செரியான் பிரிவு

ஆள்கூறுகள்: 01°10′00″N 110°34′00″E / 1.16667°N 110.56667°E / 1.16667; 110.56667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செரியான் பிரிவு
Serian Division
சரவாக்

கொடி
செரியான் பிரிவு is located in மலேசியா
செரியான் பிரிவு
      செரியான் பிரிவு
ஆள்கூறுகள்: 01°10′00″N 110°34′00″E / 1.16667°N 110.56667°E / 1.16667; 110.56667
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசெரியான் பிரிவு
நிர்வாக மையம்செரியான்
உள்ளூர் நகராட்சிசெரியான் நகராண்மைக் கழகம்
Majlis Daerah Serian (MDS)
அரசு
 • ஆளுநர்
(Resident)
ஜொனாதன் லுகோ (Jonathan Lugoh)
பரப்பளவு
 • மொத்தம்2,039 km2 (787 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்90,763
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்QC
இணையத்தளம்Serian Administrative Division

செரியான் பிரிவு (மலாய் மொழி: Bahagian Serian; ஆங்கிலம்: Serian Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். 2015 ஏப்ரல் 11-ஆம் தேதி சரவாக், சமரகான் பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டது. இப்போது தனி பிரிவாகச் செயல்படுகிறது.[1]

கூச்சிங் மாநகரில் இருந்து சுமார் 40 மைல் (64 கி.மீ.) தொலைவில் அமைந்துள்ளது. மக்கள் தொகையில் 65% பிடாயூ பழங்குடி பூர்வீக மக்கள். மற்ற முக்கிய இனக்குழுக்கள் இபான், சீனர் மற்றும் மலாய்க்காரர்கள்.

பொது[தொகு]

செரியான் பிரிவு மாவட்டங்கள்[தொகு]

செரியான் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

செரியான் பிரிவு அதன் டுரியான் பழங்களுக்கு பெயர் பெற்றது. செரியான் பகுதியில் கிடைக்கும் டுரியான் பழங்கள், சரவாக் மாநிலத்தில் சிறந்தவை என்று பிரபலமாக நம்பப் படுகிறது.

"பழங்களின் ராஜா" (King of Fruits) என்று அழைக்கப்படும் அந்த டுரியான் பழங்களின் நினைவாக, செரியான் நகரச் சந்தை சதுக்கத்தின் நடுவில் ஒரு மாபெரும் நினைவுச் சின்னத்தை செரியான் மாவட்ட மன்றம் அமைத்துள்ளது.

கலிமந்தான் காட்டுப் பொருட்கள்[தொகு]

இருப்பினும், புலிச் சிலைகள் மற்றும் எருமை சிலைகள் போன்ற பிற நினைவுச்சின்னங்கள்; செரியான் பிரிவில் புலிகளும் எருமைகளும் குறைந்து போனதால் அவற்றின் சிறப்புத் தன்மைகளை இழந்து விட்டன.

செரியான் நகரம் அதன் வளமான நிலப் பகுதியுடன்; சாலை மற்றும் நீர் போக்குவரத்துகள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. எனவே காடுகளில் கிடைக்கும் அனைத்து வகையான காட்டுப் பொருட்களையும் இங்கு காணலாம்.

அண்மைய காலமாக, இந்த விளைபொருட்களில் பெரும்பாலானவை இந்தோனேசியாவின் கலிமந்தான் காடுகளில் இருந்து கொண்டு வரப் படுகின்றன. விலையும் குறைவாக உள்ளது.

நிர்வாக மாவட்டங்கள்[தொகு]

செரியான் பிரிவில் உள்ள இரண்டு நிர்வாக மாவட்டங்கள்:

  1. சிபுரான் மாவட்டம் - Siburan District
  2. செரியான் மாவட்டம் - Serian District

காலநிலை[தொகு]

செரியான் வெப்பமண்டல மழைக்காடு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்யும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், Serian
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 29.9
(85.8)
30.1
(86.2)
31.0
(87.8)
31.9
(89.4)
32.3
(90.1)
32.0
(89.6)
31.9
(89.4)
31.9
(89.4)
31.7
(89.1)
31.6
(88.9)
31.2
(88.2)
30.6
(87.1)
31.34
(88.42)
தினசரி சராசரி °C (°F) 26.2
(79.2)
26.3
(79.3)
26.8
(80.2)
27.4
(81.3)
27.7
(81.9)
27.3
(81.1)
27.1
(80.8)
27.1
(80.8)
27.1
(80.8)
27.1
(80.8)
26.8
(80.2)
26.5
(79.7)
26.95
(80.51)
தாழ் சராசரி °C (°F) 22.5
(72.5)
22.5
(72.5)
22.7
(72.9)
22.9
(73.2)
23.1
(73.6)
22.7
(72.9)
22.4
(72.3)
22.4
(72.3)
22.5
(72.5)
22.6
(72.7)
22.5
(72.5)
22.5
(72.5)
22.61
(72.7)
மழைப்பொழிவுmm (inches) 438
(17.24)
348
(13.7)
290
(11.42)
286
(11.26)
252
(9.92)
191
(7.52)
179
(7.05)
229
(9.02)
282
(11.1)
321
(12.64)
353
(13.9)
410
(16.14)
3,579
(140.91)
ஆதாரம்: Climate-Data.org[2]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Serian
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=செரியான்_பிரிவு&oldid=3650244" இருந்து மீள்விக்கப்பட்டது