உள்ளடக்கத்துக்குச் செல்

மலாய் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மலாயு மொழி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
மலாய் மொழி
(பகாசா மலேசியா)
Bahasa Malaysia
Bahasa Melayu
بهاس ملايو
நாடு(கள்)புரூணை
இந்தோனேசியா
மலேசியா
சிங்கப்பூர்
தெற்கு தாய்லாந்து,
தெற்கு பிலிப்பீன்சு
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
20–30 மில்லியன் மக்கள்  (date missing)
ருமி வரிவடிவம்
மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியாவில் ஆட்சி முறை; புரூணையில் ஒரு ஆட்சி முறை); சாவி எழுத்து (புரூணையில் ஒரு ஆட்சி முறை). வரலாற்றில் பல்லவா, காவி, ரென்சொங் எழுத்துகளில் எழுதப்பட்டது
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
புரூணை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, கிழக்குத் திமோர் (தொழில் மொழி)
Regulated byMajlis Bahasa Brunei Darussalam - Indonesia - Malaysia (புரூணை டாருச்சலாம் - இந்தோனேசியா - மலேசியா மொழி ஆணையம்l), டேவான் பகாசா புசுத்தாகா (மொழி மற்றும் இலக்கியம் நிறுவனம்) புசுகட் பாசா, இந்தோனேசியா
மொழிக் குறியீடுகள்
ISO 639-1ms
ISO 639-2may (B)
msa (T)
ISO 639-3Variously:
msa — Malay (generic)
mly — Malay (specific)
btj — Bacanese Malay
bve — Berau Malay
bvu — Bukit Malay
coa — Cocos Islands Malay
jax — Jambi Malay
meo — Kedah Malay
mqg — Kota Bangun Kutai Malay
xmm — Manado Malay
max — North Moluccan Malay
mfa — Pattani Malay
msi — Sabah Malay
vkt — Tenggarong Kutai Malay
{{{mapalt}}}

மலாய் மொழி (Malay, /məˈl/;[1] Bahasa Melayu, மலாயு மொழி; சாவி எழுத்துமுறை: بهاس ملايو) என்பது ஆத்திரனோசியா குடும்பத்தைச் சார்ந்த ஒரு மொழி ஆகும். இது தெற்காசியாவின் மலாயா தீவுக்கூட்டப் பிரதேசத்தில் உள்ள இந்தோனேசியா, மலேசியா, புரூணை, சிங்கப்பூர், தாய்லாந்து, பிலிப்பீன்சு ஆகிய நாடுகளில் பேசப்படுகின்றது. 15ஆம், 16ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில், இந்தப் பகுதிகளை ஆட்சி செய்த மலாக்கா சுல்தான்களின் ஆளுமையில் இந்த மொழி செல்வாக்குப் பெற்று இருந்தது.

இந்தோனேசியா, மலேசியா, புரூணை ஆகிய நாடுகளின் தேசிய மொழியாகவும், சிங்கப்பூர் நாட்டின் நான்கு அரசு அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒரு மொழியாகவும் இருந்து வருகின்றது. இந்த மொழியை மலாக்கா நீரிணையைச் சுற்றியுள்ள நிலப்பகுதிகளில், 40 மில்லியன் மக்கள், தங்களின் பூர்வீக மொழியாக பேசி வருகின்றனர். இருப்பினும், சுமத்திரா, சரவாக், போர்னியோ தீவின் மேற்கு காளிமந்தான் நிலப்பகுதிகளில் வாழும் மக்கள் மலாய் மொழியைப் பேசி வருவதால், அந்த மொழியைப் பேசுவோரின் எண்ணிக்கை 215 மில்லியனாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.[2]

மலாய் மொழிக்கு வேறு பல அதிகாரப்பூர்வ பெயர்களும் உள்ளன. பகாசா கெபாங்சான், பகாசா நேசனல் என்று சில மலேசிய மாநிலங்களில் அழைக்கப்படுகிறது. சிங்கப்பூர், புருணையில் பகாசா மலாயு என்றும்; மலேசியாவில் பகாசா மலேசியா என்றும்; இந்தோனேசியாவில் பகாசா இந்தோனேசியா என்றும்; அழைக்கப்படுகின்றது.

மொழி பிறப்பிடம்

[தொகு]

மலாய் மொழியின் பிறப்பிடம் சுமத்திரா தீவாகும். அந்த மொழியின் மற்ற உறவு மொழிகளான மினாங்கபாவ் மொழியும் இங்குதான் தோன்றியது. தென் சுமத்திராவின் தாத்தாங் ஆற்றுப் பகுதிகளில் 7ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன. அந்தக் கல்வெட்டுகளில் மலாய் எழுத்துகள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
Wikipedia
Wikipedia
கட்டற்ற கலைக்களஞ்சியம் விக்கிபீடியாவின் மலாய் மொழிப் பதிப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலாய்_மொழி&oldid=3794448" இலிருந்து மீள்விக்கப்பட்டது