உள்ளடக்கத்துக்குச் செல்

தலாத்

ஆள்கூறுகள்: 2°9′56″N 111°38′3″E / 2.16556°N 111.63417°E / 2.16556; 111.63417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலாத்
Dalat Town
Bandar Dalat
தலாத் வான்வெளித் தோற்றம் (2011)
தலாத் வான்வெளித் தோற்றம் (2011)
தலாத் is located in மலேசியா
தலாத்

      தலாத்         மலேசியா
ஆள்கூறுகள்: 2°9′56″N 111°38′3″E / 2.16556°N 111.63417°E / 2.16556; 111.63417
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுமுக்கா பிரிவு
மாவட்டங்கள்தலாத் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்905 km2 (349 sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
96300
இணையதளம்mukah.sarawak.gov.my/web/home/index/

தலாத் (மலாய்; Bandar Dalat; ஆங்கிலம்: Dalat Town, சீனம்: 大叻镇), மலேசியா, சரவாக், முக்கா பிரிவு, தலாத் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் ஓயா ஆற்றங்கரையில் (Oya River) அமைந்துள்ளது.

இந்த நகரம் தலாத் மாவட்டத்தின் நிர்வாக மையமாகச் செயல்படுகிறது.

வரலாறு

[தொகு]

தலாத் மாவட்டத்தின் சுருக்கமான வரலாறு:

  • 2 ஏப்ரல் 1974 - தலாத் நகரத்தை நிர்வாக மையமாகக் கொண்டு, தலாத் ஒரு மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. இந்த மாவட்டம் சிபு பிரிவின் கீழ் இருந்தது; மற்றும் ஓயா (Oya), பெரும் தலாத் (Dalat Proper), நங்கா பாவோ (Nanga Baoh), நங்கா தமின் (Nanga Tamin), இசுதாபாங் (Stapang), இசுகிம் செகுவா (Skim Sekuau) மற்றும் நங்கா பாக்கோ (Nanga Pakoh) ஆகிய இடங்களை உள்ளடக்கி இருந்தது. மாவட்டத்தில் 4 சிறிய நகரங்கள், 23 கிராமங்கள் மற்றும் 115 நீள வீடுகள் இருந்தன.
  • 1 மார்ச் 2002 - முக்கா பகுதி முக்கா பிரிவு என தரம் உயர்த்தப்பட்டது; மாவட்டத்தில் 3 சிறிய நகரங்கள், 23 கிராமங்கள் மற்றும் 22 நீள வீடுகள் இருந்தன.

பொருளாதாரம்

[தொகு]

தலாத் நகரத்தின் முக்கிய வேளாண் விளைபொருள் சவ்வரிசி மாவு ஆகும். தலாத் மாவட்டத்தில் 28,765 எக்டர் வேளாண் நிலம் சவ்வரிசி உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 4 சவ்வரிசி மாவு தொழிற்சாலைகள் நாள் ஒன்றுக்கு 75 டன் சவ்வரிசி மாவை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை.[1]

மொழிகள்

[தொகு]

தலாத் நகரத்தின் மக்களில் பெரும்பான்மையோர் மெலனாவு மொழியைப் பயன்படுத்துகின்றனர். மலாய் மொழி, சரவாக் மலாய் மொழி, இபான் மொழி, மாண்டரின் மொழி, ஹொக்கியன் மொழி மற்றும் ஆங்கிலம் போன்ற பிற மொழிகளும் பரவலாகப் பேசப்படுகின்றன.

காலநிலை

[தொகு]

தலாத் நகரம் ஒரு வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமழை முதல் மிக அதிக மழைப்பொழிவைக் காண்கிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், தலாத் நகரம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 30.3
(86.5)
30.6
(87.1)
31.5
(88.7)
32.2
(90)
32.7
(90.9)
32.4
(90.3)
32.3
(90.1)
31.9
(89.4)
31.9
(89.4)
31.8
(89.2)
31.5
(88.7)
31.0
(87.8)
31.68
(89.02)
தினசரி சராசரி °C (°F) 26.3
(79.3)
26.5
(79.7)
27.1
(80.8)
27.4
(81.3)
27.9
(82.2)
27.5
(81.5)
27.2
(81)
27.0
(80.6)
27.2
(81)
27.2
(81)
26.9
(80.4)
26.7
(80.1)
27.08
(80.74)
தாழ் சராசரி °C (°F) 22.3
(72.1)
22.4
(72.3)
22.7
(72.9)
22.7
(72.9)
23.1
(73.6)
22.7
(72.9)
22.2
(72)
22.2
(72)
22.5
(72.5)
22.6
(72.7)
22.4
(72.3)
22.4
(72.3)
22.52
(72.53)
மழைப்பொழிவுmm (inches) 355
(13.98)
272
(10.71)
276
(10.87)
244
(9.61)
216
(8.5)
179
(7.05)
180
(7.09)
215
(8.46)
263
(10.35)
272
(10.71)
282
(11.1)
354
(13.94)
3,108
(122.36)
ஆதாரம்: Climate-Data.org[2]

காட்சியகம்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Mukah: Dari Taman Rumbia ke Kota Bestar". Pejabat Residen Mukah. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014.
  2. "Climate: Bintangor". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலாத்&oldid=4106859" இலிருந்து மீள்விக்கப்பட்டது