உள்ளடக்கத்துக்குச் செல்

காயான் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(காயான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
காயான் மக்கள்
Kayan People
Kaum Kayan
ஒரு காயான் பெண்மணி, திருமணத்திற்கு முன்னர் பச்சை குத்திக் கொள்வது வழக்கம். (c. 1896-98).
மொத்த மக்கள்தொகை
200,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
போர்னியோ:
 மலேசியா
 சரவாக்
30,000 (2010)[1]
 இந்தோனேசியா கிழக்கு கலிமந்தான் வடக்கு கலிமந்தான் மேற்கு கலிமந்தான்கணக்கெடுப்பு இல்லை
மொழி(கள்)
காயான் மூரிக் மொழிகள் காயான் மொழி இந்தோனேசிய மொழி மலேசிய மொழி (சரவாக் மலாய்மொழி)
சமயங்கள்
கிறிஸ்தவம் (பெரும்பான்மை), புங்கான் (நாட்டுப்புற மதம்)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பகாவ் மக்கள், கென்னியா மக்கள்

காயான் அல்லது காயான் மக்கள் (மலாய்: Kaum Kayan; ஆங்கிலம்: Kayan People) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில் வாழும் பழங்குடிகள் மக்களாகும். காயான் மக்கள் தங்களின் அண்டைய பகுதி மக்களான கென்னியா பழங்குடியினரை (Kenyah Tribe) போன்று, ஒரே இனக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

காயான் மக்கள்; அப்போ காயான் மக்கள் (Apo Kayan People) குழுவின் கீழ், மற்றொரு குழு மக்களான பகாவ் இன மக்கள் (Bahau People) எனும் இனக் குழுவினருடன் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளனர்.

பொது

[தொகு]
சரவாக்கில் காயான் மக்களின் தலைவர்களுடன் கலந்துரையாடும் ஓர் ஐரோப்பியர் (c1900 - 1940)
பிரம்பைப் பயன்படுத்தி நெருப்பு உண்டாக்கும் ஒரு காயான்

காயான் மக்கள், தயாக்கு மக்களின் (Dayak People) ஒரு பகுதியாக வகைப்படுத்தப் படுகிறார்கள். அத்துடன் இந்த போர்னியோ காயான் மக்கள், மியான்மர் நாட்டின் காயான் மக்களிடம் (Kayan People of Myanmar) இருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் ஆகும்.

காயான் இனக்குழுவின் மக்கள் தொகை சுமார் 200,000 ஆக இருக்கலாம்.[2] இவர்கள் ஒராங் உலு (Orang Ulu) என்று அழைக்கப்படும் ஒரு பெரிய குழுவின் ஒரு பகுதியாக உள்ளனர்.[2]

மனிதர் தலை வேட்டையாடுபவர்கள்

[தொகு]

மற்ற சில தயாக்கு மக்கள் இனத்தவரைப் போலவே, காயான் மக்கள் திறமையான போர்வீரர்கள்; முன்னர் காலத்தில் இவர்கள் மனிதர் தலை வேட்டையாடுபவர்கள் (Headhunters); மலைசார் நெல் சாகுபடியில் (Upland Rice Cultivation) திறமையானவர்கள் என அறியப் படுகிறார்கள்.

மேலும் ஆண் பெண் இரு பாலரும் அதிகமாய்ப் பச்சை குத்திக் கொள்பவர்கள் (Extensive Tattoos); மற்றும் பெரிய அளவிலான காது வளையங்களை அணிந்து கொள்பவர்கள் ஆகும்.[3]

வரலாறு

[தொகு]

காயான் மக்கள் போர்னியோவின் வடக்கு கலிமந்தான் மாநிலத்தில் உள்ள காயான் ஆற்றங்கரைகளில் (Kayan River) இருந்து தோன்றி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இவர்கள் மேல் காயான் ஆறு; மத்திய கபுவாசு ஆறு (Kapuas River) மற்றும் மகாகம் ஆற்றுப் பகுதிகளில் (Mahakam River) இன்றும் வாழ்கின்றனர்.[4]

வரலாற்றுக் காலங்களில் இவர்கள் சரவாக் மாநிலத்தின் தெற்குப் பகுதி வரை விரிவு அடைந்து இருக்கலாம் என தெரிகிறது. அதே நேரத்தில் சரவாக் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் விரிவு அடைந்த காலத்தில் [இபான்]] மக்களுடன் இவர்கள் சில மோதல்களில் ஈடுபட்டு உள்ளனர்.[4]

நிரந்தரக் குடியேற்றம்

[தொகு]

அதன் பின்னர் இவர்கள் சரவாக்கில் மத்திய பாராம் ஆறு (Baram River); பிந்துலு ஆறு (Bintulu River); மற்றும் ராஜாங் ஆறு (Rajang River); போன்ற பெரும் ஆறுகளின் கரைகளில் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர்[4]

1863-ஆம் ஆண்டில் மேற்கு கலிமந்தான் (West Kalimantan) பகுதியில் இருந்து, இபான் மக்கள் சரிபாசு ஆறு மற்றும் இரசாங் ஆற்றின் மேல்பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர். அந்த பகுதிகளில் வாழ்ந்த காயான் மக்களைத் தாக்கத் தொடங்கினர்.

இனவாரியான போர்கள்

[தொகு]

மேற்கு கலிமந்தான் பகுதியில் உள்ள மேற்கு கூத்தாய் பிராந்தியத்தின் (West Kutai Regency) மக்கள்தொகையில் 1.4% கொண்ட காயான் மக்களும்; இதர பல பழங்குடியினரும் இடம்பெயர்வதற்கு இனவாரியான போர்களும் மற்றும் தலைமறைவு தாக்குதல்களும் காரணமாக அமைந்தன.[5]

வரலாற்று காலங்களில் கிழக்கு போர்னியோவில் குறிப்பிடத்தக்க அளவிற்கு இடப்பெயர்வுகள் நிகழ்ந்து உள்ளன. அதன் பின்னர் காயான் மக்களில் பெரும்பாலோர் இசுலாத்திற்கு மாறினர்.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. William W. Bevis (1995). Borneo log: the struggle for Sarawak's forests. University of Washington Press. p. 152. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-2959-7416-8.
  2. Kayan in the Encyclopædia Britannica பரணிடப்பட்டது 14 சூன் 2006 at the வந்தவழி இயந்திரம், retrieved on 12 August 2006, from Encyclopædia Britannica Premium Service.
  3. Monthly Packet, Volume 12. J. and C. Mozley. 1857. p. 370.
  4. 4.0 4.1 4.2 Richard Ibuh (2014). The Kayans. Partridge Publishing Singapore. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-14-828-2683-8.
  5. Michaela Haug (2010). Poverty and Decentralisation in East Kalimantan. Centaurus Verlag & Media KG. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783825507701.
  6. Anthony Milner (2011). The Malays. John Wiley & Sons. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-14-443-9166-4.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=காயான்_மக்கள்&oldid=4086445" இலிருந்து மீள்விக்கப்பட்டது