மேற்கு கலிமந்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மேற்கு கலிமந்தான் மாகாணம்
Provinsi Kalimantan Barat
西加里曼丹省
كليمنتن بارت
மாகாணம்
நிலநடுக்கோடு நினைவுப்பீடம், பொன்டியானக்
நிலநடுக்கோடு நினைவுப்பீடம், பொன்டியானக்
மேற்கு கலிமந்தான் மாகாணம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் மேற்கு கலிமந்தான் மாகாணம்
சின்னம்
குறிக்கோளுரை: அக்‌ஷயா (சமசுகிருதம்)
(அழிவில்லா)
இந்தோனேசியாவில் மேற்கு கலிமந்தான் மாகாணத்தின் அமைவிடம்
இந்தோனேசியாவில் மேற்கு கலிமந்தான் மாகாணத்தின் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
தலைநகரம்பொன்டியானக்
அரசு
 • ஆளுநர்கார்னெலிசு (பிடிஐ-பி & பிடி)
 • துணை ஆளுநர்கிறிஸ்டியான்டி சஞ்சயா
பரப்பளவு
 • மொத்தம்1,47,307 km2 (56,876 sq mi)
மக்கள்தொகை (2014)[1]
 • மொத்தம்45,46,439
 • அடர்த்தி31/km2 (80/sq mi)
மக்கட்தொகை
 • இனக் குழுதயாக் (33.75%), மலாய் (29.75%), இந்தோனேசியச் சீனர்கள் (28.01%), சாவக மக்கள் (5.41%), மதுராவினர் (3.51%), பூகிஸ் (2.29%), சுந்தா மக்கள் (1.21%), மலாய் பஞ்சாரியர்கள் (0.66%), பதக் மக்கள் (0.26%), பிறர் (1.85%)[2]
 • மொழிஇந்தோனேசியம் (அலுவல்முறையாக), மலாய், தயாக், சீனம் (அக்கா மற்றும் தியோச்சூ
நேர வலயம்இந்தோனேசிய நேரம் (ஒசநே+7)
இணையதளம்www.kalbarprov.go.id

மேற்கு கலிமந்தான் (West Kalimantan, இந்தோனேசியம்: Kalimantan Barat) அல்லது (சீனம்: 西加里曼丹省) இந்தோனேசியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். போர்னியோ தீவின் இந்தோனேசியப் பகுதியான கலிமந்தானில் அமைந்துள்ள ஓர் மாகாணமாகும். இதன் தலைநகரம் பொன்டியானக் ஆகும்.

147,307 கிமீ² பரப்பளவுள்ள இந்த மாகாணத்தின் மக்கள்தொகை 2010 கணக்கெடுப்பின்படி 4,395,983 ஆகும்.[1] இங்கு வாழும் இனக்குழுக்களில் தயாக், மலாய், இந்தோனேசியச் சீனர்கள், சாவக மக்கள், பூகிஸ், மதுரா இனத்தவர் அடங்குவர். சனவரி 2014 ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை 4,546,439.

மேற்கு கலிமந்தானின் எல்லைகள் கப்புயாசு ஆற்றுப் படுகையைச் சுற்றியுள்ள மலைத்தொடர்களை ஒட்டி அமைந்துள்ளன. தவிரவும் மலேசியாவின் சரவாக்குடன் எல்லை கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

மேற்கு கலிமந்தானின் வரலாறு 17ஆவது நூற்றாண்டில் துவங்குகின்றது. 17ஆம் நூற்றாண்டிற்கு முன்னதாக இந்த மாகாணத்தில் தயாக் இனமக்கள் மட்டுமே வசித்து வந்தனர். இங்கு குடியேறிய மலாய் மக்கள் தங்கள் சுல்தானகங்களை நிறுவத் தொடங்கினர். இங்கு உள்ளக மலாய் சுல்தானகங்களை முறியடித்து சீன சுரங்கப் பணியாளர்கள் நிறுவிய இலஃபாங் குடியரசினால் (蘭芳共和國: Republik Lanfang) சீனர்களின் மக்கட்தொகை கூடியது. மேற்கு கலிமந்தானில் இந்த சீனக் குடியரசை டச்சுக்காரர்கள் 1884இல் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றினர்.

மேற்கு கலிமந்தானில் 1942 முதல் 1945 வரை சப்பானியர்கள் கைப்பற்றியிருந்தனர். இவர்களிடமிருந்து 1945இல் இந்தோனேசியா விடுதலை அறிவித்தது. சப்பானியர் கையகப்படுத்தியிருந்த காலத்தில் 21,000க்கும் கூடிய பொன்டியானக் மக்கள் (சுல்தான்கள், ஆடவர்,பெண்கள்,சிறுவர்கள் உட்பட) சப்பானியத் துருப்புக்களால் கடத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு, இனப்படுகொலை செய்யப்பட்டனர். இவை பொன்டியானக் நிகழ்வுகள் என அறியப்படுகின்றன. கலிமந்தானின் அனைத்து சுல்தான்களும் கொல்லப்பட்டனர்; மலாய் உயர்குடியினர் சூறையாடப்பட்டனர்.

இந்த இனப்படுகொலை ஏப்ரல் 23, 1943 முதல் சூன் 28, 1944 வரை நடைபெற்றது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொன்டியானக்கிலிருந்து 88 கிமீ தொலைவிலுள்ள மண்டோர் என்னுமிடத்தில் பல பெரிய கிணறுகளில் புதைக்கப்பட்டனர். போருக்குப் பின்னர் இங்கிருந்த நேச அணி படைவீரர்கள் பல்லாயிரக்கணக்கான எலும்புகளை கண்டெடுத்தனர்; இந்த இனப்படுகொலைக்கு 60 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பல இரகசியக் கல்லறைகள் கண்டறியப்பட்டன.

போருக்குப் பின்னர் சப்பானியப் படைத்தலைவர்களை நேச அணி கைது செய்து பன்னாட்டு படைத்துறை நீதிமன்றத்தில் நிறுத்தியது. இந்த விசாரணைகளின்போது கொலையுண்டவர்கள் சப்பானியருக்கு எதிராக எந்த புரட்சியும் திட்டமிடவில்லை என்பதும் பணி உயர்விற்காக பொன்டியானக்கிலிருந்த சப்பானியத் தலைவர்கள் கற்பனையில் உதித்த திட்டமென்பதும் வெளிவந்தது.

இந்தத் துன்பியல் நிகழ்வை நினைவுறுத்தும் வண்ணம் மகம் யுவாங் மண்டோர் என்ற நினைவுச்சின்னம் நிறுவப்பட்டது.

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1971 20,19,936 —    
1980 24,86,068 +23.1%
1990 32,29,153 +29.9%
1995 36,35,730 +12.6%
2000 40,34,178 +11.0%
2010 43,95,983 +9.0%
மூலம்: பதான் புசத் இசுடாடிஸ்டிக்சு 2010

1960களின் மத்தியில் சுகர்ணோ தலைமையில் இந்தோனேசியாவிற்கும் மலேசியாவிற்கும் நடந்த சண்டையின் பெரும்பகுதி மேற்கு கலிமந்தானில் நடந்தது. 1965இல் சுகர்ணோவிடமிருந்து சுகார்த்தோ பதவியைப் பறித்துக் கொண்டபோது இந்தச் சண்டை முடிவுக்கு வந்தது. இருப்பினும் சுகார்த்தோவின் படைத்துறையினருக்கும் தடை செய்யப்பட்ட இந்தோனேசிய பொதுவுடமைக் கட்சி ஆதரவளித்த முன்னாள் போராளிகளுக்கும் இடையே உள்ளூர் சண்டை அடுத்த பத்து ஆண்டுகளுக்குத் தொடர்ந்தது.

1930களில் டச்சு குடியேற்றவாதிகள் குடிப்பெயர்விற்கான திட்டமொன்றை துவக்கினர்; இதன்படி சாவகம் போன்ற மக்களடர்த்தி மிக்க தீவுகளிலிருந்து மக்களடர்த்தி குறைந்திருந்த கலிமந்தான், இரியன் ஜெயா போன்ற தீவுகளுக்கு இடம் பெயரச் செய்தனர். 1960களில் இந்தோனேசிய அரசு புல்லின மரநெய் வேளாண்மைக்காக மதுரா இனத்தினர் காடுகளை அழிக்க அனுமதி வழங்கினர். இதற்கு உள்ளூர் தயாக் பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்; அவர்களது மரபார்ந்த வாழ்க்கைக்கு இது புறம்பாக இருந்தது. இதனால் இவ்விரு இனங்களுக்குமிடையே வன்முறைச் சண்டைகள் இருந்து வந்தன; 1996, 1999இல் சம்பாசு கலகம், 2001இல் சம்பிட் கலகம் என தொடர்ந்த வன்முறையில் பல்லாயிரக்கணக்கானவர் உயிரிழந்தனர். [3][4][5]

மேற்சான்றுகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

  • J. Braithwaite, V. Braithwaite, M. Cookson & L. Dunn, Anomie and Violence: Non-truth and Reconciliation in Indonesian Peacebuilding (ANU E-Press: 2010) [1]
  • Davidson, Jamie S. and Douglas Kammen (2002). Indonesia's unknown war and the lineages of violence in West Kalimantan. Indonesia 73:53.
  • Yuan, Bing Ling (1999). Chinese Democracies - A Study of the Kongsis of West Borneo (1776–1884).

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_கலிமந்தான்&oldid=2239858" இருந்து மீள்விக்கப்பட்டது