பத்து நியா
பத்து நியா நகரம் | |
---|---|
Batu Niah Town | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 3°48′0″N 113°45′0″E / 3.80000°N 113.75000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | மிரி |
மாவட்டம் | மிரி[1] |
மக்கள்தொகை (2013) | |
• மொத்தம் | 1,859 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 98xxx |
இணையதளம் | www |
பத்து நியா (மலாய் மொழி: Batu Niah; ஆங்கிலம்: Batu Niah; சீனம்: 石山) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு; மிரி மாவட்டத்தில் உள்ளது. நியா தேசிய பூங்காவிற்கு அருகில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.[2]
இந்த நகரம் நியா குகைகளுக்குச் செல்வதற்கான இறுதி நிறுத்தமாகும். நியா சுண்ணாம்புக் குகை ஒரு தொல்பொருள் தளமாக விளங்குகிறது.
இந்த குகை மலேசியாவின் மிகப் பெரிய குகை; மற்றும் பழமையான குகை. உலகின் மிகப்பெரிய சுண்ணாம்புக் குகைகளில் ஒன்றாகக் கருதப் படுகிறது. நியா குகையின் சுற்றுப் பகுதிகள் சரவாக் அருங்காட்சியகத்தின் அதிகாரத்தின் கீழ் ஒரு வரலாற்றுத் தளமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பொது
[தொகு]பத்து நியாவைச் சுற்றிலும் நிறைய சுண்ணாம்புக் குன்றுகள் உள்ளன. குனுங் சுபிஸ் (மவுண்ட் சுபிஸ்) என்ற சுண்ணாம்பு மலையின் வடக்கு விளிம்பில் பத்து நியா அமைந்துள்ளது.[3]
இந்த நகரம் தென் சீனக் கடலில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது. பறவைகளின் கூடு சேகரிப்புத் தொழிலுக்கும் நன்கு அறியப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sudan, Ajang (30 September 2015). "Daerah Kecil Bario di bawah bidang kuasa MBM (Bario sub-district is now under the jurisdiction of Miri City Council)". Utusan Borneo. https://www.pressreader.com/malaysia/utusan-borneo-sarawak/20150930/281668253787100.
- ↑ "Batu Niah Township is the final stop to Niah Caves, with a population of under 1,900. Located just next to the Niah National Park, the town's background is dominated by the huge limestone ridges known as Gunung Subis where the Niah Caves are located". Miri, Sarawak (in ஆங்கிலம்). 11 August 2015. பார்க்கப்பட்ட நாள் 28 May 2022.
- ↑ Barker, Graeme (March 2007). The 'human revolution' in lowland tropical Southeast Asia: the antiquity and behavior of anatomically modern humans at Niah Cave (Sarawak, Borneo).