நடுச் சாவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நடுச் சாவகம்
Jawa Tengah
ꦗꦮꦠꦼꦔꦃ
மாகாணம்
Borobudur-Nothwest-view.jpg
Merbabu&Merapi.JPG Pura Mangkunagaran01(2 Maret 2007).jpg
Fishermen on Rawa Pening.jpg Dieng Plateau Java140.jpg
Ujung Gelam Beach Karimun Jawa 3.JPG Serayu River, Central Java.jpg
கடிகாரச்சுற்று, மேலிருந்து இடமாக : போரோபுதூர், மங்குநெகாரா அரண்மனை , டையெங் பீடபூமியிலுள்ள கிராமம் , செராய்யூ ஆறு, கரிமுஞ்சாவா, ராவா பெனிங் ஏரியில் மீனவர், மெராப்பி சிகரத்தில் நெற்பயிர் பின்னணியில் மெர்பாபு
அலுவல் சின்னம் நடுச் சாவகம்
சின்னம்
குறிக்கோளுரை: ꦥꦿꦱꦺꦠꦾꦈꦭꦃꦱꦏ꧀ꦠꦶꦨꦏ꧀ꦠꦶꦥꦿꦗ (சாவகம்)
(meaning: A vow of devotion with all might to the country)
Location of Central Java in Indonesia
Location of Central Java in Indonesia
ஆள்கூறுகள்: 7°30′S 110°00′E / 7.500°S 110.000°E / -7.500; 110.000ஆள்கூறுகள்: 7°30′S 110°00′E / 7.500°S 110.000°E / -7.500; 110.000
நாடு இந்தோனேசியா
Establishedஆகத்து 15, 1950
தலைநகரம்Seal of the City of Semarang.svg செமராங்
அரசு
 • நிர்வாகம்நடுச் சாவக மாகாண அரசாங்கம்
 • ஆளுநர்கஞ்சர் பிரனவோ
 • துணை ஆளுனர்ஹெரு சுட்ஜாமோக்கோ
பரப்பளவு
 • மொத்தம்32,800.69 km2 (12,664.42 sq mi)
உயர் புள்ளி3,428 m (11,247 ft)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம்3,37,53,023
 • தரவரிசை3rd
 • அடர்த்தி1,000/km2 (2,700/sq mi)
மக்கள் தொகையியல்
 • இனக்குழுக்கள்சாவகர் (98%), சுண்டா இனத்தவர் (1%), சீனர் (1%)
 • மதம்இசுலாம் 95.74%, கிறித்தவம் 4.95%, இந்துக்கள் 0.05%, பௌத்தம் 0.22%, கொன்பூசியம் 0.03%, கெச்சாவென்
 • மொழிகள்இந்தோனேசிய மொழி (அலுவல்)
சாவகம் (மொழி) (பூர்வீகம்)
பஞுமாசியம் (பிராந்தியம்)
கெடு (பிராந்தியம்)
சுண்டா மொழி (பிராந்தியம்)
தொலைபேசி குறியீடு(62)2xx
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுID-JT
பரப்பளவில் பெரிய நகரம்செமாராங் - 373.78 சதுர கிலோமீட்டர்கள் (144.32 sq mi)
மக்கள் தொகையில் பெரிய நகரம்செமாராங் - (1,555,984 - 2010)
பரப்பளவில் பெரிய நிர்வாகப்பிரிவுகிலாகப் பிராந்தியம் - 2,124.47 சதுர கிலோமீட்டர்கள் (820.26 sq mi)
மக்கள் பிராந்தியப் பெரு நிருவாகப் பிரிவுபிரிபீசு பிராந்தியம் - (1,733,869 - 2010)
இணையதளம்Government official site

நடுச் சாவகம் (சாவகம் : ꦗꦮꦠꦼꦔꦃ; இந்தோனேசியம்:ஜாவா தெஙா (Jawa Tengah), சுருக்கம்: ஜாத்தெங் ) இந்தோனேசியாவின் மாகாணங்களில் ஒன்றாகும். இந்த மாகாணம் சாவகத் தீவின் நடுவில் அமைந்துள்ளது. செமாராங் இதன் நிருவாகத் தலைநகரமாகும்.

இந்த மாகாணமானது 32,800.69 கி.மீ. பரப்பளவில் உள்ளது, இது சாவகத்தின் மொத்த நிலப்பரப்பில் அண்ணளவாக கால்வாசி ஆகும். 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி அதன் மக்கள் தொகை 33,753,023 ஆகும்; இது மேற்குச் சாவகத்துக்கும் கிழக்குச் சாவகத்துக்கும் பிறகு சாவகத்திலும் ஒட்டுமொத்த இந்தோனேசியாவிலும் மூன்றாவதாக கூடிய மக்கள் தொகை கொண்ட மாகாணமாகும்.

பண்பாட்டு அடிப்படையில் நடுச் சாவகம் என்பது யோகியாகார்த்தா நகரமும் சிறப்பு பகுதியும் நடுச் சாவக மாகாணமும் அடங்கியதாகும். இருப்பினும் இந்தோனேசிய சுதந்திரத்திலிருந்து நிருவாக அடிப்படையில் யோகியாகார்த்தா நகரமும் அதனைச் சுற்றியுள்ள கட்டுப்பாட்டுப் பகுதிகளும் தனித்துவமான சிறப்புப் பகுதியை (மாகாணத்திற்கு சமமானதை) உருவாக்கி தனித்தனியாக நிர்வகிக்கப்படுகின்றன.


புவியியல்[தொகு]

சலாத்திகாவுக்கு அருகிலுள்ள மெரபாபு சிகரம். நடுச் சாவகத்தின் கிராமப்புறங்களில் பெரும்பாலானவற்றில் நெல் வயல்களும் எரிமலைச் சிகரங்களும் காணப்படுகின்றன.

சாவகத் தீவின் நடுவில் அமைந்துள்ள நடுச் சாவக மாகாணத்தின் எல்லைகளாக மேற்குச் சாவக, கிழக்குச் சாவக மாகாணங்கள் உள்ளன. இதன் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு சிறிய பகுதியான யோகியாகார்த்தா சிறப்புப் பகுதியின் நில எல்லை முற்றாக நடுச் சாவக மாகாணத்துடனேயே எல்லையைக் கொண்டுள்ளது. நடுச் சாவகம் வடக்கிலும் தெற்கிலும் மத்திய சாகவகக் கடலை இந்தியப் பெருங்கடலையும் எல்லையாகக் கொண்டுள்ளது. நடுச் சாவக மாகாணம் வடக்கில் கரிமுன் சாகவத் தீவுகளையும் தென்மேற்கில் நசுகம்பன்கன் போன்ற சிறு தீவுகளையும் கொண்டுள்ளது. வரலாற்று அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் நடுச் சாவகத்தின் ஒரு பகுதியாகவே யோகியாகார்த்தா உள்ள போதிலும், அது இப்போது ஒரு தனி நிருவாக அலகாகும்.

நடுச் சாவகத்தின் சராசரி வெப்பநிலை 18 முதல் 28 பாகை செல்சியசு வரையிலும், அதன் ஈரப்பதன் 73 முதல் 94 வரையான சதவீதமும் கொண்டிருக்கும். [1] இந்த மாகாணத்தின் மிகத் தாழ்வான பகுதிகளில் ஈரப்பதன் அதிக அளவில் இருப்பினும் மேட்டு மலைப் பகுதிகளில் கணிசமாகக் குறைகிறது. ஆண்டுக்கு கிட்டத்தட்ட 195 மழை நாட்களைக் கொண்ட இந்த மாகாணத்தின் நகரான சலாத்திகாவில் 3,990 மி.மீ. மழை வீழ்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டு ம.தொ.
1971 2,18,77,136 —    
1980 2,53,72,889 +16.0%
1990 2,85,20,643 +12.4%
1995 2,96,53,266 +4.0%
2000 3,12,28,940 +5.3%
2010 3,23,82,657 +3.7%
2015 3,37,53,023 +4.2%
Source: இந்தோனேயி புள்ளிவிபர நிறுவனம்

2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, நடுச் சாவக மக்கள் தொகை 32,380,687 ஆக இருந்தது. 1990 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 28,516,786 ஆக இருந்தது. எனவே 20 ஆண்டுகளில் மக்கள் தொகையில் 13.5% அதிகரித்துள்ளது.

இவர்களில் முசுலிம்கள் 95.7%, சீர்த்திருத்தத் திருச்சபையினர் 1.7%, கத்தோலிக்கர் 3.2%, இந்துக்கள் 0.08%, பௌத்தர் 0.64%, கெச்சாவென் நெறியினர் 0.33% ஆவர்.

கல்வி[தொகு]

மத்திய ஜாவா செபராங்கில் டிபோனிகோரோ பல்கலைக்கழகம், செமாராங் மாநிலப் பல்கலைக்கழகம் மற்றும் வாலிஸாங்கோ இஸ்லாமிய பல்கலைக்கழகம் (Universitas Islam Negeri Walisongo) போன்ற பிரபலமான பல்கலைக் கழகங்களைக் கொண்டுள்ளது;

செபலாஸ் மாரேட் பல்கலைக்கழகம்; மற்றும் புருவோக்கெட்டோவின் ஜெனரல் சோடிர்மன் பல்கலைக்கழகம் ஆகியவை புர்வோகெர்தோவில் உள்ளன.

இராணுவ அகாடமி (அகாடமி Militer) மெகலாங் பகுதியில் அமைந்துள்ள காவலர் கழகம் (அகாடமி Kepolisian) ஆகியவை செமாராங்கில் அமைந்துள்ளது. மேலும், இந்தோனேசியாவின் சுரகர்த்தா இந்தோனேசிய கலை நிறுவனம் (ISI Surakarta) இவை தவிர, மத்திய ஜாவாவில் நூற்றுக்கணக்கான மத நிறுவனங்கள் உட்பட பல தனியார் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் மொழி பயிற்சிக்காக பாடசாலை மாணவர்களுக்கும் சாலடிகாவில் ஒரு பயிற்சியிடம் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Central Java
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நடுச்_சாவகம்&oldid=3196983" இருந்து மீள்விக்கப்பட்டது