செரி அமான் பிரிவு
செரி அமான் பிரிவு | |
---|---|
Sri Aman Division | |
சரவாக் | |
சரவாக் மாநிலத்தில் செரி அமான் பிரிவு | |
ஆள்கூறுகள்: 1°14′7″N 111°28′11″E / 1.23528°N 111.46972°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | செரி அமான் பிரிவு |
நிர்வாக மையம் | சிமாங்காங் |
உள்ளூர் நகராட்சி | 1. செரி அமான் மாவட்ட மன்றம் Majlis Daerah Sri Aman (MDSA) 2. லுபோக் அந்து மாவட்ட மன்றம் Majlis Daerah Lubok Antu (MDLA) |
பரப்பளவு | |
• மொத்தம் | 5,466.7 km2 (2,110.7 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,11,400 |
• அடர்த்தி | 20/km2 (53/sq mi) |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | QB |
செரி அமான் பிரிவு (மலாய் மொழி: Bahagian Sri Aman; ஆங்கிலம்: Sri Aman Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். முன்பு செரி அமான் பிரிவு; சரவாக்கின் இரண்டாம் பிரிவின் (Second Division) ஒரு பகுதியாக இருந்தது. இது முன்பு சிமாங்காங் மாவட்டம் (Simanggang District) என்று அழைக்கப்பட்டது.[1]
1860-ஆம் ஆண்டில் சரவாக் மாநிலத்தில் தொடங்கப்பட்ட இந்த பிரிவு (Division) முறை இன்றும் நீடிக்கிறது. முன்பு ஐந்து பிரிவுகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் அப்போதைய இரண்டாம் பிரிவில், இப்போதைய பெத்தோங் பிரிவு; மற்றும் செரி அமான் பிரிவு ஆகியவை பிரிவுகளும் அடங்கும்.
பொது
[தொகு]செரி அமான் பிரிவு மாவட்டங்கள்
[தொகு]செரி அமான் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:
- செரி அமான் மாவட்டம் (Sri Aman District)
- லுபோக் அந்து மாவட்டம் (Lubok Antu District)
செரி அமான் பிரிவின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்தது. அந்த வகையில் செரி அமான் பிரிவு சரவாக்கின் மிகப்பெரிய விவசாய நிலப் பகுதியாகத் திகழ்கிறது.
செரி அமான் பிரிவின் மொத்த பரப்பளவு 5,466.7 சதுர கி.மீ. 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, சிபு பிரிவின் மக்கள் தொகை 111,400. இன ரீதியாக, மக்கள்தொகை பெரும்பாலும் இபான், சீனர், மலாய்க்காரர் மற்றும் மெலனாவ் மக்களாகும். இவர்களில் சீனர் மக்கள் தான் பெரும்பான்மையில் உள்ளனர்.
டிவிசன் விளக்கம்
[தொகு]டிவிசன் என்பது ஒரு நிர்வாகப் பிரிவு. அந்த நிர்வாகப் பிரிவை ஆங்கிலம்: Division மலாய் மொழி: Bahagian) என்று அழைக்கிறார்கள்.
மலேசியாவின் கிழக்கு மலேசியாவில் உள்ள சபா; சரவாக் மாநிலங்களில் பிரிவு என்பது ஒரு நிர்வாகப் பிரிவாகும். அந்த இரு மாநிலங்களிலும், ஒவ்வொரு பிரிவும் சிற்சில மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப் படுகிறது.
வரலாறு
[தொகு]சரவாக்கின் முந்தைய இரண்டாம் பிரிவு (Second Division) 1873-ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி நிறுவப்பட்டது.[2][3] பின்னர் அது சிமாங்காங் பிரிவு (Simanggang Division) என மறுபெயரிடப்பட்டது. இந்தப் பிரிவு மார்ச் 1974-இல் செரி அமான் பிரிவு (Sri Aman Dvision) என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
செரி அமான் பிரிவு முதன்முதலில் நான்கு மாவட்டங்கள்; மற்றும் 9 சிறிய மாவட்டங்களைக் கொண்டு நிர்வாகம் செய்யப்பட்டது.
முந்தைய மாவட்டங்கள்
[தொகு]- செரி அமான் மாவட்டம் - (Sri Aman District)
- லுபோக் அந்து மாவட்டம் - (Lubok Antu District)
- பெத்தோங் மாவட்டம் - (Betong District)
- சரதோக் மாவட்டம் - (Saratok District)
- பாந்து துணை மாவட்டம் - (Pantu Sub District)
- இலிங்கா துணை மாவட்டம் - (Lingga Sub District)
- மாலுடாம் துணை மாவட்டம் - (Maludam Sub District)
- எங்கிலிலி துணை மாவட்டம் - (Engkilili Sub District)
- சுபாவோ துணை மாவட்டம் - (Spaoh Sub District)
- தெபாக்கு துணை மாவட்டம் - (Debak Sub District)
- பூசா துணை மாவட்டம் - (Pusa Sub District)
- ரோபன் துணை மாவட்டம் - (Roban Sub District)
இப்போதைய மாவட்டங்கள்
[தொகு]26 மார்ச் 2002-இல் பெத்தோங் பிரிவு நிறுவப்பட்ட பிறகு, செரி அமான் பிரிவு 2 பெரிய மாவட்டங்கள் மற்றும் 3 சிறிய மாவட்டங்களை மட்டுமே கொண்டுள்ளது.
அவை செரி அமான் மாவட்டம் மற்றும் லுபோக் அந்து மாவட்டம். சிறிய மாவட்டங்கள்: எங்கிலிலி துணை மாவட்டம்; லிங்கா துணை மாவட்டம்; மற்றும் பாந்து துணை மாவட்டம்.
சுற்றுலா
[தொகு]செரி அமான் பிரிவில் பத்தாங் ஆய் தேசிய பூங்கா (Batang Ai National Park) உள்ளது; மலுடாம் தேசிய பூங்கா (Maludam National Park) ஆகிய புகழ் வாய்ந்த தேசிய பூங்காக்கள் சுற்றுலா ஈர்ப்புகளாக உள்ளன.
சுற்றுலாத்துறை, குறிப்பாக சுற்றுச்சூழல் சுற்றுலா, மற்றும் கலாசார சுற்றுலா போன்றவை உள்ளூர்ப் பொருளாதாரத்தின் முக்கிய பகுதிகளாகத் திகழ்கின்றன.[4]
சான்றுகள்
[தொகு]- ↑ "Sri Aman Division, formerly known as Simanggang or Second Division, was established on 1 June 1873. The name Sri Aman was taken in conjunction with the historic event of the Sri Aman Declaration (a peace agreement signed on 21 October 1973 between the Government and communist terrorists). The name change was officially made in March 1974". web.archive.org. 19 October 2006. Archived from the original on 19 அக்டோபர் 2006. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
- ↑ Mike, Reed. "Book review of "The Name of Brooke – The End of White Rajah Rule in Sarawak" by R.H.W. Reece, Sarawak Literary Society, 1993". sarawak.com.my. Archived from the original on 8 June 2003. பார்க்கப்பட்ட நாள் 7 August 2015.
- ↑ Lim, Kian Hock (16 September 2011). "A look at the civil administration of Sarawak". The Borneo Post இம் மூலத்தில் இருந்து 6 February 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150206232438/http://www.theborneopost.com/2011/09/16/a-look-at-the-civil-administration-of-sarawak/.
- ↑ "Sri Aman is better known to most Sarawakians as the place where tidal bores occur. The annual "Pesta Benak" attract tens of thousands of people to the banks of Batang Lupar to witness all sorts of water sports". www.etawau.com. பார்க்கப்பட்ட நாள் 25 January 2023.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Sri Aman Residen Office
- Sri Aman Tourism பரணிடப்பட்டது 2006-12-05 at the வந்தவழி இயந்திரம்