உள்ளடக்கத்துக்குச் செல்

தாதாவு மாவட்டம்

ஆள்கூறுகள்: 02°40′0.12″N 113°0′0″E / 2.6667000°N 113.00000°E / 2.6667000; 113.00000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாதாவு மாவட்டம்
Tatau District
Daerah Tatau

      தாதாவு மாவட்டம்       சரவாக்
தாதாவு மாவட்டம் is located in மலேசியா
தாதாவு மாவட்டம்
      தாதாவு மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 02°40′0.12″N 113°0′0″E / 2.6667000°N 113.00000°E / 2.6667000; 113.00000
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுபிந்துலு பிரிவு
மாவட்டம்தாதாவு மாவட்டம்
நிர்வாக மையம்பிந்துலு நகரம்
மாவட்ட அலுவலகம்பிந்துலு
உள்ளூர் நகராட்சிபிந்துலு மேம்பாட்டு ஆணையம்
(Bintulu Development Authority)
Lembaga Kemajuan Bintulu
பரப்பளவு
 • மொத்தம்4,945.80 km2 (1,909.58 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்30,322
 • அடர்த்தி6.1/km2 (16/sq mi)
இனக்குழுக்கள்
 • இபான்63.0%
 • சீனர்5.2%
 • மெலனாவு9.7%
 • மற்றவர்22.1%
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
97000
பதிவெண்கள்QT
தாதாவு மாவட்டத்தின் வரைப்படம்

தாதாவு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Tatau; ஆங்கிலம்: Tatau District; சீனம்: 右区) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பிந்துலு பிரிவில் ஒரு மாவட்டமாகும்.[1]

இதன் மொத்த பரப்பளவு 4,945.80 சதுர கி.மீ.; தலைநகரம் தாதாவு நகரம். மாவட்ட அலுவலகம் பிந்துலு நகரத்தில் உள்ளது.

வரலாறு

[தொகு]

19-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், தாதாவு ஆற்றுப் பகுதி, புரூணை சுல்தானகத்தின் (Bruneian Empire) கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. 1861-ஆம் ஆண்டில், அந்தப் பகுதி வெள்ளை இராசா (Raj of Sarawak) ஜேம்சு புரூக்கிற்கு (James Brooke) வழங்கப்பட்டது. பின்னர் சரவாக் இராச்சியத்தின் (Sultanate of Sarawak) ஒரு பகுதியாக இணைக்கப்பட்டது.[2]

1800-ஆம் ஆண்டுகளில், சரவாக் நிலப்பகுதி புரூணை சுல்தானகத்திற்கு சொந்தமான ஒரு காலனியாக இருந்தது. 1946-ஆம் ஆண்டு சரவாக்கைப் பிரித்தானிய அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் வரையில் சரவாக் இராச்சியத்தை வெள்ளை இராசாக்கள் 95 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள்.[3]

ஜேம்சு புரூக் முதன்முதலில் போர்னியோ தீவிற்கு வந்தபோது, சரவாக் நிலப்பகுதி புருணை சுல்தானகத்தின் அடிமை மாநிலமாக இருந்தது. அரசாங்க அமைப்பு முறை புரூணை அரசாங்க நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வந்தது.[4]

இனக்குழுக்கள்

[தொகு]

தாதாவு மாவட்டம் இபான், சீனர், மெலனாவ், மலாய் மற்றும் ஒராங் உலு மக்களின் தாயகமாக விளங்குகிறது. பெரும்பாலான இபான்கள் தாதாவு மாவட்டத்தின் கிராமப் புறங்களில் பரவி உள்ளனர்.

தாதாவு மாவட்டத்தின் தனித்துவமான ஓர் இனக்குழு உள்ளது. சரவாக்கில் வேறு எங்கும் இல்லை. அந்தக் குழுவின் பெயர் தாதாவு இனக்குழு ("Tatau People").

இபான் மக்கள்

[தொகு]

இபான் மக்கள் தாதாவு நகரம் மற்றும் தாதாவு கிராமப்புறப் பகுதிகளில் மிகுதியாக உள்ளனர். மலாய் மக்களில் பலர் தொடக்கத்தில் தாதாவு பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல. இருப்பினும், உள்ளூர் மக்களுடன் குறிப்பாக மெலனாவு மக்களுடன் திருமணம் செய்து கொண்டது; மலாய் மக்களை தாதாவுவில் உள்ள முக்கிய இனங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளது.

சீனர் மக்கள் தாதாவு நகரில் அதிக அளவில் உள்ளனர். சிலர் கோலா தாதாவு (Kuala Tatau) மற்றும் சங்கான் (Sangan) கிராமப் புறங்களில் வசிக்கின்றனர். கென்னியா (Kenyah), காயான் (Kayan), தாதாவு (Tatau), பெனான் (Penan) மற்றும் புனான் (Punan) போன்ற ஒராங் உலு (Orang Ulu) இனக்குழுவைச் சேர்ந்த மக்கள் தாதாவு மாவட்டம் முழுவதும் பரவலாக உள்ளனர்.[5]

கென்னியா மக்கள்

[தொகு]

கென்னியா மக்களில் பெரும்பாலோர் நிங் (Ng), தாவு (Tau), கோலா பாக்கியாவு (Kuala Baggiau) மற்றும் சுங்கை அனாப் (Sungai Anap) போன்ற கிராமப் புறங்களின் உள்பகுதிகளில் வாழ்கின்றனர்.[6]

காட்டு மரங்கள் வெட்டுதல் மற்றும் காட்டு மரப் பொருள்கள் தொழில் காரணமாக வெளிநாட்டுத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதில் பெரும்பாலான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள்.

இனவாரியாக தாதாவு மக்கள் தொகை[7]
மாவட்டம் மொத்த
மக்கள் தொகை
மலாய் இபான் பிடாயூ மெலனாவு இதர
பூமிபுத்திரா
சீனர்கள் இதர
பூமிபுத்திரா
அல்லாதவர்
மற்றவர்
தாதாவு 28,900
(100%)
1,200
(4.2%)
18,200
(63.0%)
200
(0.7%)
1,700
(5.9%)
2,800
(9.7%)
1,500
(5.2%)
100
(0.3%)
3,300
(11.4%)

சான்றுகள்

[தொகு]
  1. "Tatau District, Malaysia". Geonames. பார்க்கப்பட்ட நாள் May 19, 2021.
  2. Hughes-Hallet, H. R. (1940). "A Sketch of the History of Brunei". Journal of the Malayan Branch of the Royal Asiatic Society 18 (2): 38. 
  3. Kaur, Amarjit (February 1995). "The Babbling Brookes: Economic Change in Sarawak 1841–1946". Modern Asian Studies (Cambridge University Press) 29 (1): 65–109, 73. doi:10.1017/s0026749x00012634. பன்னாட்டுத் தர தொடர் எண்:0026-749X. https://archive.org/details/sim_modern-asian-studies_1995-02_29_1/page/65. 
  4. Chew, Daniel (1990). Chinese Pioneers on the Sarawak Frontier 1841–1941. Singapore: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-588915-0.
  5. Sarawak Ethnic Statistic from Sarawak Journal.
  6. Rakan Sarawak - Know Your Sub-District section பரணிடப்பட்டது 2012-09-08 at Archive.today from Rakan Sarawak Edisi April 2002.
  7. Sarawak Ethnic Statistic from Sarawak Journal.

இவற்றையும் பார்க்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாதாவு_மாவட்டம்&oldid=4106943" இலிருந்து மீள்விக்கப்பட்டது