பஜாவு மக்கள்


பஜாவு மக்கள் (Sama-Bajau), இந்தோனேசியாவின் சுலாவெசி தீவைச் சுற்றியுள்ள பண்டா கடல், சுலாவெசி கடல், மலுக்கு கடல் என்பவற்றில் வாழும் உலகின் இறுதி கடல் நாடோடி இன மக்கள் ஆவார். இம்மக்கள் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பீன்ஸ் ஆகியவற்றின் கடல் நீரோட்டங்களில் முதன்மையாக வசிக்கின்றனர்.
பஜாவு மக்கள் ஆஸ்திரேலினிசிய இனத்தினர் ஆவார். இம்மக்கள் கடல் ஓரங்களில் மூங்கில் வீடுகளை கட்டிக் கொண்டு, லெப்சா எனும் நீண்ட படகுகளில் கடலைக் கடந்து மீன்கள், பவழங்கள், அரிய கடல் பொருட்களை ஈட்டி, கடற்கரையில் கொண்டு வந்து பிற மக்களுக்கு விற்று வாழ்கின்றனர்.
பஜாவு மக்கள் கடலில் 60 அடி ஆழத்தில் தங்கி, ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடலில் முக்குளிக்கும் விதமாக அவர்களது உடலமைப்பு இயற்கையாக அமைந்துள்ளது.
3,37,000 மக்கள்தொகை கொண்ட பஜாவு மக்களில் 99.7% இசுலாம் சமயத்தையும், 0.3% மக்கள் கிறித்துவத்தையும் பின்பற்றுகின்றனர்.[1] பஜாவு மக்கள் சமா-பாஜாவு மொழிகள் பேசுகின்றனர்.[2]
மேற்கோள்கள்[தொகு]
காணொலிகள்[தொகு]
செய்தித் தாள்களில் பஜாவு மக்கள்[தொகு]
- Journey in Borneo with Bajaus பரணிடப்பட்டது 2019-02-16 at the வந்தவழி இயந்திரம் by Réhahn
- Bajaus Children at the Daily Mail
- More information on the Bajaus at the பிபிசி
- The last of the sea nomads at தி கார்டியன்
[பகுப்பு:தென்கிழக்காசிய இனக்குழுக்கள்]]