உள்ளடக்கத்துக்குச் செல்

கென்னியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென்னியா
Kenyah
1944-க்கு முந்தைய வடக்கு கலிமந்தான் பகுதியில் ஓர் இளம் கென்னியா குடும்பம்.
மொத்த மக்கள்தொகை
69,256 (2000)[1]
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
போர்னியோ:
 இந்தோனேசியா
(கிழக்கு கலிமந்தான்)
44,000 (2000)[2]
 மலேசியா
(சரவாக்)
25,000 (2000)[2]
மொழி(கள்)
கென்னியா மொழி, இந்தோனேசிய மொழி, மலேசிய மொழி சரவாக் மலாய் மொழி
சமயங்கள்
கிறிஸ்தவம் (பெரும்பான்மை-94,27%), புங்கான் (நாட்டுப்புற மதம்),[3] இசுலாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பாகாய் மக்கள், காயான், பெனான்
கென்னியா நடனம்.

கென்னியா அல்லது கென்னியா மக்கள் (மலாய்: Kaum Kenyah; ஆங்கிலம்: Kenyah People) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில்; ஆஸ்திரோனீசிய மொழிகள் பேசும் பழங்குடிகள் மக்களாகும்.

சரவாக் மாநிலத்தின் மிரி மாவட்டம்; காப்பிட் மாவட்டம்; பிந்துலு மாவட்டம்; பெலாகா மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக வாழும் பெரிய பழங்குடி இன மக்களாக அறியப் படுகிறார்கள். தவிர இந்தோனேசியாவின் வடக்கு கலிமந்தான் மற்றும் கிழக்கு கலிமந்தான் பகுதிகளிலும் அதிகமாகக் காணப் படுகிறார்கள்.

பொது[தொகு]

கென்னியா மக்கள் பல்வேறு பழங்குடி துணைக் குழுக்களாக (குலங்கள்) பிரிக்கப்பட்டு உள்ளனர். இந்தத் துணைக் குழுக்களை லெப்போ அல்லது லெபோ (Lepo Tribes; Lebo Clans) என்று அழைக்கிறார்கள்.

 • லெப்போ அனான் (Lepo Anan)
 • லெப்போ தாவு (Lepo Tau)
 • லெப்போ சாலான் (Lepu Jalan)
 • லெப்போ தெப்பு (Lepo Tepu)
 • லெப்போ அகாக் (Lepo Agak)
 • உமா கிலிப் (Uma Kelep)
 • உமா உசோக் (Uma Ujok)
 • உமா பாவா (Uma Pawa)
 • உமா கூலிட் (Uma Kulit)
 • உமா அலிம் (Uma Alim)
 • உமா லாசான் (Uma Lasan)
 • லெப்போ மாவுட் (Lepo Ma-ut)
 • லெப்போ கே (Lepo Ke)
 • லெப்போ நிகா (Lepo Ngao)
 • லோங் ஊலாய் (Long Ulai)
 • லோங் திக்கான் (Long Tikan)
 • லோங் சபத்து (Long Sabatu)
 • லெப்போ கா (Lepo Ga)
 • லெப்போ திகான் (Lepo Dikan)
 • லெப்போ பெம் (Lepo Bem)
 • லெப்போ இம்போ (Lepo Embo)
 • லெப்போ புவா (Lepo Pua)

வாழ்வியல்[தொகு]

கென்யா கட்டிடக்கலை; c.1898-1900.

கென்னியா மக்கள், பாரம்பரியமாக வேளாண்வாதிகள்; பெரும்பாலும் நீளவீடுகளில் (Uma Dado) வாழ்கின்றனர். ஒவ்வொரு நீளவீட்டிலும் வாழ்பவர்கள், தங்கள் சொந்தத் தலைவரைத் தேர்ந்து எடுத்துக் கொள்வார்கள்.[4]

அறுவடைத் திருவிழா போன்ற ஒரு நிகழ்வு அல்லது கொண்டாட்டம் வந்தால், அவர்கள் பொதுவாக நீளவீட்டின் தாழ்வாரத்தில் (Longhouse Verandah) ஒன்றுகூடுவார்கள். தங்களின் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கான உரைகளை நிகழ்த்துவார்கள்.[5]

ஆக்கப்பூர்வமான மக்கள்[தொகு]

கென்னியா மக்கள் மிகவும் ஆக்கப்பூர்வமான மக்கள். அவர்கள் சொந்தமாகவே தங்களின் பிரபலமான பாடல்களை இயற்றியவர்கள். "லான் இ துயாங்" (Lan e Tuyang), "கெண்டாவ் பிம்பின்" (Kendau bimbin) மற்றும் "லெலெங் ஓயாவ் அலோங் லெலெங்" (Leleng Oyau Along Leleng) போன்ற மெல்லிசைப் பாடல்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.[6]

இவர்களின் பிரபலமான பாரம்பரிய கென்னியா இசைக் கருவிக்கு சத்துங் உத்தாங் (Jatung Utang) என்று பெயர். மற்றோர் இசைக்கருவியின் பெயர் சாப்பே (Sapeh).[7]

மேற்கோள்கள்[தொகு]

 1. William W. Bevis (1995). Borneo Log: The Struggle For Sarawak's Forests. University of Washington Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780295974163.
 2. 2.0 2.1 Wil de Jong, Denyse Snelder & Noboru Ishikawa (2012). Transborder Governance of Forests, Rivers and Seas. Routledge. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-11-365-3809-4.
 3. Paul C. Y. Chen, ed. (1990). Penans: The Nomads of Sarawak. Pelanduk Publications. p. 35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 96-797-8310-3.
 4. Bagoes Wiryomartono (2014). Perspectives on Traditional Settlements and Communities: Home, Form and Culture in Indonesia. Springer Science & Business Media. p. 170. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-98-145-8505-7.
 5. Reimar Schefold, P. Nas & Gaudenz Domenig (2004). Indonesian Houses: Tradition and transformation in vernacular architecture. Singapore University Press. p. 318. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 99-716-9292-9.
 6. Terry Miller & Sean Williams, ed. (2011). The Garland Handbook of Southeast Asian Music. Routledge. p. 412. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-11-359-0155-4.
 7. Margaret J. Kartomi (1985). Musical Instruments of Indonesia. Indonesian Arts Society. p. 51. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 09-589-2250-0.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்னியா&oldid=3646137" இலிருந்து மீள்விக்கப்பட்டது