மத்திய சுலாவெசி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மத்திய சுலாவெசி
Central Sulawesi

Sulawesi Tengah
மாகாணம்
பலு நகருக்கு அருகில் மலைகள் , நெல்வயல்கள் மற்றும் நிலத்தூண் வீடுகள்
பலு நகருக்கு அருகில் மலைகள் , நெல்வயல்கள் மற்றும் நிலத்தூண் வீடுகள்
மத்திய சுலாவெசி Central Sulawesi-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் மத்திய சுலாவெசி Central Sulawesi
சின்னம்
இந்தோனேசியாவில் மத்திய சுலாவெசியின் அமைவிடம்
இந்தோனேசியாவில் மத்திய சுலாவெசியின் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
தலைநகரம்பலு
பரப்பளவு
 • மொத்தம்61,841.29 km2 (23,877.06 sq mi)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்28,39,290
 • அடர்த்தி46/km2 (120/sq mi)
நேர வலயம்WITA (UTC+8)
வாகனப் பதிவுDN
HDIStraight Line Steady.svg 0.664 (Medium)
HDI rank25th (2014)

மத்திய சுலாவெசி (Central Sulawesi) சுலாவெசித் தீவின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் ஒரு மாகாணம் ஆகும். பலு நகரம் மத்திய சுலாவெசியின் தலைநகரமாகும். 2010 ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மக்கள் தொகை 26,33,420 நபர்களாகும். சமீபத்திய 2014 ஆம் ஆண்டு சனவரி நிலவரப்படி இம்மக்கள்தொகை அளவு 28,39,290 நபர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய சுலாவெசி 61,841.29 கிலோமீட்டர் 2 அல்லது 23,877 சதுரமைல்கள் பரப்பளவில் நிறுவப்பட்டுள்ளது[1].வடக்கில் கோரோண்டலோட்டோ மாகாணம், தெற்கில் மேற்கு சுலாவெசி, தெற்கு சுலாவெசி மற்றும் தென்கிழக்கு சுலாவெசி மாகாணங்களும், கிழக்கில் மலுக்குத் தீவுகளும் மேற்கில் மகாசார் நீரிணைப்பும் எல்லைகளாக உள்ளன.

வரலாறு[தொகு]

மத்திய சுலாவெசியில் பெருங்கற்கால கற்கள்

உலோர் இலிந்து தேசிய பூங்கா பகுதியில் 400-க்கும் மேற்பட்ட கிரானைட் பெருங்கற்கள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 30 கற்கள் மனித வடிவில் காணப்படுகின்றன. இக்கற்கள் சில சென்டிமீட்டர்கள் முதல் 4.5 மீட்டர் வரை அதாவது 15 அடிவரை அளவில் வேறுபடுகின்றன. இப்பெருங்கற்களின் இத்தகைய தோற்றத்திற்கான உண்மையான காரணம் அறியப்படவில்லை[2]. மற்ற பெருங்கற்கள் பெரிய பானை வடிவிலும் கற்தட்டுகள் வடிவிலும் காணப்படுகின்றன. பல்வேறு தொல்பொருள் ஆய்வுகள் இக்குடைவுகளின் காலம் கி.பி. 1300 முதல் 3000 கி.மு. இடையே இருக்கலாம் எனக் குறிக்கின்றன[3]

மத்திய சுலாவெசியில் ஏராளமான குகைகள் காணப்படுகின்றன. அவற்றிலுள்ள ஏழு குகைகளில் பழங்காலத்து ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இந்தோனேசியா மற்றும் ஆத்திரேலியக் குழுக்கள் ஒன்றிணைந்து 2011 இல் மேற்கொண்ட ஆய்வுகளில், இந்த ஓவியங்கள் குறைந்தது 40000 ஆண்டுகளுக்கு முன்னர் தீட்டப்பட்ட ஓவியங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. எசுப்பானியாவின் மாண்ட் கசுட்டிலோவில் உள்ள குகைகளில் காணப்பட்ட ஓவியங்களும் இதே வயதுடையவை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். ஐரோப்பாவில் காணப்படும் மிகப்பழமையான குகை ஓவியங்கள் மாண்ட் கசுட்டிலோ ஓவியங்களாகும்[4]

சுலாவெசித் தீவின் தெற்குப் பகுதியில் இருந்த சக்தி வாய்ந்த பேரரசின் கோவ்வா இசுலாமியச் சூளுரைக்குப் பின்னர் 17 ஆம் நூற்றாண்டில் இசுலாம் இந்த மண்டலத்திற்கு வந்து சேர்ந்தது. டச்சு காலனிய ஆட்சி 18 ஆம் நூற்றாண்டில் இங்கு நிறுவப்பட்டது மற்றும் கத்தோலிக்கக் கொள்கையை மறுக்கும் சமயப் பரப்பாளர்கள் தொகை பெருகத் தொடங்கியது. அவர்களில் கால்பகுதியினர் தற்சமயம் திருச்சபையிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஆகும். இந்த எண்ணிக்கை இந்தோனேசிய தீவுக்கூட்டத்தில் நிகழ்ந்த ஒரு அதிகபட்ச சதவீத அளவாகும். இரண்டாம் உலகப் போரில் சப்பானியர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பின்னர், வடக்கு சுலாவெசி மாகாணத்தைச் சேர்ந்த இப்பிராந்தியம் பிரிக்கப்பட்டு 1964 இல் மத்திய சுலாவெசி புதியதாக உருவாக்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டுக்கும் 2001 ஆம் ஆண்டுக்கும் இடைக்காலப் பகுதியில் இசுலாமியர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் இடையே மத வன்முறை மோதல் ஏற்பட்டு 1,000 நபர்களுக்கும் மேலாக கொல்லப்பட்டனர்[5] . இதனால் மாலினோ II ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. எனினும், கிறித்தவர் ஆதிக்கம் நிலவிய மத்திய சுலாவெசிப் பகுதியில் 2006 இல் மீண்டும் கலவரம் வெடித்தது. 21 ஆம் நூற்றாண்டின் முதற்பத்தாண்டுகளில் ஏற்பட்ட வன்முறையில் ஈடுபட்ட கிறித்தவ தீவிரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என்பது இவ்வன்முறைக்கான காரணமாகும்[6]. இவ்வன்முறை இசுலாமியர்களை நோக்கி நிகழ்த்தப்படவில்லை மாறாக அரசாங்க அதிகாரிகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்ட வன்முறையாகத் தோன்றியது[6].

நிர்வாகப் பிரிவுகள்[தொகு]

மத்திய சுலாவெசி பனிரெண்டு நிர்வாகப் பிரிவுகளாகவும் ஒரு நகரமாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.

மக்கள் தொகையியல்[தொகு]

2010 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இம்மாகாணத்தின் மக்கள் தொகை 26,33,420 நபர்களாகும். இவர்களில் 13,49,225 பேர் ஆண்கள், 12,84,195 பேர் பெண்கள் ஆவர். ஒவ்வோர் ஆண்டும் மக்கள் தொகை 1.94% அதிகரித்தது[7]. மதம் தொடர்பான சர்ச்சைகள் இப்பகுதியில் இருந்தன. மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள் இசுலாமியர்கள்[8].

மக்கள் தொகை[தொகு]

1990 ஆம் ஆண்டிற்கும் 2000 ஆம் ஆண்டிற்கும் இடையில் ஏற்பட்ட சராசரி மக்கள் தொகைப் பெருக்கம் 2.57 சதவீதம். 2000 ஆம் ஆண்டிற்கும் 2010 ஆம் ஆண்டிற்கும் இடையில் ஏற்பட்ட சராசரி மக்கள் தொகைப் பெருக்கம் 1.96% ஆகும்.

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1971 9,13,662 —    
1980 12,89,635 +41.2%
1990 17,11,327 +32.7%
1995 19,38,071 +13.2%
2000 22,18,435 +14.5%
2010 26,35,009 +18.8%
2014 28,39,290 +7.8%
ஆதாரம்: இந்தோனேசியாவின் 2010 மற்றும் 2014 புள்ளி விவரங்கள்

பொருளாதாரம்[தொகு]

கடற்பாசி வளர்ப்பு[தொகு]

இந்தோனேசியாவில் மத்திய சுலாவெசியின் மோரோவாலி நிர்வாகப் பிரிவு , கடற்பாசி உற்பத்தியில் மிகப்பெரிய உற்பத்தியாளர் என்று கருதப்படுகிறது. கிளேசிரியா வகைப் பாசிகள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டன[9]. 2010 ஆம் ஆண்டில் மத்திய சுலாவெசியில் மட்டும் 800000 டன் கடற்பாசிகளை உற்பத்தி செய்தது[10]

சுற்றுலா[தொகு]

தேசியப் பூங்கா[தொகு]

உலோர் இலிந்து தேசியப் பூங்கா பாலு நகரின் தெற்கேயுள்ள மேட்டு நிலங்களில் அமைந்துள்ளது.

வானத்தில் மிதக்கும் போட்டி[தொகு]

சூன் 2011 இல் இந்தோனேசிய வானத்தில் மிதக்கும் போட்டி நடைபெற்றது. போட்டியில் சவூதி அரேபியா, மலேசியா, உருமேனியா, செக்குடியரசு, பல்கேரியா, பிரான்சு, உருசியா, பிலிப்பைன்சு முதலான 8 நாடுகள் பங்கேற்றன[11] .

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மத்திய_சுலாவெசி&oldid=2666917" இருந்து மீள்விக்கப்பட்டது