சாம் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சாம்
உராங் சாம்பா
வியட்நாமின் நா சேங் நகரிலுள்ள ஒரு கோவிலில் நடனமாடும் சாம் இனப்பெண்கள்
மொத்த மக்கள்தொகை
400,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 கம்போடியா217,000
 வியட்நாம்162,000
 மலேசியா10,000
 சீனா5,000
 தாய்லாந்து4,000
 ஐக்கிய அமெரிக்கா3,000
 பிரான்சு1,000
 லாவோஸ்800
மொழி(கள்)
சாம் மொழி, வியட்நாமிய மொழி, கெமர் மொழி, மலாய் மொழி
சமயங்கள்
பெரும்பாலும் சுன்னி இசுலாம் (கம்போடியா, மலேசியா),
இந்து சமயம் (வியட்நாம்),
பௌத்தம் (தாய்லாந்து),
சியா இசுலாம் (சீனா)
தொடர்புள்ள இனக்குழுக்கள்
யாராய் மக்கள், ராதே மக்கள், ஆச்சேனிய மக்கள், உட்சுல் மக்கள், மலாய் மக்கள், தென்கிழக்காசியாவைச் சேர்ந்த பிற ஆஸ்திரோனீசிய மக்களினங்கள்.

சாம் (Chams) அல்லது சாம் மக்கள் (Cham people, சாம் மொழி: Urang Campa,[1] வியட்நாமியம்: người Chăm or người Chàm, கெமர்: ជនជាតិចាម), எனப்படுவோர் தென்கிழக்காசியாவில் வாழும் ஆசுத்திரனீசிய இனக்குழுவாகும். பாரம்பரியமாக இவர்கள் கம்போடியாவின் காம்பொங் சாம் மாகாணம், மற்றும் தெற்கு வியட்நாமில் பான் ராங்-தாப் சாம், பான் தியெத், ஹோ சி மின் நகரம், ஆன் கியாங் மாகாணம் ஆகியவற்றிடையே வாழ்கின்றனர். புலம்பெயர்ந்தவர்கள் உட்பட இவர்களின் மக்கள்தொகை கிட்டத்தட்ட 400,000 ஆகும். இவர்களை விட முதலாம் இராமாவின் ஆட்சிக் காலத்தில் புலம்பெயர்ந்த 4,000 பேர் வரை தாய்லாந்து, பேங்காக் நகரில் வாழ்ந்து வருகிறார்கள். சாம் இனத்தவர்கள் பலர் போல் போட் கொடுங்கோலாட்சியின் போது மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்து, உள்ளூர் மலாய்களுடன் கலந்தனர். கம்போடியா, வியட்நாம் நாடுகளில் உள்ள முசுலிம் இனத்தவர்களில் பெரும்பாலானோர் சாம் மக்களாவர்.[2][3][4]

கிபி 2-ஆம் நூற்றான்டு முதல் 15-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை சாம் இனத்தவர்கள் மத்திய, தெற்கு வியட்நாமின் சாம்பா என்ற சுயாட்சி பெற்ற பிராந்தியத்தில் வாழ்ந்து வந்தனர். இவர்கள் சாம் மொழியைப் பேசினர். இது ஆஸ்திரனேசியக் குடும்பத்தின் மலாய-பொலினீசிய மொழி ஆகும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாம்_மக்கள்&oldid=3586885" இருந்து மீள்விக்கப்பட்டது