உள்ளடக்கத்துக்குச் செல்

அசா செயா மாவட்டம்

ஆள்கூறுகள்: 1°34′42″N 110°34′52″E / 1.57833°N 110.58111°E / 1.57833; 110.58111
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசா செயா மாவட்டம்
Asajaya District
சரவாக்
அசா செயா மாவட்டம் is located in மலேசியா
அசா செயா மாவட்டம்
      அசா ஜெயா மாவட்டம்
ஆள்கூறுகள்: 1°34′42″N 110°34′52″E / 1.57833°N 110.58111°E / 1.57833; 110.58111
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசமரகான் பிரிவு
மாவட்டம்அசா செயா மாவட்டம்
நகரம்அசா செயா நகரம்
சரவாக் மாநிலத்தில் அசா ஜெயா மாவட்டத்தின் அமைவு

அசா செயா மாவட்டம் (மலாய் மொழி: Daerah Asajaya; ஆங்கிலம்: Asajaya District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சமரகான் பிரிவில் ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் அசா செயா நகரம்.

அசா ஜெயா முன்பு நோனோ (Nono) என்று அழைக்கப்பட்டது. 1970-ஆம் ஆண்டு முதல் கூச்சிங் பிரிவின் கீழ் ஒரு துணை மாவட்டமாக இருந்தது.

1993-ஆம் ஆண்டு முதல், புதிதாக உருவாக்கப்பட்ட சமரகான் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அசா செயா என மறுபெயரிடப்பட்டது. 1999 டிசம்பர் 31-ஆம் தேதி அசா ஜெயா ஒரு மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது.[1]

சமரகான் பிரிவு

[தொகு]

சமரகான் பிரிவு சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். இந்தப் பிரிவு 1986 சூலை 24-ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 4,967.4 சதுர கி.மீ.[2]

சமரகான் பிரிவில் நான்கு நிர்வாக மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் அசாஜெயா மாவட்டமும் ஒன்றாகும்.

கோத்தா சமரகான் நகராண்மைக் கழகம்

[தொகு]

சமரகான் மாவட்டம்; அசா ஜெயா (Asajaya) மாவட்டம்; சாடோங் ஜெயா (Sadong Jaya) துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[3]

மக்கள் தொகை

[தொகு]
அசா ஜெயா மாவட்டத்தின் இனங்களின் புள்ளி விவரம்[4]
மொத்தம்
மக்கள் தொகை
மலாய்க்காரர் இபான் பிடாயூ மெலனாவ் பூமிபுத்ரா சீனர் இந்தியர் பூமிபுத்ரா
அல்லாதவர்
மலேசியர்
அல்லாதவர்
31190 26032 2593 177 63 48 2038 18 17 204

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sejarah". Pusat Ekonomi Digital Pekan Asajaya.
  2. 2.0 2.1 "Portal Rasmi Pentadbiran Bahagian Samarahan". samarahan.sarawak.gov.my. Archived from the original on 18 ஜூன் 2022. பார்க்கப்பட்ட நாள் 23 May 2022. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Laman Web Rasmi Majlis Perbandaran Kota Samarahan". mpks.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
  4. "Official website of Sarikei Administrative Division". Archived from the original on 12 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 12 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசா_செயா_மாவட்டம்&oldid=3926982" இலிருந்து மீள்விக்கப்பட்டது