உள்ளடக்கத்துக்குச் செல்

யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி
Daerah Istimewa Yogyakarta
சிறப்புப் பகுதி
பிரம்பானான் கோயில், யோக்யகர்த்தா
பிரம்பானான் கோயில், யோக்யகர்த்தா
யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி
சின்னம்
குறிக்கோளுரை: Memayu Hayuning Bawana (சாவகம்)
(மிகச்சரியான சமுதாயத்திற்கான நோக்கம்) சாவக எழுத்துமுறையில்
இந்தோனேசியாவில் யோகியாக்கார்த்தாவின் அமைவிடம்
இந்தோனேசியாவில் யோகியாக்கார்த்தாவின் அமைவிடம்
நாடுஇந்தோனேசியா
தலைநகர்யோக்யகர்த்தா
அரசு
 • ஆளுநர் (சுல்தான்)பத்தாம் ஹமெங்குபுவோனோ
 • துணை ஆளுநர் (பாகு ஆலம்)ஒன்பதாம் பாகு ஆலம்
பரப்பளவு
 • மொத்தம்3,133.15 km2 (1,209.72 sq mi)
 • பரப்பளவு தரவரிசை33வது
மக்கள்தொகை
 (2014)மாகாணக் கணிப்பு[1]
 • மொத்தம்35,94,290
 • தரவரிசை18வது
மக்கள் வகைப்பாடு
 • இனக்குழுக்கள்சாவக மக்கள் (95.82%)
சந்தனிய மக்கள் (0.56%)
பிறர் (4.45%)[2]
 • சமயம்இசுலாம் (91.4%)
கிறித்தவம் (8.3%)
இந்து, பௌத்தம் (0.3%)[3]
 • மொழிகள்மத்தாரம் சாவகம்
இந்தோனேசிய மொழி (இரண்டும் அலுவல்)
நேர வலயம்ஒசநே+7 (WIB)
இணையதளம்www.jogjaprov.go.id

யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி (/ˌjɒɡjəˈkɑːrtə/ or /ˌjɡjəˈkɑːrtə/;[5] இந்தோனேசிய மொழி: Daerah Istimewa Yogyakarta, or DIY) இந்தோனேசியாவிலுள்ள சிறப்புநிலை தன்னாட்சி மாகாணங்களில் ஒன்று. இதன் நிர்வாகத் தலைநகர் யோகியாக்கார்த்தா நகரம். தனி நிருவாகப் பகுதியானாலும் இது வரலாற்று அடிப்படையிலும் பண்பாட்டு அடிப்படையிலும் நடுச் சாவகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. சாவக இந்துப் புராணங்களிலுள்ள அயோத்தி நகரின் பெயரால் இது யோகியாக்கார்த்தா என வழங்கப்படுகின்றது.

வரலாறு[தொகு]

இந்தோனேசிய விடுதலைப் போராட்டத்திற்கு யோகியாக்கார்த்தா சுல்தானகம் இன்றியமையாத ஆதரவளித்தது. ஜகார்த்தா ஒல்லாந்துக்காரர்கள் வசமானதால் 1946 சனவரி முதல் திசம்பர் 1948 வரை இந்தோனேசியக் குடியரசின் தலைநகராக இருந்தது. யோகியாக்கார்த்தாவின் ஆதரவுக்குப் பலனாக 1950 இல் யோகியாக்கார்த்தாவை சிறப்பு நிர்வாகப் பகுதி என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இந்தோனேசியாவில் குடியேற்றவாதத்துக்கு முந்திய முடியாட்சியைக் கொண்டுள்ள ஒரே பகுதியாக யோகியாக்கார்த்தா ஆனது. பரம்பரை ஆளுனராக யோகியாக்கார்த்தா சுல்தான் செயற்படுகின்றார்.

புவியியல்[தொகு]

சாவகத்தின் தெற்குக் கடற்கரையின் அருகில் முற்றிலும் நடு-ஜாவா மாகாணத்தில் இந்தச் சிறப்புப் பகுதி அமைந்துள்ளது. 3,133.15 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இப்பகுதி இந்தோனேசியாவிலுள்ள மாகாணங்களில் இரண்டாவது சிறியதாகும். மெராபி சிகரம் யோக்யகர்த்தா நகருக்கும் சலேமன் பதிலாட்புலத்துக்கும் வடக்கே உள்ளது. 1548 முதல் தொடர்ந்து வெடித்துவரும் இது இந்தோனேசியாவிலுள்ள எரிமலைகளில் மிகத் தீவிரமானது. இந்த எரிமலை அண்மையில் அக்டோபர்-நவம்பர் 2010 ல் வெடித்த நிகழ்வில் பலர் காயமுற்றனர். மேலும் 100,000 குடிமக்கள் இடம்பெயர்ந்தனர்.[6][7]

நிர்வாக பிரிவுகள்[தொகு]

யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி மாகாண மட்டத்தில் நான்கு பதிலாட்புலங்களாகவும் (இந்தோனேசிய மொழி: kabupaten ஆங்கிலம்: regencies) ஒரு நகரமாகவும் (kota) பகுக்கப்பட்டுள்ளது.

பெயர் தலைநகர் பரப்பு (கிமீ²) மக்கள் தொகை
2000 கணக்கு
மக்கள் தொகை
2005 கணிப்பு
மக்கள் தொகை
2010 கணக்கு
மக்கள் தொகை
2014 கணிப்பு
யோக்யகர்த்தா நகர் யோக்யகர்த்தா நகர் 32.50 3,96,700 4,33,539 3,88,627 4,04,003
பான்டுல் பதிலாட்புலம் பான்டுல் 508.13 7,81,000 8,59,968 9,11,503 9,47,568
குனுங்கிடுல் பதிலாட்புலம் வோனோசாரி 1,431.42 6,70,400 6,81,554 6,75,382 7,02,104
குலான்பரோகோ பதிலாட்புலம் வாடேஸ் 586.28 3,71,000 3,73,757 3,88,869 4,04,155
சலேமன் பதிலாட்புலம் சலேமன் 574.82 9,01,400 9,88,277 10,93,110 11,36,360
மொத்தம் 3,133.15 31,21,045 33,37,095 34,57,491 35,94,290

போக்குவரத்து[தொகு]

யோக்யகர்த்தாவில் அடிசூசிப்டோ பன்னாட்டு விமானநிலையம் உள்ளது. லெம்புயங்கன் மற்றும் யோக்யகர்த்தா (டுகு நிலையம் என்றும் அழைக்கப்படும்) இரண்டு தொடருந்து நிலையங்கள் உள்ளன. தெற்கில் பான்டுல் பதிலாட்புலத்தில் இந்தோனேசியாவிலுள்ள பெரிய பேருந்து நிலையமான கிவாங்கன் பேருந்து நிலையம் உள்ளது.

கல்வி[தொகு]

யோக்யகர்த்தாவில் 100 க்கும் மேற்பட்ட உயர் கல்வி நிறுவனங்கள் உள்ளன.[8] இந்தோனேசியாவின் எந்தவொரு மாகாணத்தையும் விட அதிக எண்ணிக்கையிலான உயர் கல்வி நிறுவனங்களைக் கொண்டுள்ளதால் யோக்யகர்த்தா மாணவர்கள் நகரம் ("kota Pelajar") எனப் பெயர் பெற்றது. இந்தோனேசியாவின் முதல் தனியார் பல்கலைக்கழகமான இந்தோனேசிய இஸ்லாமிய பல்கலைக்கழகம் யோக்யகர்த்தா சிறப்பு பகுதியில் 1945ல் நிறுவப்பட்டது. முதன்முதலில் நுண்கலைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகமும் இந்தச் சிறப்பு பகுதியிலுள்ளது.

புவி பாரம்பரிய தளங்கள்[தொகு]

இந்தோனேசியாவில் யோக்யகர்த்தா சிறப்புப் பகுதியில் சக்தி மற்றும் இயற்கை வளங்கள் அமைச்சகத்திற்கான புவியியல் முகமை அறிவித்துள்ள ஒன்பது புவி-பாரம்பரிய தளங்களைக் கொண்டுள்ளது.

 • காம்பிங்கிலுள்ள இயோசென் சுண்ணாம்புக் கற்கள் (சலேமன் பதிலாட்புலம்)
 • பெர்பாவிலுள்ள பில்லோ தலையணை எரிமலைக்குழம்பு (சலேமன் பதிலாட்புலம்)
 • சண்டி இஜோ, பிரம்பானானிலுள்ள வரலாற்று காலத்திற்கு முந்தைய எரிமலைப் படிமங்கள் (சலேமன் பதிலாட்புலம்)
 • பரங்ட்ரீட்டிஸ் கடற்கரையிலுள்ள மணல் குன்றுகள் (பான்டுல் பதிலாட்புலம்)
 • கிலேரிப்பனிலுள்ள கிஸ்கென்டோ குகை மற்றும் முன்னாள் மாங்கனீசு சுரங்க தளம் (குலான்பரோகோ பதிலாட்புலம்)
 • ஙலாங்கெரானிலுள்ள வரலாற்று காலத்திற்கு முந்தைய எரிமலை (குனுங்கிடுல் பதிலாட்புலம்)
 • வைடியோம்போ சியுங் கடற்கரைகள் (குனுங்கிடுல்)
 • கலிங்கலாங்கிலுள்ள பையோடர்பாசி தளம் (குனுங்கிடுல்)

பெர்பாவிலுள்ள குறுகிய டெங்கெங் ஆற்றின் கரையிலிருக்கும் பெரிய கரடுமுரடான கறுப்புப் பாறைகள் தனிச்சிறப்பு வாய்ந்தன. ஙலாங்கெரானிலுள்ள வரலாற்று காலத்திற்கு முந்தைய எரிமலை ஒரு சுற்றுலா ஈர்ப்புப் பகுதியாக மேம்படுத்தப்பட்டுள்ளது.

நட்றவுப்பகுதிகள்[தொகு]

யோக்யகர்த்தா சிறப்புப் பகுதி பின்வரும் பகுதி / மாநிலங்களுடன் மாகாண அளவில் சகோதர / நட்புறவு கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

சான்றுகள்[தொகு]

 1. http://yogyakarta.bps.go.id/index.php?r=site/page&view=sosduk.tabel.3-1-1
 2. Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape. Institute of Southeast Asian Studies. 2003.
 3. Kementerian Agama Republik Indonesia Wilayah DIY (2010-03-15). "Kementerian Agama RI | Kantor Wilayah DI Yogyakarta". Yogyakarta.kemenag.go.id. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-02-07.
 4. http://yogyakarta.bps.go.id/
 5. "Yogyakarta | Define Yogyakarta at Dictionary.com". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 2011-06-05.
 6. "Update: Indonesia Volcano Death Toll Soars Past 100; 'Many Children Dead, by Gandang Sajarw". Jakarta Globe. 2010-11-05. பார்க்கப்பட்ட நாள் 2010-11-05.
 7. "Pictures: Indonesia's Mount Merapi Volcano Erupts". News.nationalgeographic.com. 2010-10-26. பார்க்கப்பட்ட நாள் 2011-02-07.
 8. "List of private higher education institutions in the Province of Yogyakarta". Kopertis4.or.id. Archived from the original on 2004-08-26. பார்க்கப்பட்ட நாள் 2011-02-07.
 9. "Kyoto prefecture List of Friendly and Sister City". Pref.kyoto.jp. பார்க்கப்பட்ட நாள் 2011-02-07.
 10. கியோங்சங்புக்குடனான நட்புறவு
 11. Biro Kerjasama (2006). Bunga Rampai Kerjasama Luar Negeri Propinsi DIY. Yogyakarta: Pemerintah Propinsi DIY.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Yogyakarta
என்பதில் ஊடகங்கள் உள்ளன.