ரியாவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ரியாவு (ஆங்கிலம்: Riau) என்பது இந்தோனேசியாவில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். மலாக்கா நீரிணையின் தெற்கே, சுமாத்திரா தீவின் நடுக் கிழக்குக் கரையோரத்தில் அமைந்து உள்ள ஒரு நிலப்பகுதி. 2004 ஆம் ஆண்டு வரை ரியாவு தீவுக் கூட்டம் இதன் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர், 2004 யூலை மாதம் இது தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டது.

ரியாவு மாநிலத்தின் தலைநகரம் பெக்கான் பாரு.[1] டூமாய், செலாட் பாஞ்சாங், பாகான்சி அப்பிஅப்பி (Bagansiapiapi), பாங்கினாங், ரெங்காட், சியாக் ஸ்ரீ இந்திராபுரா போன்றவை இதர நகரங்கள்.

இந்தோனேசியாவில் வளமிக்க ஒரு மாகாணமாகவும் துரிதமாக வளர்ச்சி பெற்று வரும் இடமாகவும் ரியாவு கருதப்படுகிறது.[2] இது இயற்கை வளங்கள் நிரம்பிய மாநிலம். குறிப்பாக, பெற்றோல், இயற்கை வாயு, இறப்பர், எண்ணெய்ப் பனை போன்றவை அதிகமாகக் கிடைக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரியாவு&oldid=3635216" இலிருந்து மீள்விக்கப்பட்டது