இந்தோனேசியாவின் மாகாணங்கள்
இந்தோனேசியாவின் மாநிலங்கள் Provinces of Indonesia Provinsi di Indonesia | |
---|---|
![]() | |
வகை | முதல்நிலை நிர்வாகப் பிரிவு; பரவலாக்கம் ஓரவை முறைமை |
அமைவிடம் | இந்தோனேசியா |
உருவாக்கப்பட்டது | 18 ஆகத்து 1945 |
எண்ணிக்கை | 38 |
மக்கள்தொகை | தெற்கு பாப்புவா (534,400) மேற்கு சாவகம் (49,860,300) |
பரப்புகள் | ஜகார்த்தா 661 km2 (255 sq mi) மத்திய கலிமந்தான் 153,444 km2 (59,245 sq mi) |
அரசு | ஆளுநர் |
உட்பிரிவுகள் | மாநிலங்கள் நகரங்கள் |
மாநிலம் அல்லது புரோவின்ஸ்; (ஆங்கிலம்: Province இந்தோனேசியம்: Provinsi) என்பது இந்தோனேசியாவின் முதல் நிலை நிர்வாகப் பிரிவாகும். இந்தோனேசிய சீர்திருத்த காலத்திற்கு முன்பு (Post-Suharto era), முதல்-நிலை மாநிலப் பகுதிகள் (இந்தோனேசியம்: provinsi daerah tingkat I) என்று அழைக்கப்பட்டன.
ஒரு மாநிலம், ஓர் ஆளுநர்; மற்றும் ஒரு பிராந்திய சட்டமன்ற அமைப்பு (ஆங்கிலம்: Regional Legislative Body; இந்தோனேசியம்: Dewan Perwakilan Rakyat Provinsi) ஆகியவற்றைக் கொண்ட உள்ளாட்சி அரசாங்கத்தைக் கொண்டிருக்கும்.
மாநிலங்களின் அரசாங்கங்கள் (Provincial Governments) தங்கள் சொந்த அரசாங்க விவகாரங்களை ஒழுங்குபடுத்தவும் நிர்வகிக்கவும் அதிகாரம் கொண்டவை. இந்தோனேசியாவில் தற்போது 38 மாநிலங்கள் உள்ளன. எதிர்காலத்தில் மாநில அளவிலான நகரமான நுசந்தரா (Nusantara), அதிகாரப்பூர்வமாக 39-ஆவது மாநிலமாக அறிவிக்கப்பட்ட உள்ளது.[1]
இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள்
[தொகு]இந்தோனேசிய நிர்வாக உட்பிரிவுகள், ஆங்கிலம்: Subdivisions of Indonesia; இந்தோனேசியம்: Pembagian Administratif Indonesia) என்பது இந்தோனேசியாவின் நிர்வாகப் பிரிவுகள்; நான்கு நிலைகளில் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது.[2]
- முதலாம் நிலை: மாநிலம் அல்லது புரோவின்ஸ்; (ஆங்கிலம்: Province இந்தோனேசியம்: Provinsi)
- இரண்டாம் நிலை : பிராந்தியம் அல்லது ரீசன்சி; மாநகரம்; (ஆங்கிலம்: Regency; City இந்தோனேசியம்: Kabupaten; Kota)
- மூன்றாம் நிலை : மாவட்டம் (ஆங்கிலம்: District இந்தோனேசியம்: Kecamatan, Distrik, Kapanewon, Kemantren)
- நான்காம் நிலை : கிராமம் அல்லது துணை மாவட்டம் (ஆங்கிலம்: Village/Subdistrict இந்தோனேசியம்: Desa / Kelurahan)[3]
பின்னணி
[தொகு]ஒருமாநிலத்தின் ஆளுநரும்; உள்ளூர் பிரதிநிதி அமைப்புகளின் உறுப்பினர்களும்; ஐந்தாண்டு காலத்திற்கு மக்களின் வாக்குகளின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்; ஆளுநர்கள் இரண்டு தவணை மட்டுமே பணியாற்ற முடியும்.
தற்போதைய மாகாணங்கள்
[தொகு]இந்தோனேசியாவில் 38 மாநிலங்கள் உள்ளன. அவற்றில் ஐந்து மாநிலங்கள் சிறப்புத் தரத்தைக் கொண்டுள்ளன:
- அச்சே மாநிலத்தின் பிராந்தியச் சட்டமாக சரீஆச் சட்டம் நடைமுறையாவதற்காகும்.
- ஜகார்த்தா தலைநகரம்.
- யோகியாக்கார்த்தா சிறப்புப் பகுதி அதன் பரம்பரை ஆளுநராக சுல்தான் அமங்குவுவோனோவையும் பரம்பரைத் துணை ஆளுநராக பாக்கு அலாமையும் கொண்டிருக்கிறது.
- பப்புவா தன்னாட்சி முறையை நடைமுறையாக்குகிறது.
- மேற்கு பாப்புவா தன்னாட்சி முறையை நடைமுறையாக்குகிறது.
மாநிலங்கள் அலுவல் முறையாக ஏழு புவியியல் அலகுகளாகக் குழுவாக்கப்படுகின்றன.
புவியியல் அலகுகள்
[தொகு]இந்தோனேசியாவின் மாநிலங்கள், புள்ளிவிவரங்கள் மற்றும் தேசிய திட்டமிடல் நோக்கங்களுக்காக ஏழு புவியியல் அலகுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் அவற்றுக்கு நிர்வாகச் செயல்பாடுகள் எதுவும் வழங்கப்படவில்லை.[4]
இந்தோனேசிய மாநிலங்களின் பட்டியல்
[தொகு]குறிப்புகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mawardi, Isal (4 November 2024). "Menteri Hukum: Jakarta Masih Ibu Kota, Proses Perpindahan Ditentukan Keppres". detik.com. Retrieved 22 February 2025.
- ↑ "Undang-Undang Republik Indonesia Nomor 23 Tahun 2014 tentang Pemerintah Daerah". Law இல. 23 of 2014. House of Representatives.
- ↑ "Undang-Undang Republik Indonesia Nomor 32 Tahun 2004 tentang Pemerintah Daerah". Law இல. 32 of 2004. House of Representatives.
- ↑ ISO 3166-2:ID
- ↑ Badan Pusat Statistik, Jakarta, 2025.
- ↑ Buku Induk—Kode dan Data Wilayah Administrasi Pemerintahan per Provinsi, Kabupaten/Kota dan Kecamatan Seluruh Indonesia (PDF) (in Indonesian), Kementerian Dalam Negeri [Ministry of Home Affairs], archived from the original (PDF) on 2016-11-19
{{citation}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Badan Pusat Statistik/Statistics Indonesia, Jakarta, 2025.
- ↑ Badan Pusat Statistik/Statistics Indonesia, Jakarta, 2025.
- ↑ ISO 3166-2:ID (ISO 3166-2 codes for the provinces of Indonesia)