செம்பனை எண்ணெய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓர் செம்பனை அல்லது எண்ணெய்ப் பனைத் தோட்டம்

செம்பனை எண்ணெய் எனப்படுவது செம்பனை அல்லது எண்ணெய்ப் பனை எனப்படும் ஒரு விதப் பனை மரத்தின் பழங்களில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆகும். இந்த செம்பனையின் அறிவியற்பெயர் Elaeis guineensis என்பதாகும். இது உண்ணத் தகுந்தது. பெரும்பாலும் இது ஆப்பிரிக்க எண்ணெய்ப் பனையில் இருந்தும் சிறிதளவு அமெரிக்க எண்ணெய்ப் பனையில் இருந்தும் எடுக்கப்படுகிறது. இந்த எண்ணெய் சிவந்த நிறத்தில் இருக்கும்.

இப்பனை மரங்கள் இந்தோனேசியா, மலேசியா, நைசீரியா முதலிய நாடுகளில் பெருமளவு பயிர்செய்யப் படுகிறது.

இப்பனைப் பயிர்செய்கையினால் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதாகக் கூறப்பட்டாலும் இவை பயிரிடப்படும் நாடுகளில் காடழிப்புக்கு இது ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செம்பனை_எண்ணெய்&oldid=2543474" இருந்து மீள்விக்கப்பட்டது