தார். பிரித்தானியக் காலனித்துவக் காலத்திலும் கூச்சிங் தலைநகரமாகவே இருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "City of Kuching Ordinance" (PDF). Sarawak State Attorney-General's Chambers. 1988. p. 3 (Chapter 48).
  2. Oxford Business Group. The Report: Sarawak 2011. Oxford Business Group. pp. 13–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-907065-47-7. பார்க்கப்பட்ட நாள் 18 July 2013. {{cite book}}: |author= has generic name (help)
  3. Trudy Ring; Robert M. Salkin; Sharon La Boda (January 1996). International Dictionary of Historic Places: Asia and Oceania. Taylor & Francis. pp. 497–498. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-884964-04-6.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கூச்சிங்_மாவட்டம்&oldid=3648513" இலிருந்து மீள்விக்கப்பட்டது