சம்பாசு சுல்தானகம்
Kesultanan Sambas ﻛﺴﻠﺘﺎﻧﻦ سمباس | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
1671–1956 | |||||||||
தலைநகரம் | சம்பாசு | ||||||||
பேசப்படும் மொழிகள் | மலாயு (அலுவல் மொழி), தயகு | ||||||||
சமயம் | இஸ்லாம் | ||||||||
அரசாங்கம் | முடியாட்சி சுல்தானகம் | ||||||||
சுல்தான் | |||||||||
• 1671-1682 | சுல்தான் முதலாம் முகம்மது சபியுத்தீன் | ||||||||
• 1931-1944 | சுல்தான் முகம்மது இபுறாகீம் சபியுத்தீன் | ||||||||
• 2008-தற்போது வரை | பஙரான் ராத்து முகம்மது தர்ஹான் | ||||||||
வரலாறு | |||||||||
• நிறுவல் | 1671 | ||||||||
• | 1944 | ||||||||
• மேற்கு கலிமந்தான் சிறப்புப் பகுதி கலைக்கப்படல் | 1956 | ||||||||
|
இந்தோனேசிய வரலாறு ஒரு பகுதி |
---|
மேலும் பார்க்க: |
வரலாற்றுக்கு முன் |
பண்டைய அரசுகள் |
கூத்தாய் (4ஆம் நூற்றாண்டு) |
தருமநகரா (358–669) |
கலிங்கம் (6ஆம்–7ஆம் நூற்றாண்டுகள்) |
சிறீவிஜயம் (7ஆம்–13ஆம் நூற்றாண்டுகள்) |
சைலேந்திர வம்சம் (8ஆம்–9ஆம் நூற்றாண்டுகள்) |
சுந்தா அரசு (669–1579) |
மெடாங்க அரசு (752–1045) |
கெடிரி அரசு (1045–1221) |
சிங்காசாரி அரசு (1222–1292) |
மயாபாகித்து (1293–1500) |
முசுலிம் அரசுகளின் எழுச்சி |
இசுலாத்தின் பரவல் (1200–1600) |
தெர்னாத்தே சுல்தானகம் (1257–தற்காலம்) |
மலாக்கா சுல்தானகம் (1400–1511) |
தெமாகு சுல்தானகம் (1475–1548) |
அச்சே சுல்தானகம் (1496–1903) |
பந்தான் சுல்தானகம் (1526–1813) |
மத்தாராம் சுல்தானகம் (1500கள்–1700கள்) |
ஐரோப்பியக் குடியேற்றவாதம் |
போர்த்துக்கேயர் (1512–1850) |
ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனி (1602–1800) |
ஒல்லாந்துக் கிழக்கிந்தியத் தீவுகள் (1800–1942) |
இந்தோனேசியாவின் தோற்றம் |
தேசிய விழிப்புணர்வு (1908–1942) |
யப்பானிய ஆக்கிரமிப்பு (1942–45) |
தேசியப் புரட்சி (1945–50) |
இறைமையுள்ள இந்தோனேசியா |
தாராளமய மக்களாட்சி (1950–57) |
வழிகாட்டப்பட்ட மக்களாட்சி (1957–65) |
புத்தாக்கத்தின் தொடக்கம் (1965–66) |
புத்தாக்கம் (1966–98) |
இந்தோனேசிய மறுமலர்ச்சி (1998–தற்காலம்) |
சம்பாசு எனப்படுவது தற்கால இந்தோனேசியாவின் கலிமந்தான் தீவில் நிலைத்திருந்த ஒரு பாரம்பரிய மலாய நாடு ஆகும்.
வரலாறு
[தொகு]சம்பாசு அரசு 1609 ஆம் ஆண்டு செப்புடாவின் வழித்தோன்றலால் நிறுவப்பட்டது. செப்புடா தனது மகளை புரூணை சுல்தானின் வழித்தோன்றலாகிய ஒருவருக்கு மணமுடித்துக் கொத்தாள். அவர்களின் பிள்ளையாகிய முதலாம் முகம்மது சைபுத்தீன் சம்பாசு அரசின் முதலாவது சுல்தான் ஆனார்.
1812 ஆம் ஆண்டு ஒல்லாந்துக் கிழக்கிந்தியக் கம்பனியினால் சம்பாசு அரசின் தலைநகரம் தாக்கப்படும் வரை இவ்வரசு இறைமையுள்ள சுதந்திர நாடாக நிலவியது. 1819 ஆம் ஆண்டு முதல் ஒல்லாந்துக்காரர்கள் இவ்வரசின் நடவடிக்கைகளில் அடிக்கடி தலையிட்டனர். அவர்களே சுல்தான் இரண்டாம் அபூபக்கர் தாஜுத்தீனை சாவகத்துக்கு நாடு கடத்தினர்.
1942 ஆம் ஆண்டு யப்பானியரால் வெற்றி கொள்ளப்படும் வரை இவ்வரசு நெடுங்காலம் ஆட்சியிலிருந்த ஆட்சியாளர்களைக் கொண்டு நிலைத்திருந்தது. 1946 ஆம் ஆண்டு மண்டோர் எனுமிடத்தில் பொந்தியானா நிகழ்வின் போது இதன் ஆட்சியாளராயிருந்த சுல்தான் இரண்டாம் முகம்மகது இபுறாகீம் சபியுத்தீன் கொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் இப்பகுதி யப்பானிய சபையினால் ஆளப்பட்ட போதிலும், 1946 இல் ஒல்லாந்துக்காரர் மீண்டதுடன் சுல்தானகம் மீளமைக்கப்பட்டது. ஒல்லாந்துக்காராரால் ஆட்சியிலமர்த்தப்பட்ட சுல்தான் 1956 ஆம் ஆண்டு இறந்தார். அதன் பின்னர் மற்றுமொரு சுல்தான் ஆட்சி பீடமேறவில்லை.
1984 இலிருந்து அரச குடும்பத்தின் தலைவராயிருந்த சம்பாசின் வினாத்தா குசுமா 2000 ஆம் ஆண்டு சுல்தானாக அங்கீகரிக்கப்பட்டதுடன் 2001 ஆம் ஆண்டு யூலைத் திங்கள் முதல் சுல்தானாகாப் பதவி வகித்தார். அவர் 2008 இல் இறந்தார். 2008 பெப்பிரவரித் திங்கள் முதல் தற்போதைய சுல்தான் முகம்மது தர்ஹான் பதவி வகிக்கிறார்.