கடலையெண்ணெய்
கடலையெண்ணை (peanut oil, groundnut oil), வேர்க்கடலையில் இருந்து எடுக்கப்படும் தாவர எண்ணெய் ஆகும். இது, கடலையின் வாசத்தைக் கொண்ட, நல்லெண்ணெய் போன்று சமையலுக்கு பயன்படுத்தப்படும் எண்ணெயாகும்[1][2]. சீனா, தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பெருமளவில் சமையலுக்காக உபயோகப்படுத்தப்படுகிறது.
பயண்கள்
தூய்மையாக்கப்படாத கடலையெண்ணெயின் புகையும் நிலை 320 °F/160 °C. இது நல்லெண்ணெய் போல ஒரு சுவையூட்டியாகவும் பயன்படுகிறது. தூய்மையாக்கப்பட்ட கடலையெண்ணெயின் புகையும் நிலை 450 °F/232 °C, இது உருளைக்கிழங்கு, வடை போன்றவரற்றை ஆழ வறுக்க பயன்படுகிறது.
கூட்டமைவு
இதன் பெரும்பான்மையாண கூட்டமைப்பு கொழுப்பு அமிலங்கள்ஆவன- ஒலெயிக் அமிலம் (46.8% ஒலெயினாக), லினொலெயிக் அமிலம் (33.4% லினொலெயினாக ), மேலும் பாமிடிக் அமிலம் (10.0% பாமிடினாக ). மேலும் இந்த எண்ணெயில் சிறிது ஸ்டீரியிக் அமிலம், அராகைடிக் அமிலம், பெஹெனிக் அமிலம், லிக்னோசெரிக் அமிலம் மற்றும் பல கொழுப்பு அமிலங்கள் உள்ளன.
சிலசமயங்களில் தேக்க ஆயுளை மேம்படுத்த வைட்டமின் ஈ போன்ற எதிர் ஆக்சிகரணிகள் சேர்க்கப்படுகின்றன.
ஊட்டச்சத்து உள்ளடக்கம்
USDA (யூ எஸ் வேளான் துரை) தகவல்களை அடிப்படையாகக் கொண்ட பின்வரும் அட்டவணைப்டி, 100 கிராம் வேர்க்கடலை எண்ணெயில் 17.7 கிராம் நிறைவுற்ற கொழுப்பு ( saturated fat), 48.3 கிராம் ஒற்றைச்செறிவிலாக் கொழுப்பு ( monounsaturated fat) மற்றும் 33.4 கிராம் பல்செறிவிலாக் கொழுப்பு (polyunsaturated fa.)உள்ளன.
கடலையெண்ணை
உணவூட்டம்சார் மதிப்பு ஒவ்வொரு 100 கிராமில் | |
ஆற்றல் | 3,699 kJ (884 kcal) |
மாவுச்சத்து | 0 g |
கொழுப்பு | 100 g |
நிறைவுற்ற கொழுப்பு | 17 g |
ஒற்றைச்செறிவிலாக் கொழுப்பு | 46 g |
பல்செறிவிலாக் கொழுப்பு | 32 g |
புரதம் | 0 g |
உயிர்ச்சத்துக்கள் | (%DV)†
Qty |
உயிர்ச்சத்து E | (105%)
15.7 mg |
கனிமங்கள் | |
துத்தநாகம் Zinc | (0%)
0.01 mg |
Other constituents | |
கொழுப்பு Cholesterol | 0 mg |
செலினியம் | 0.0 mcg |
Fat percentage can vary. | |
· Units
· μg = micrograms • mg = milligrams · IU = International units | |
†Percentages are roughly approximated using US recommendations for adults.
Source: USDA Nutrient Database |
பொதுவான சமயல் கொழுப்புகளின் ஒப்பீடு(per 100 g ) | |||||
கொழுப்பு வகை | மொத்த
கொழுப்பு கி |
நிறைவுற்ற கொழுப்பு கி | ஒற்றைச்செறிவிலாக் கொழுப்பு கி | பல்செறிவிலாக் கொழுப்பு கி | புகையும் நிலை |
சூரியகாந்தி எண்ணெய் | 100 | 11 | 20 | 69 | 225 °C (437 °F)[8] |
சூரியகாந்தி எண்ணெய் (உயர் ஒலெயின் உள்ளது) | 100 | 12 | 84 [9] | 4 [9] | |
சோயா மொச்சை எண்ணெய் | 100 | 16 | 23 | 58 | 257 °C (495 °F)[8] |
கநொலா எண்ணெய் (கடுகு குடும்பத்தைச் சேர்ந்த ரேப்விதை எண்ணெய்) | 100 | 7 | 63 | 28 | 205 °C (401 °F)[9][10] |
ஆலிவ் எண்ணெய் | 100 | 14 | 73 | 11 | 190 °C (374 °F)[8] |
மக்காச்சோள எண்ணெய் | 100 | 15 | 30 | 55 | 230 °C (446 °F)[8] |
கடலையெண்ணை | 100 | 17 | 46 | 32 | 225 °C (437 °F)[8] |
நெல் தவிட்டு எண்ணெய் | 100 | 25 | 38 | 37 | 250 °C (482 °F)[11] |
காய்கறி திடக்கொழுப்பு
வனஸ்பதி |
71 | 23 | 8 | 37 | 165 °C (329 °F)[8] |
பன்றிக்கொழுப்பு | 100 | 39 | 45 | 11 | 190 °C (374 °F)[8] |
கெட்டி இறைச்சி கொழுப்பு | 94 | 52 | 32 | 3 | 200 °C (392 °F) |
வெண்ணெய் | 81 | 51 | 21 | 3 | 150 °C (302 °F)[8] |
தேங்காய் எண்ணெய் | 100 | 86 | 6 | 2 | 177 °C (351 °F) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Liu, Xiaojun; Jin, Qingzhe; Liu, Yuanfa; Huang, Jianhua; Wang, Xingguo; Mao, Wenyue; Wang, Shanshan (2011). "Changes in Volatile Compounds of Peanut Oil during the Roasting Process for Production of Aromatic Roasted Peanut Oil". Journal of Food Science 76 (3): C404–12. doi:10.1111/j.1750-3841.2011.02073.x. பப்மெட்:21535807.
- ↑ "USA-Grown Peanut Sources - Peanut Oil". National Peanut Board. Archived from the original on 2008-06-11. பார்க்கப்பட்ட நாள் 2016-04-23.