முதலாம் இராமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரா புத்தா யோத்ஃபா சூலாலோக்கி
Phra Buddha Yodfa Chulaloke
พระบาทสมเด็จพระพุทธยอดฟ้าจุฬาโลก
முதலாம் இராமா மன்னர்
சியாமின் மன்னர்
ஆட்சிக்காலம்6 ஏப்ரல் 1782 – 7 செப்டம்பர் 1809
முடிசூட்டு விழா21 சூன் 1782
முன்னையவர்தோன்புரியின் தக்சின்
பின்னையவர்பிரா புத்தலோத்தியா நபாலாய் (இரண்டாம் இராமா)
துணை மன்னர்மகா சூர சிங்கநாத்
சராசுந்தோர்ன் (பின்னர் இரண்டாம் இராமா)
பிறப்பு(1736-03-20)20 மார்ச்சு 1736
அயூத்தியா, அயூத்தியா இராச்சியம்
இறப்பு7 செப்டம்பர் 1809(1809-09-07) (அகவை 72)
பெரிய அரண்மனை, தாய்லாந்து, பேங்காக், தாய்லாந்து
துணைவர்அரசி அமரீந்திரா
குழந்தைகளின்
பெயர்கள்
42 பேர் (பல்வேறு மனைவிகளிடம் இருந்து)
மரபுசக்கிரி அரசமரபு
தந்தைதோங்டி (பின்னர் சோம்தெட் பிரா பிராதோம் போரம் மகா ராஜ்சானோக்)
தாய்தாவோரெயுங்
மதம்பௌத்தம்

பிரா புத்தயோப்தா சூலாலோக் (Phra Phutthayotfa Chulalok, தாய் மொழி: พระพุทธยอดฟ้าจุฬาโลก), பிறப்பு தொங்துவாங் (Thongduang, தாய் மொழி: ทองด้วง) அல்லது முதலாம் இராமா (Rama I) (20 மார்ச் 1737 – 7 செப்டம்பர் 1809), இரத்தனகோசின் இராச்சியத்தை நிறுவியவரும், சியாமின் (இன்றைய தாய்லாந்தின்) சக்கிரி அரசமரபின் முதலாவது மன்னரும் ஆவார். தாய் மொழியில் இவரது முழுப் பட்டப் பெயர் பிரா பாத் சோம்தெத் பிரா பரமோருராச்சா மகாசக்கிரிபரமோமானத் பிரா புத்தயோஃப்த்தா சூலாலோக் என்பதாகும்.[1] 1782 இல் தோன்புரி பேரரசர் தக்சினை பதவியில் இருந்து அகற்றிய கிளர்ச்சியின் பின்னர் இவர் மன்னரானார். இவர் மீள ஒன்றிணைக்கப்பட்ட இராச்சியத்தின் தலைநகராக இரத்தினகோசின் நகரை அமைத்தவர் என்பதற்காகப் புகழப்படுகிறார்.

தொங்துவாங் (முதலாம் இராமா) சுகோத்தாய் இராச்சியத்தின் வழிவந்த மொன் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை அயூத்தியா இராச்சியத்தில் அரச நீதிமன்றத்தில் பணியாற்றியவர்.[2][3] இவரது தாயார் தாவோரெயுங் (யொக்) சீன-வம்சாவளி ஆவார்.[4][5][6] இவருடன் கூடப் பிறந்தவர்கள் அறுவர் ஆவர்.

தொங்துவாங் தக்சின் மன்னருடன் இணைந்து பர்மிய கொன்பாவுங் அரசமரபினருடன் போர்களில் பங்குபற்றி, சியாமின் ஒன்றிணைவுக்குப் பெரும் பங்காற்றினார். இக்காலகட்டத்தில் தொங்துவாங் சியாமின் மிகவும் பலம் பொருந்திய இராணுவத் தலைவர் எனப் பெயர் பெற்றார்.[7] 1782 ஆம் ஆண்டில், சியாமைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, தன்னை மன்னராக அறிவித்தார். இவரது காலத்தில் பர்மிய-சியாம் போர் (1785) இடம்பெற்றது. இதுவே சியாம் மீது பர்மியர்களின் கடைசிப் பெரும் தாக்குதல் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

முதலாம் இராமா
சக்கிரி அரசமரபு
பிறப்பு: 20 மார்ச் 1737 இறப்பு: 7 செப்டம்பர் 1809
அரச பட்டங்கள்
முன்னர்
தக்சின்
(
தோன்புரி மன்னர்)
சியாம் மன்னர்
1782–1809
பின்னர்
இரண்டாம் இராமா
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலாம்_இராமா&oldid=2897108" இலிருந்து மீள்விக்கப்பட்டது