பெலாகா மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°42′N 113°47′E / 2.700°N 113.783°E / 2.700; 113.783
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலாகா மாவட்டம்
Belaga District
சரவாக்
பெலாகா மாவட்டம் is located in மலேசியா
பெலாகா மாவட்டம்
      பெலாகா மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 2°42′N 113°47′E / 2.700°N 113.783°E / 2.700; 113.783
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுகாப்பிட் பிரிவு
மாவட்டம்பெலாகா மாவட்டம்
நிர்வாக மையம்பெலாகா நகரம்
பரப்பளவு
 • மொத்தம்19,403.2 km2 (7,491.6 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்37,102
 • அடர்த்தி1.9/km2 (5.0/sq mi)

பெலாகா மாவட்டம் (மலாய் மொழி: Daerah Belaga; ஆங்கிலம்: Belaga District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; காப்பிட் பிரிவில்; ஒரு மாவட்டமாகும்.

பெலாகா நகரத்திற்கும்; பெலாகா மாவட்டத்திற்கும் ஒரே பெயர் பயன்படுத்தப் படுகிறது. பெலாகா எனும் பெயரில் ஒரு சட்டமன்றத் தொகுதியும் உள்ளது. பெலாகா நகரம், பக்குன் அணையில் இருந்து 40 கி.மீ. தெற்கில் உள்ளது.[1]

பெலாகா மாவட்டம் காப்பிட் நகரில் இருந்து வடகிழக்கே 120 கிலோமீட்டர் தொலைவில் ராஜாங் ஆற்றின் மேல் பகுதியில் அமைந்துள்ளது. அதே சமயத்தில் தென்சீனக் கடற்கரை நகரமான பிந்துலு நகரில் இருந்து 100 கி.மீ. தொலைவில் உள்ளது.

பொது[தொகு]

1900-களின் முற்பகுதியில் பெலகா கிராமம் நிறுவப்பட்டது. அப்போது ஒரு சில சீன வர்த்தகர்கள் பெலாகாவில் கடைகளை அமைத்தனர். மண்ணெண்ணெய், உப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை அங்குள்ள ஒராங் உலு மக்களுக்கு வழங்கினர். பண்டமாற்று வர்த்தகம் நடந்துள்ளது.

பாலுய் மற்றும் பெலாகா ஆறுகளின் கரைகளில் பல கென்யா (Kenyah); கயான் (Kayan) நீண்ட வீடுகள் உள்ளன. ராஜாங் ஆற்றுக் கரைகளில் புனான், செகாப்பான், கெஜாமான், தஞ்சோங் பூர்வீக பழங்குடியினரின் நீண்ட வீடுகள் உள்ளன.

பெலாகா மாவட்டம் காப்பிட் நகருடன் படகு மூலம் இணைக்கப் பட்டுள்ளது. பொதுப் போக்குவரத்துச் சாலைகள் மிகவும் குறைவு. இருப்பினும் அண்மையில் பிந்துலு - பக்குன் நெடுஞ்சாலை (Bintulu-Bakun Highway) உருவாக்கப்பட்டது. ஆனாலும் முழுமை பெறாத நிலையில் உள்ளது.

பாக்குன் அணை[தொகு]

பெலாகாவிற்கு கிழக்கே பக்குன் அணை (Bakun Dam) உள்ளது. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய அணை. இந்த அணை பெலாகாவிற்கு சுற்றியுள்ள பகுதிகளுக்கும்; தீபகற்ப மலேசியாவிற்கும் மின்சாரம் வழங்கும் நோக்கத்தைக் கொண்டது.

பொருளாதாரக் காரணமாக இதன் கட்டுமானம் பல முறை தாமதமானது. ஏற்கனவே பல பில்லியன் ரிங்கிட் செலவழிக்கப் பட்டது. அதனால் இந்தத் திட்டத்தைத் தொடர மத்திய அரசு முடிவு செய்தது. இந்தத் திட்டத்தின் மொத்தச் செலவுத் தொகை ரிங்கிட் 10 பில்லியன்.

670 கி.மீ. கடலடிக் கம்பிவடம்[தொகு]

ஜனவரி 2007-இல், பாக்குன் அணையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கடலடிக் கம்பிவடம் வழியாகத் தீபகற்ப மலேசியாவிற்கு மாற்றுவதற்கான திட்டத்தை மீண்டும் மலேசிய மத்திய அரசாங்கம் அறிவித்தது. கடலடிக் கம்பிவடம் 670 கி.மீ. தூரம் வரை நீண்டு, தீபகற்ப மலேசியாவின் ஜொகூர்; யோங் பெங் கடற்கரையை அடையும்.

2011-ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை, சரவாக்கின் இயற்கைச் சூழலை நிரந்தரமாக மாற்றி அமைத்து இருப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலாகா_மாவட்டம்&oldid=3679927" இருந்து மீள்விக்கப்பட்டது