பிந்தாங்கூர்
பிந்தாங்கூர் Bintangor Town Bandar Bintangor | |
---|---|
ஆள்கூறுகள்: 2°9′56″N 111°38′3″E / 2.16556°N 111.63417°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | மேற்கு கரை பிரிவு |
மாவட்டங்கள் | மெராடோங் மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 96500 |
தொலைபேசி | 084 (landline only) |
வாகனப் பதிவெண்கள் | QR; HQ |
இணையதளம் | www |
பிந்தாங்கூர் (மலாய்; Bandar Bintangor; ஆங்கிலம்: Bintangor Town, சீனம்: 民丹莪), மலேசியா, சரவாக், சரிக்கே பிரிவு, மெராடோங் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இந்த நகரம் ராஜாங் ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.[1][2]
1970 - 1990-களில், சரிக்கே நகரம், சிபு நகரம்; ஆகிய இரு நகரங்களையும் இணைக்கும் விரைவு படகுச் சேவையின் மையமாக பிந்தாங்கூர் நகரம் விளங்கியது.
1900-களின் பிற்பகுதியில், அந்த இரு நகரங்களுக்கும் இடையிலான சாலை இணைப்புகள் மிக முக்கியமான போக்குவரத்து முறையாக மாறின. அதன் விளைவாக பிந்தாங்கூர் நகரத்தின் நீர்வழிப் பாதையும் மூடப்பட்டது. பிந்தாங்கூர் நகரத்திற்கு மிக அருகிலுள்ள நகரம் சிபு நகரம் ஆகும். இது போர்னியோ நெடுஞ்சாலை (Pan-Borneo Highway) வழியாக 45 நிமிடப் பயண நேரத்தில் உள்ளது.
வரலாறு
[தொகு]முன்பு இந்த நகரம் பினாத்தாங் நகரம் என்று அழைக்கப்பட்டது. கி.பி 150-இல் எழுதப்பட்ட தொலெமி எனும் புவியியலாளர் எழுதிய நூலில், போர்னியோவின் வடமேற்கு முனையில் உள்ள ஓர் இடம் தெரியோட்ஸ் என விவரிக்கப்பட்டு உள்ளது. அது கிரேக்க மொழியில் விலங்கு என்று பொருள்படும். இது சமசுகிருதச் சொல்லான "திரியாக்ஜா" எனும் சொல்லுடன் தொடர்புடையது.
தற்போது ராஜாங் ஆற்றின் முகப்பில் உள்ள ஒரு நகரத்திற்கும் பினாத்தாங் எனும் பெயர் உள்ளது.[3] மலாய் மொழியில் பினாத்தாங் என்றால் விலங்கு என்று பொருள்படும். அந்தச் சொல் தரம் தாழ்ந்த சொல்லாகக் கருதப் பட்டதால் அதை மாற்றுவதற்கு பொதுமக்கள் முயற்சி செய்தார்கள்.
பினாத்தாங்
[தொகு]பினாத்தாங் எனும் சொல் பிந்தாங் என்று மாற்றப்பட்டது. மலாய் மொழியில் பிந்தாங் என்றால் விண்மீன் என்று பொருள்படும். சில ஆண்டுகளுக்குப் பிறகு, உள்ளூர் அதிகாரிகள் இடப் பெயரை அவ்வளவு எளிதில் மாற்றக்கூடாது என்று முடிவு செய்தனர்; அவர்கள் பெயரை மீண்டும் பினாத்தாங் என்று மாற்றினர்.[1]
1984-இல்,[4] மாவட்ட மன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, சரவாக் முதல்வர் அப்துல் தாயிப் மகமூத் அவர்கள், பினாத்தாங் மாவட்டத்தை மெராடோங் மாவட்டமாகவும்; நகரத்தின் பெயரை பிந்தாங்கூர் எனவும் மாற்ற முடிவு செய்தார்.
மெராடோங் என்ற பெயர் அதே பெயரில் அங்குள்ள ஓர் ஆற்றில் இருந்து பெறப்பட்டது. அந்த ஆறு பெரிய ராஜாங் ஆற்றில் கலப்பதற்கு முன் பிந்தாங்கூர் நகரத்தின் வழியாகச் செல்கிறது. பிந்தாங்கூர் என்ற பெயர் அங்குள்ள மலைகளில் காணப்படும் ஒரு மரத்தின் பெயரிலிருந்து பெறப்பட்டது.[4] பிந்தாங்கூர் மரத்திலிருந்து (Calophyllum lanigerum) பிரித்தெடுக்கப்பட்ட 'கலனோலைடு ஏ' (Calanolide A) எனும் திரவம், எச்ஐவி தொற்றுக்குச் சிகிச்சை அளிப்பதற்கான மூலிகை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.[5]
மெராடோங் மாவட்டம்
[தொகு]மெராடோங் மாவட்டம் (Meradong District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சரிக்கே பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். மெரடோங் மாவட்டம் 719 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டம் சரவாக் மாநிலத்தின் மிகச்சிறிய மாவட்டமாக அறியப்படுகிறது. இது சரிக்கே மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
சனவரி 24, 1984 அன்று, இந்த மாவட்டத்தின் பெயர் மெராடோங் மாவட்டம் என மாற்றப்பட்டது.[6] 13 பிப்ரவரி 1984 தேதியிட்ட சரவாக் அரசாங்க அரசிதழ் பகுதி II, தொகுதி:XXXIX, எண்.4 (Sarawak Government Gazette Part II, Vol:XXXIX, No.4) வழியாக மாவட்டத்தின் பெயர் மாற்றம் அரசிதழில் வெளியிடப்பட்டது.
காலநிலை
[தொகு]பிந்தாங்கூர் ஒரு வெப்பமண்டல மழைக்காடுகளின் காலநிலையைக் காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமழை முதல் மிக அதிக மழைப்பொழிவைக் காண்கிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், பிந்தாங்கூர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30.3 (86.5) |
30.6 (87.1) |
31.5 (88.7) |
32.2 (90) |
32.7 (90.9) |
32.4 (90.3) |
32.3 (90.1) |
31.9 (89.4) |
31.9 (89.4) |
31.8 (89.2) |
31.5 (88.7) |
31.0 (87.8) |
31.68 (89.02) |
தினசரி சராசரி °C (°F) | 26.3 (79.3) |
26.5 (79.7) |
27.1 (80.8) |
27.4 (81.3) |
27.9 (82.2) |
27.5 (81.5) |
27.2 (81) |
27.0 (80.6) |
27.2 (81) |
27.2 (81) |
26.9 (80.4) |
26.7 (80.1) |
27.08 (80.74) |
தாழ் சராசரி °C (°F) | 22.3 (72.1) |
22.4 (72.3) |
22.7 (72.9) |
22.7 (72.9) |
23.1 (73.6) |
22.7 (72.9) |
22.2 (72) |
22.2 (72) |
22.5 (72.5) |
22.6 (72.7) |
22.4 (72.3) |
22.4 (72.3) |
22.52 (72.53) |
மழைப்பொழிவுmm (inches) | 355 (13.98) |
272 (10.71) |
276 (10.87) |
244 (9.61) |
216 (8.5) |
179 (7.05) |
180 (7.09) |
215 (8.46) |
263 (10.35) |
272 (10.71) |
282 (11.1) |
354 (13.94) |
3,108 (122.36) |
ஆதாரம்: Climate-Data.org[7] |
காட்சியகம்
[தொகு]-
பிந்தாங்கூர் நகரச் சின்னம்
-
பிந்தாங்கூர் பசார்
-
பிந்தாங்கூர் பொழுதுபோக்கு பூங்கா
-
பிந்தாங்கூர் கத்தோலிக்க ஆலயம்
-
மெராடோங் மாவட்டத் தலைமை அலுவலகம்
-
பிந்தாங்கூர் படகுத்துறை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Yii, Yuk Seng (November 2010). Collection of historical material on the chinese community in Sarikei Division (First ed.). Sibu, Sarawak: Sarawak Chinese Cultural Association. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-9360-49-3.
- ↑ Nicholas, Tarling (17 June 2013). Southeast Asia and the Great Powers. Routledge. p. 195. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135229405. பார்க்கப்பட்ட நாள் 27 April 2018.
Brooke had been able to take over Rajang river in 1853, and managed to secure Mukah and surrounding rivers in 1861.
- ↑ W. J. van der Meulen Ptolemy's Geography of Mainland Southeast Asia and Borneo https://www.jstor.org/stable/3350700?read-now=1&seq=16#page_scan_tab_contents
- ↑ 4.0 4.1 The Borneo Post. "Bintangor – the sweet and bright pill". theborneopost.com.
- ↑ "Calanolide a compound from Bintangor tree shows promising results in treating HIV". Malay Mail. 25 November 2016 இம் மூலத்தில் இருந்து 25 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180525150106/https://www.malaymail.com/s/1258299/calanolide-a-compound-from-bintangor-tree-shows-promising-results-in-treati.
- ↑ "Meradong District Office Introduction - Official Portal of Sarikei Division Administration". sarikei.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 October 2024.
- ↑ "Climate: Bintangor". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Bintangor தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.