சிபுரான் மாவட்டம்
சிபுரான் மாவட்டம் | |
---|---|
Siburan District | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 1°15′42.68″N 110°20′17.62″E / 1.2618556°N 110.3382278°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | செரியான் பிரிவு |
மாவட்டம் | சிபுரான் மாவட்டம் |
நிர்வாக மையம் | சிபுரான் நகரம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 359.7 km2 (138.9 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 72,148 |
• அடர்த்தி | 200/km2 (520/sq mi) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
சிபுரான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Siburan; ஆங்கிலம்: Siburan District) என்பது மலேசியா, சரவாக், செரியான் பிரிவில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்தின் நிர்வாக மையமாக சிபுரான் நகரம் (Siburan) விளங்குகிறது.[1]
1980-ஆம் ஆண்டுகளில், சிபுரான் மாவட்டம், கூச்சிங் பிரிவில் ஒரு துணை மாவட்டமாக இருந்தது. 2021-ஆம் ஆண்டில் செரியான் பிரிவில் முழு மாவட்டமாக மாற்றம் கண்டது. இந்த மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் பிடாயூ (Bidayuh) இனத்தவர்கள் ஆகும்.[2]
பொது
[தொகு]சிபுரான் மாவட்டம் ஏறக்குறைய 359.7 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் நிர்வாக நகரம் சிபுரான் ஆகும். 2015-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி, சிபுரான் மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கை 72,148 பேர்.
சிபுரான் மாவட்டத்தின் தலைநகரமான சிபுரான் நகரம், சரவாக் மாநிலத்தின் தலைநகரமான கூச்சிங் மாநகரத்திற்கு தெற்கே, ஏறக்குறைய 30 கி.மீ. (19 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Abang Johari: Siburan elevated to district, Balai Ringin sub-district". The Borneo Post. 27 November 2021 இம் மூலத்தில் இருந்து 20 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220620061450/https://www.theborneopost.com/2021/11/27/abang-johari-siburan-elevated-to-district-balai-ringin-sub-district/.
- ↑ "Laman Web Pentadbiran Bahagian Serian". serian.sarawak.gov.my. Archived from the original on 1 February 2023. பார்க்கப்பட்ட நாள் 1 February 2023.
மேலும் காண்க
[தொகு]- பொதுவகத்தில் Siburan தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.