சூலு சுல்தானகம்
1457–1917 | |
கொடி | |
தலைநகரம் | ஜோலோ, சூலு |
பேசப்படும் மொழிகள் | அரபு மொழி (அதிகாரபூர்வம்), தவுசூக், மலாயு, பங்கூங்கி, பசாவு மொழிகள் |
சமயம் | இசுலாம் |
அரசாங்கம் | முடியாட்சி |
சுல்தான் | |
• 1457–1480 | சரீப் உல்-அசீம் |
• 1480-1505 | கமலுத்-தின் |
• 1505-1527 | அமிருல்-உமாரா |
• 1884–1899 | ஜமா உல்-கிராம் I |
வரலாறு | |
• தொடக்கம் | 1457 |
• சுல்தானகம் கலைப்பு | 1917 |
தற்போதைய பகுதிகள் | இந்தோனேசியா மலேசியா பிலிப்பைன்சு |
சூலு சுல்தானகம் (ஆங்கிலம்: Sultanate of Sulu Dar al-Islam)[1] என்பது சூலு கடல், பிலிப்பீன்சின் தெற்குப் பகுதித் தீவுகள், போர்னியோவின் வடக்குப் பகுதி ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு இசுலாமிய தவுசூக் மக்களின் இறைமையுள்ள நாடு ஆகும். இச்சுல்தானகம் 1457 ஆம் ஆண்டில்[2] ஜொகூரில் பிறந்த அரபு நாடுகாண் பயணியும், இசுலாமியக் கல்விமானுமான சய்யிது அபூபக்கர் அபிரின் (சூலுவின் சரிப் உல்-அசீம்) (Sayyed walShareef Abubakar Abirin AlHashmi.) என்பவரால் உருவாக்கப்பட்டது.
அபூபக்கர் உள்ளூர் இளவரசி பரமிசூலி (Paramisuli) என்பவளைத் திருமணம் முடித்ததை அடுத்து, அவர் சுல்தானகத்தை அமைத்து பாதுகா மகாசரி மவுலானா அல் சுல்தான் சரீப் உல்-ஹாசிம் (Paduka Mahasari Maulana al Sultan Sharif ul-Hashim) என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.
இந்த சுல்தானகம் தற்போது எந்த நாட்டாலும் இறைமையுள்ள நாடாக அங்கீகரிக்கப்படவில்லை. இருப்பினும், சூலு சுல்தான் அல்லது வடக்கு போர்னியோவின் சுல்தான் எனப் பலர் உரிமை கோரி வருகின்றனர்.
2013-ஆம் ஆண்டில், மூன்றாம் ஜமாலுல் கிராம் சுல்தான் (Sultan Jamalul Kiram) எனத் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டவரின் தலைமையில் சில பிலிப்பீன்சு குழு ஒன்று மலேசியாவின் சபா மாநிலத்தின் லகாட் டத்துவுக்கு அருகில் உள்ள கிராமம் ஒன்றைக் கைப்பற்றித் தம் வசப் படுத்தியுள்ளனர்.[3]
வரலாறு
[தொகு]புட்டுவான் ராஜா நாடு
[தொகு]1578-ஆம் ஆண்டில் சுலு சுல்தானகம், தன் சுதந்திரத்தைப் பெறுவதற்கு முன்னர், புரூணை பேரரசின் கீழ் இருந்தது. 13-ஆம் நூற்றாண்டின் போது சுலுவின் மக்கள், வடகிழக்கு மிண்டனாவோவில் (Mindanao) உள்ள தங்களின் பூர்வீக இடங்களில் இருந்து இன்றைய ஜாம்போங்கா (Zamboanga) மற்றும் சுலு தீவுக் கூட்டங்களுக்கு இடம்பெயரத் தொடங்கினர்.[4]
பழங்காலத்தில் பிலிப்பைன்சு நாட்டில் புட்டுவான் ராஜா நாடு (Rajahnate of Butuan) எனும் ஒரு நாடு இருந்தது. அந்த நாடு அப்போது இஸ்லாமியத்திற்கு முந்தைய சுலுவைப் போல (Hindu like pre-islamic Sulu) ஓர் இந்து நாடாக இருந்தது என்றும் சொல்லப் படுகிறது.[5]
தவுசுக் மொழி
[தொகு]அந்த நாட்டில் புட்டுவான் (Butuanons); சூரிகானோன் (Surigaonons) மக்கள் வாழ்ந்தனர். அவர்களின் வழித்தோன்றல்கள்தான் சூலு மக்கள் என்று சொல்லப் படுகிறது.[6]
இவர்கள் புட்டுவான் ராஜா நாட்டில் இருந்து தெற்கே சென்று சுலுவில் நறுமணப் பொருட்கள் வர்த்தக மையத்தை நிறுவினார்கள். 1600-இல் சூலு சுல்தானகத்தை ஆட்சி செய்த பத்தாரா ஷா தெங்கா என்பவர், புட்டுவான் நாட்டின் உண்மையான பூர்வீகக் குடிமகன் என்று கூறப்படுகிறது.[7]
தொடக்கக் காலக் குடியேற்றம்
[தொகு]புட்டுவானோன், சூரிகானோன் மற்றும் தவுசுக் மொழிகள் அனைத்தும் பிலிப்பைன்சு நாட்டின் விசயன் மொழியின் துணைக் குடும்பத்தின் கீழ் வருகின்றன. தவுசு மொழி புட்டுவானன்-சுரிகானோன் மொழிகளின் உறவால் கண்டு அறியப்படுகிறது.
ஜோலோ (Jolo) தீவின் மைம்புங் (Maimbung) எனும் இடத்தில் தொடக்கக் காலக் குடியேற்றம் நடைபெற்றது. இந்தத் தீவுப் பகுதி சூலு சுல்தானகத்தால் தொடக்கத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாகும்.
ராஜா சிபாத்
[தொகு]அந்தக் கட்டத்தில், சுலு சுல்தானகம் லூப்பா சுக் (Lupah Sug) என்று அழைக்கப்பட்டது. லூப்பா சுக் என்பது மலைவாசிகள் என்று பொருள்படும். சுல்தானகத்தின் தலைவரை ராஜா சிபாத் (Rajah Sipad) என்று அழைத்தார்கள். ராஜா சிபாத் எனும் பட்டத்தை ஏற்றுக்கொண்ட ஒரு ராஜாவால் ஆளப்பட்டது.[7]
ராஜா சிபாட் என்ற சொல்; இந்து சமயச் சொல்லான ஸ்ரீ பாதம் (Sri Pada) எனும் சொல்லில் இருந்து உருவானது. அப்போதைய சுல்தானகம் ராஜாக்கள் முறையைப் பயன்படுத்தி நிர்வாகம் செய்யப்பட்டது.[4]
மரபு வழி அரசுகள்
[தொகு]பிலிப்பீன்சு தீவுகளில், தொடக்கக் காலங்களில், பரவியிருந்த சில சமூகங்கள் தனிமைப் படுத்தப்பட்டு இருந்தன. இருப்பினும் அவற்றில் பல சமூகங்கள் அரசுகளாக மாற்றம் அடைந்தன. அந்த அரசுகள் புரூணை, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, சப்பான் மற்றும் ஏனைய ஆஸ்திரோனேசிய தீவுகளுடன் கணிசமான அளவிற்கு வணிகத் தொடர்புகளை வளர்த்துக் கொண்டன.<
தன்னாட்சி கொண்ட அரசுகள்
[தொகு]முதலாவது ஆயிரம் ஆண்டுகாலத்தில் கடலோரத் துறைமுக ஆட்சிப் பகுதிகள் எழுச்சி பெற்றன. தன்னாட்சி கொண்ட பராங்கீசுகளை (Barangay state) உள்ளடக்கிய கடல்சார் நாடுகளாக உருவெடுத்தன. இவை சுதந்திரமாக இயங்கின.
டாத்துக்கள் (Datus) தலைமையிலான மலாய் கடலாதிக்க அரசுகள், சீனா நாட்டின் குவாங்குகளால் ஆளப்பட்ட சீனத்தின் சிற்றரசுகள் அல்லது ராஜாக்களால் நிர்வகிக்கப்பட்ட இந்தியப் பண்பாட்டுச் சார்புடைய அரசகங்கள் போன்றவை பெரிய நாடுகளைச் சார்ந்தவையாக இருந்தன.[8]
எடுத்துக்காட்டாக, அட்டியின் தலைவனான மரிகுடோ என்பவரிடம் இருந்து மட்ஜா-அஸ் -இன் கெடாத்துவானை டாத்து புட்டி மன்னர் விலைக்கு வாங்கி ஆட்சி செய்தார்.[9] மட்ஜா-அஸ், அழிக்கப்பட்ட அவர்களது தாயகமான பன்னய் அரசைத் தழுவிப் பெயரிடப்பட்ட பனய் தீவில் நிறுவப்பட்டது. புட்டுவான் இராச்சியம் ராஜா ஸ்ரீ பட ஷாஜாவின் ஆட்சியின் கீழ் முக்கியத்துவம் பெற்றது.டொண்டோ அரசகம் லகன்டுலா மரபு வழி அரசர்களாலும்.[10][11] செபு அரசகம்[12] ராஜமுடா ஸ்ரீ லுமாயினாலும் ஆளப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ சூலு அரசு சுல்தானகம் அல்லது சூலு தருல் இசுலாம் சுல்தானகம் எனவும் சில வேளைகளில் அழைக்கப்படுகிறது.
- ↑ Usman, Edd (10 February 2010). "Heirs of Sulu Sultanate urged to attend general convention". http://www.mb.com.ph/articles/242781/heirs-sulu-sultanate-urged-attend-general-convention. பார்த்த நாள்: 21 December 2010.
- ↑ மலேசியாவின் சபா மாநிலத்தில் ஆயுதக் கும்பலுடனான மோதலில் ஐந்து காவல்துறையினர் கொல்லப்பட்டனர், விக்கிசெய்தி, மார்ச் 3, 2013
- ↑ 4.0 4.1 Ring, Trudy; Salkin, Robert M; La Boda, Sharon (January 1996). International Dictionary of Historic Places: Asia and Oceania. Taylor & Francis. pp. 160–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-884964-04-6.
- ↑ Brunei, Muzium (1969). Brunei Museum Journal.
The area from Kimanis Bay to the Paitan River not from Sulu but from Brunei
- ↑ Cahoon, Ben. "Sabah". worldstatesmen.org. பார்க்கப்பட்ட நாள் 9 October 2014.
Sultan of Brunei cedes the lands east of Marudu Bay to the Sultanate of Sulu.
- ↑ 7.0 7.1 Ibrahim 1985, ப. 51
- ↑ Legarda, Benito, Jr. (2001). "Cultural Landmarks and their Interactions with Economic Factors in the Second Millennium in the Philippines". Kinaadman (Wisdom) A Journal of the Southern Philippines 23: 40.
- ↑ Prehispanic Source Materials Page 74 by William Henry Scott (NEW DAY PUBLISHERS INC.)
- ↑ Ring, Trudy, Robert M. Salkin, and Sharon La Boda. (1996). International Dictionary of Historic Places: Asia and Oceania. Taylor & Francis. pp. 565–569. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-884964-04-4. பார்க்கப்பட்ட நாள் சனவரி 7, 2010.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ Zaide, Gregorio F. (1957). Philippine Political and Cultural History. Philippine Education Co. p. 42. பார்க்கப்பட்ட நாள் சனவரி 7, 2010.
- ↑ Zhang Xie. (1618) (in Chinese). Dong Xi Yang Kao [A Study of the Eastern and Western Oceans] Volume 5 பரணிடப்பட்டது 2017-10-10 at the வந்தவழி இயந்திரம் (சீன மொழி: 東西洋考). ISBN 7532515931. MID 00024687. Retrieved December 18, 2009.
மேலும் படிக்க
[தொகு]- History for Brunei Darussalam: Sharing our Past. Curriculum Development Department, Ministry of Education. 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99917-2-372-3.
- Ang, Josiah C., Historical Timeline of the Royal Sultanate of Sulu Including Related Events of Neighboring Peoples, Southeast Asian Studies, Northern Illinois University, archived from the original on 2012-04-29, பார்க்கப்பட்ட நாள் 2022-07-19
- Campbell, Lawrence Dundas (2007), The Asiatic Annual Register: or, A View of the History of Hindustan, and of the Politics, Commerce and Literature of Asia, vol. 6, University of Michigan
- Cavendish, Marshall (2007), World and Its Peoples: Eastern and Southern Asia, vol. 9, Marshall Cavendish Corporation, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7614-7642-9
- Decasa, George C. (1999), The Qur'ānic Concept of Umma and its Function in Philippine Muslim Society, Pontificia Università Gregoriana, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-7652-812-5
- Gonda, Jan (1975), Religionen: Handbuch der Orientalistik: Indonesien, Malaysia und die Philippinen unter Einschluss der Kap-Malaien in Südafrika, vol. 2, E.J. Brill, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-04330-5
- Ibrahim, Ahmad; Siddique, Sharon; Hussain, Yasmin (1985), Readings on Islam in Southeast Asia, Institute of Southeast Asian Studies, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9971-988-08-1
- Keppel, Henry, The Expedition to Borneo of H.M.S. Didio for the Suppression of Piracy, Reprinted by The Forgotten Books, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4400-7547-6
- Larousse, William (2001), A Local Church Living for Dialogue: Muslim-Christian Relations in Mindanao-Sulu, Philippines : 1965–2000, Pontifical Gregorian University, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-7652-879-8
- Majul, César Adib (1973), Muslims in the Philippines, University of the Philippines Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789715421881
- Saleeby, Najeeb Mitry (1908), The History of Sulu, Bureau of Printing
- Saunders, Graham E. (2002), A History of Brunei, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7007-1698-2
- Scott, William Henry (1994), Barangay: Sixteenth-Century Philippine Culture and Society, Ateneo de Manila University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-971-550-135-4
- Tan, Samuel K. (2009), A History of the Philippines, University of the Philippines Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-971-542-568-1
- Tan, Samuel K. (2010), The Muslim South and Beyond, University of the Philippines Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-971-542-632-9
- United Nations Publications (2002), Case concerning sovereignty over Palau Ligitan and Palau Sipidan (Indonesia/Malaysia). Judgment of 17 December 2002. International Court of Justice Series. Issue 858 of Recueil des arrêts, avis consultatifs et ordonnances. Reports of judgments, advisory opinions and orders, United Nations Publications, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-1-070964-4[தொடர்பிழந்த இணைப்பு]