ராஜாங் ஆறு
ராஜாங் ஆறு Rajang River சரவாக் | |
---|---|
ராஜாங் வடிகால் படுகை | |
வேறு பெயர்(கள்) | அன்னப் பறவை ஆறு (சீன சமூகம்) |
அமைவு | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | இரான் மலைகள் |
⁃ அமைவு | மலேசியா |
⁃ ஏற்றம் | 2,074 m (6,804 அடி) |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | தென்சீனக் கடல், மலேசியா |
⁃ உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
நீளம் | 563 km (350 mi) |
வடிநில அளவு | 50,707 km2 (19,578 sq mi)[3] |
ஆழம் | |
⁃ குறைந்தபட்சம் | 2 |
⁃ அதிகபட்சம் | 45 |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | ராஜாங் படுகை, தென்சீனக் கடல் |
⁃ சராசரி | 3,600 m3/s (130,000 cu ft/s)[1]
(Period of data: 2003-2016)4,715 m3/s (166,500 cu ft/s)[2] 124.826 km3/a (3,955.5 m3/s) |
⁃ குறைந்தபட்சம் | 1,000 m3/s (35,000 cu ft/s)[1] |
⁃ அதிகபட்சம் | 6,000 m3/s (210,000 cu ft/s)[1] 25,000 m3/s (880,000 cu ft/s) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | காப்பிட், மலேசியா (Basin size: 34,053 km2 (13,148 sq mi) |
⁃ சராசரி | (Period of data: 1983-1990)2,510 m3/s (89,000 cu ft/s)[3] |
⁃ குறைந்தபட்சம் | 305 m3/s (10,800 cu ft/s)[3] |
⁃ அதிகபட்சம் | 10,799 m3/s (381,400 cu ft/s)[3] |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | சிபு, மலேசியா (Basin size: 43,550.5 km2 (16,814.9 sq mi)[2] |
⁃ சராசரி | (Period of data: 1992-2016)3,355 m3/s (118,500 cu ft/s)[2][4] |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | பெலாகா ஆறு |
⁃ வலது | பாலே ஆறு, பாலூய் ஆறு, காத்திபாஸ் ஆறு |
இராஜாங் ஆறு (மலாய்: Sungai Rejang; ஆங்கிலம்: Rajang River); போர்னியோ தீவிலுள்ள கிழக்கு மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள முக்கியமான ஆறு ஆகும். இந்த ஆறு மலேசியாவிலேயே நீண்ட பெரிய ஆறு என்று பெயர் பெற்று உள்ளது.[5] சரவாக் இரான் மலைகளில் உற்பத்தியாகி தென் சீனக்கடலில் கலக்கிறது.
ராஜாங் ஆற்றின் சில முக்கியமான துணை ஆறுகள்: பாலுய் ஆறு, கத்திபாசு ஆறு, என்கேமா ஆறு, இரான் ஆறு, பிலா ஆறு, பல்லே ஆறு, பாங்கிட் ஆறு மற்றும் கனோவிட் ஆறு.[5]
மலேசியாவின் மிகப் பெரிய பக்குன் நீர் மின் அணைத் திட்டம் (Bakun Hydro Electric Dam Project) ராஜாங் ஆற்றின் கிளை ஆறான பாலுய் ஆற்றில் அமைந்து உள்ளது.
சொற்பிறப்பியல்
[தொகு]சரவாக் மலாய் மொழியில், ராஜாங் ஆற்றுக்கு பாடாங் ராஜாங் என்று பெயர். பல்லே ஆற்றுக்குச் சுங்கை பல்லே என்று பெயர். மலாய் மொழியில் பாடாங் என்றால் தண்டு அல்லது மரம் என்று பொருள். சுங்கை என்றால் ஆறு.[6]
ராஜாங் ஆறு சரவாக் மாநிலத்தில் மிக முக்கியப் பெரிய நீரோடை. அதனால் அதற்குப் பாடாங் என்று பெயர் வைக்கப்பட்டது.[7]
சிபுவில் உள்ள சீனர்கள், ராஜாங் ஆற்றை அன்னப்பறவை ஆறு எனும் செல்லப் பெயரில் அழைக்கிறார்கள். (சீனம்: 鹅江; ஆங்கிலம்: Swan River).[8] ஒரு காலத்தில் சிபு பகுதியில் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது வானத்தில் ஓர் அன்னப் பறவைக் கூட்டம் பறந்து சென்றதாம். அதன் பின்னர் சிபுவின் பஞ்சம் முடிவுக்கு வந்ததாகச் சீனர்களின் புராணக் கதையில் உள்ளது.[9]
ஆற்று வழித்தடங்கள்
[தொகு]ராஜாங் ஆறு மலேசியாவின் மிக நீளமான ஆற்று அமைப்பாகும். 350 மைல்கள் (560 கி.மீ.) நீளம் கொண்டது. மலேசியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான நாட்டு எல்லையை உருவாக்குகின்ற நியுவென்யிஸ் (Nieuwenhuis) மலைகளில், ராஜாங் ஆற்றின் தலைப்பகுதி அமைந்து உள்ளது.[6]
நியுவென்யிஸ் மலைத் தொடரில் ஒவ்வோர் ஆண்டும் 160 அங்குலம் (410 செமீ) மழைப் பொழிவு உள்ளது. ராஜாங் ஆறு வடகிழக்கில் இருந்து தென்மேற்கு நோக்கிப் பாய்கிறது.[6]
விரைவுப் படகுகளின் கடைசி நிறுத்தம் காப்பிட்
[தொகு]ராஜாங் ஆற்றின் வழித்தடத்தில் காப்பிட் என்று ஒரு நகரம் உள்ளது. சிபுவில் இருந்து வரும் விரைவுப் படகுகளின் கடைசி நிறுத்தம் இந்தக் காப்பிட் நகரம்.[10]
இந்த காப்பிட் நகரத்தில் அதிகமாகச் சீனர்கள், இபான் மற்றும் காயான் மக்கள் வாழ்கின்றனர். ராஜாங் ஆற்றில் காப்பிட் நகரம் மிகப்பெரிய நகரமாகும்.
கலப்பு மண்டல நிலங்கள்
[தொகு]ராஜாங் ஆற்றின் துணை ஆறான கத்திபாசு ஆற்றின் முகப்பில் சோங் (Song) எனும் சிறிய நகரம் உள்ளது.
கடலில் இருந்து சுமார் 120 மைல் (190 கிமீ) தொலைவில், கலப்பு மண்டல நிலங்கள் (Mixed Zone Lands) உள்ளன. இந்த நிலங்கள் சீனர்கள் மற்றும் இபான் மக்களுக்கு சொந்தமானவை. நிலங்கள் பல ஏக்கர் அளவுக்குத் துண்டு துண்டுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. விவசாய நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப் படுகின்றன.[6]
தஞ்சோங் மானிஸ் மாவட்டம்
[தொகு]கடலில் இருந்து 105 மைல் (169 கி.மீ.) மைல் தொலைவில் இந்தக் கலப்பு மண்டல நிலங்களுக்கு நடுவில் ஒரு நகரம் உள்ளது. அதன் பெயர் கனோவிட் (Kanowit).
ராஜாங் ஆற்றின் வழித்தடத்தில் அமைந்துள்ள இதர நரங்கள்: சரிக்கே (Sarikei); பிந்தாங்கூர் (Bintangor). இந்த இரண்டு நகரங்களும் சீனக் குடியேற்றங்கள் கொண்டவை. ஆற்றின் முகப்பில் இருந்து 16 மைல் (26 கி.மீ.) தஞ்சோங் மானிசு மாவட்டம் (Tanjung Manis District) உள்ளது.
வரலாறு
[தொகு]19-ஆம் நூற்றாண்டில், சரவாக் நிலப் பகுதிகளைப் புரூணை பேரரசு ஆட்சி செய்த போது, ராஜாங் ஆற்றுப் பகுதியில் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்தது.
ராஜாங் ஆற்றங்கரைகளில் வாழ்ந்த பழங்குடியினர் புரூணையில் இருந்து வந்த மலாய் வணிகர்களுடன் பல வனப் பொருட்களை வியாபாரம் செய்தனர். அந்த நேரத்தில், மெலனாவ் (Melanau), கனோவிட் (Kanowit) மற்றும் ராஜாங் இனக் குழுக்கள் ஆற்றுத் தடத்தின் கீழ்ப் பகுதியில் வாழ்ந்து வந்தனர்.
இனக்குழுக்களின் இடப் பெயர்வுகள்
[தொகு]புக்கெட் (Bhuket), புனன் பா (Punan Bah), லுகாட் (Lugat), சிகான் (Sihan) மற்றும் கெஜமான் (Kejaman) இனக் குழுக்கள் ஆற்றுத் தடத்தின் நடுப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். பெனான் (Penan) மற்றும் செப்பிங் (Seping) இனக் குழுக்கள் ஆற்றுத் தடத்தின் மேல் பகுதியில் வாழ்ந்து வந்தனர். ]] 19-ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, காயான் மற்றும் [[கெனியா இனக் குழுக்கள், இன்றைய இந்தோனேசியா, கலிமந்தான் பகுதியில் இருந்து பாலூய் ஆற்றுக்கு இடம்பெயர்ந்தன.
பழங்குடி மக்களுக்கு இடையிலான சண்டைகள்
[தொகு]இதற்கிடையில், இபான் மக்கள் மேற்கு கலிமந்தானில் இருந்து கீழ் ராஜாங் பள்ளத்தாக்குக்குப் பகுதிக்கு இடம்பெயர்ந்து விவசாயத்தை மேற்கொண்டனர்.
ராஜாங் ஆற்றுப் படுகையில் புதிய பழங்குடியினரின் வருகையால், இனங்களுக்கு இடையிலான சண்டைகள் தோன்றின. சண்டைச் சச்சரவுகளைத் தவிர்ப்பதற்காக சில இனக் குழுவினர் பலிஞ்சியன் மற்றும் டாடாவ் நதிப் பகுதிகளுக்கு இடம் மாறினர்.[11]
வனவிலங்குகள்
[தொகு]பாலூட்டிகள்
[தொகு]2004-இல் ராஜாங் ஆற்றுப் படுகையில் மொத்தம் 30 வகையான பாலூட்டிகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஆற்றின் முகத்துவாரம் மட்டுமே டால்பின்களைக் காணக்கூடிய ஒரே இடமாக உள்ளது.
முற்றிலும் பாதுகாக்கப்பட்ட பாலூட்டிகளில் கிப்பன் குரங்குகள், லாங்கர் குரங்குகள், கருப்பு ராட்சத அணில், தேவாங்கு மற்றும் பெருவிழித் தேவாங்கு ஆகியவை அடங்கும்.
1998-ஆம் ஆண்டு சரவாக் வனவிலங்கு சட்டத்தின் கீழ் புனுகுப் பூனைகள், நீர்நாய்கள், வௌவால்கள் போன்றவை பாதுகாக்கப்பட்ட விலங்குகளாகச் சேர்க்கப்பட்டு உள்ளன. காட்டுப் பன்றிகள் மற்றும் மான்கள் உள்ளூர் மக்களால் அடிக்கடி வேட்டையாடப்படும் விலங்குகளாகும்.[12]
பறவைகள்
[தொகு]2004-இல் ராஜாங் படுகையில் 122 வகையான பறவைகள் பட்டியலிடப் பட்டுள்ளன. ஆற்றின் முகத்துவாரத்தில் 21 இனங்கள்; ஓஸ் மலைகளில் 96 இனங்கள்; சரவாக்கின் உட்புறத்தில் அமைந்துள்ள லஞ்சாக் என்டிமா பகுதியில் 88 இனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.[12]
மீன்கள்
[தொகு]2005-இல் ராஜாங் படுகையில் மொத்தம் 164 மீன் இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[13] எம்புராவ் மற்றும் செமா மீன்கள் உள்ளூர் மக்களிடையே பிரபலமான மீன்களாகக் கருதப் படுகின்றன.[14]
ராஜாங் ஆற்றின் துணை ஆறான பல்லே ஆறு மற்றும் பக்குன் அணைக்கு அருகிலும் எம்புராவ் மீன்களின் இனப்பெருக்கம் இன்னும் உள்ளன.[15]
காட்சியகம்
[தொகு]-
பிண்டாங்கூர் துறைமுகத்தில் ராஜாங் ஆற்றைக் கடக்கும் படகு.
-
காப்பிட் துறை முனையத்தில் துரிதப் படகுகள் மற்றும் நீண்ட படகுகள்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Sien Aun, Edwin Sia (2019). Microbial Ecology and Nutrient Dynamics of the Rajang River. Australia: Faculty of Engineering, Computing and Science - Swinburne University of Technology. https://researchbank.swinburne.edu.au/file/6e6a61f5-0d9f-405c-9631-77aeedfab016/1/edwin_sia_thesis.pdf. பார்த்த நாள்: 7 March 2022.
- ↑ 2.0 2.1 2.2 Huang, T. H.; Chen, C. T. A.; Tseng, H. C.; Lou, J. Y.; Wang, S. L.; Yang, L.; Kandasamy, S.; Gao, X. et al. (May 2017). "Riverine carbon fluxes to the South China Sea: RIVERINE CARBON FLUXES TO THE SCS" (in en). Journal of Geophysical Research: Biogeosciences 122 (5): 1239–1259. doi:10.1002/2016JG003701. http://doi.wiley.com/10.1002/2016JG003701.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Rajang Batang (PDF). Hydrology and Water Resources Research Laboratory, Kyoto University. 1991. Archived from the original (PDF) on 16 May 2021. பார்க்கப்பட்ட நாள் 29 September 2021.
- ↑ Müller-Dum, D; Warneke, T; Rixen, T (2018). "Impact of peatlands on carbon dioxide (CO2) emissions from the Rajang River and Estuary, Malaysia". Biogeosciences (European Geosciences Union). https://bg.copernicus.org/preprints/bg-2018-391/bg-2018-391-manuscript-version3.pdf. பார்த்த நாள்: 7 March 2022.
- ↑ 5.0 5.1 Rajang River Encyclopædia Britannica. URL assessed on 2 September 2012
- ↑ 6.0 6.1 6.2 6.3 Richard C, Filder (2010). Kanowit: An overseas Chinese community in Borneo - Chapter 1: Location and setting - The river (in ஆங்கிலம்) (First ed.). Sibu, Sarawak: Sarawak Chinese Cultural Association. p. xi. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-983-9360-46-2.
- ↑ "Sarawak place names". Rough Guides. Archived from the original on 9 October 2018. பார்க்கப்பட்ட நாள் 9 October 2018.
- ↑ "Sibu Mascot". Sibu Municipal Council official website. பார்க்கப்பட்ட நாள் 14 February 2015.
- ↑ Chris Rowthorn; Muhammad Cohen; China Williams (1 June 2008). Borneo. Lonely Planet. pp. 185–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-74059-105-8. பார்க்கப்பட்ட நாள் 18 February 2011.
- ↑ Hon Kah, Fong (1996). A History Of The Development of Rajang Basin in Sarawak. Dewan Suarah Sibu, Sarawak, Malaysia: The cultural heritage committee. p. 489. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9839920715. பார்க்கப்பட்ட நாள் 11 August 2020.
- ↑ Yumi, Kato (8 December 2016). "Resilience and Flexibility: History of Hunter-Gatherers’ Relationships with their Neighbors in Borneo". Senri Ethnological Studies 94: 177–200. https://minpaku.repo.nii.ac.jp/index.php?action=pages_view_main&active_action=repository_action_common_download&item_id=7152&item_no=1&attribute_id=18&file_no=1&page_id=13&block_id=21. பார்த்த நாள்: 23 June 2018.
- ↑ 12.0 12.1 Tuen, A.A (2004). A Faunal Study of Rajang River Basin. Institute of Biodiversity and Environmental Conservation (Universiti Malaysia Sarawak). http://www.sarawakforestry.com/pdf/hj7-wetland8.pdf. பார்த்த நாள்: 5 June 2014.
- ↑ Parenti, L. R.; Lim, K.P. (2005). "Fishes of the Rajang Basin, Sarawak, Malaysia". The Raffles Bulletin of Zoology 13: 175–208. http://si-pddr.si.edu/jspui/bitstream/10088/10948/1/vz_Parenti_Lim__2005.pdf. பார்த்த நாள்: 2 September 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Stephen, E. S.. "Breeding The 'King' Of Sarawak Rivers". Bernama இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402154336/http://tourism.bernama.com/news.php?id=369704. பார்த்த நாள்: 2 September 2012.
- ↑ Chua, Endy (4 January 2011). "The lure of the empurau". The Star (Malaysia). http://thestar.com.my/news/story.asp?file=/2011/1/4/sarawak/7727879&sec=sarawak. பார்த்த நாள்: 2 September 2012.