நேச அணி
Jump to navigation
Jump to search
நேச அணி (Allies) (நேச நாடுகள் அணி-நட்பு அணி) ஒரு பொதுவான சர்ச்சைகளுக்காக குறிப்பிட்ட சில நாடுகள் ஒன்றுசேர்ந்து பொது கருத்தை எட்டுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அணி சேர்ந்த நாடுகள் அமைப்பை நேச நாடுகள் அணி அல்லது நேச அணி என அழைக்கப்பட்டது. இதன்மூலம் அதனதன் இராணுவ அமைப்புடன் ஒன்று சேர்ந்து அனைவரும் ஒரே நோக்கத்திற்காக ஒரே எதிரியை நோக்கிப் போராடுவது அல்லது போரிடுவது என்றக் குறிக்கோளுக்காக அமைக்கப்பட்டது. இவ்வணியில் சேர்ந்த நாடுகள் ஒரே அணியாக முதலாம் உலகப்போரில் மைய சக்தியை (மையசக்தி என்றழைக்கப்பட்ட நாடுகள்- பல்கேரியா, ஒட்டோமான் பேரரசு, ஆஸ்டிரிய-அங்கேரி, ஜெர்மன் பேரரசு) எதிர்த்தும் இரண்டாம் உலகப்போரில் அச்சு நாட்டு (அச்சு சக்திகள்) அணிகளின் சக்தியை எதிர்த்தும் போரிட்டன.