அசா செயா
Appearance
(அசா ஜெயா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அசா செயா நகரம் | |
---|---|
Asajaya Town | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 1°34′42″N 110°34′52″E / 1.57833°N 110.58111°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | சமரகான் பிரிவு |
மாவட்டம் | அசா செயா மாவட்டம் |
அசா செயா (மலாய் மொழி: Asajaya; ஆங்கிலம்: Asajaya; சீனம்: 雅沙再也) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் சமரகான் பிரிவு; அசா செயா மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரமாகும்.
அசா செயா முன்பு நோனோ (Nono) என்று அழைக்கப்பட்டது. 1970-ஆம் ஆண்டு முதல் கூச்சிங் பிரிவின் கீழ் ஒரு துணை மாவட்டமாக உள்ளது.
1993-ஆம் ஆண்டு முதல், புதிதாக உருவாக்கப்பட்ட சமரகான் பிரிவுக்கு மாற்றப்பட்டது. பின்னர் அசா செயா என மறுபெயரிடப்பட்டது. 1999 டிசம்பர் 31-ஆம் தேதி அசா செயா ஒரு மாவட்டமாக தரம் உயர்த்தப்பட்டது.[1]
சமரகான் பிரிவு
[தொகு]சமரகான் பிரிவு சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். இந்தப் பிரிவு 1986 சூலை 24-ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 4,967.4 சதுர கி.மீ.[2]
சமரகான் பிரிவின் நான்கு நிர்வாக மாவட்டங்கள்:[2]
- 1. சமரகான்
- 2. அசா செயா
- 3. செரியான்
- 4. சிமுஞ்சான்
மக்கள் தொகை
[தொகு]மொத்தம் மக்கள் தொகை |
மலாய்க்காரர் | இபான் | பிடாயூ | மெலனாவ் | பூமிபுத்ரா | சீனர் | இந்தியர் | பூமிபுத்ரா அல்லாதவர் |
மலேசியர் அல்லாதவர் |
---|---|---|---|---|---|---|---|---|---|
31190 | 26032 | 2593 | 177 | 63 | 48 | 2038 | 18 | 17 | 204 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sejarah". Pusat Ekonomi Digital Pekan Asajaya.
- ↑ 2.0 2.1 "Portal Rasmi Pentadbiran Bahagian Samarahan". samarahan.sarawak.gov.my. Archived from the original on 18 June 2022. பார்க்கப்பட்ட நாள் 23 May 2022.
- ↑ "Official website of Sarikei Administrative Division". Archived from the original on 12 July 2014. பார்க்கப்பட்ட நாள் 12 July 2014.