மலுக்கு கடல்
மலுக்கு கடல் | |
---|---|
லவ்ட் மாலுகு | |
தெற்காசியப் பகுதியில் மொலக்கா கடலின் அமைவிடம் | |
அமைவிடம் | தென்கிழக்கு ஆசியா |
வகை | கடல் |
வடிநில நாடுகள் | இந்தோனேசியா |
குடியேற்றங்கள் | டெர்னேட் நகரம் |
மொலக்கா கடல் (The Moluccan Sea) (Indonesian: Laut Maluku) இந்தோனேசியாவிற்கு அருகில் மேற்கு அமைதிப் பெருங்கடலில் அமைந்துள்ள கடற்பரப்பாகும். சுலாவெசி என்ற இந்தோனேசியத் தீவுகளை மேற்கிலும், அல்மஹேராவை கிழக்கிலும், சுலா தீவுகளைத் தெற்கிலும் கொண்டுள்ளது. மொலக்கா தீவின் மொத்த பரப்பானது 77,000 சதுர மைல்கள் (200,000 சதுர கிலோமீட்டர்கள்) ஆகும். இந்த மொலக்கா கடலானது பவள வளம் நிறைந்ததாகும். இதன் ஆழம் காரணமாக நீரில் குதித்து மூழ்குதல் விளையாட்டிற்கான தலங்களைக் கொண்டுள்ளது. நீரின் ஆழம் இக்கடல் பகுதியை மூன்று மண்டலங்களாக பிரிக்கும் காரணத்தை விளக்குகிறது. பசிபிக் பெருங்கடலில் இருந்து வரும் நீர் இப்பகுதியைச் சுற்றியுள்ள ஆழம் குறைந்த கடல்களுக்கு கடத்தும் வேலையைச் செய்கிறது. மொலக்கா கடலின் மிக ஆழமான பகுதி 15,780-அடி (4,810-மீட்டர்) ஆழமுள்ள பட்ஜான் (Indonesian: Bacan) வடிநிலமாகும். இந்த பகுதி காலமுறையாக பூகம்ப அனுபவங்களுக்குப் பெயர் பெற்றது. இது கடலின் பரப்பிலிருந்தே ஒரு நுண்ணிய தட்டாக உருவாகிறது. இதில் மொலக்கா கடலை இரண்டு எதிர் திசைகளிலும் பின்வாங்குகிறது:ஒன்று யூரேசிய தட்டின் திசைக்கு மேற்காகவும், மற்றொன்று பிலிப்பைன்ஸ் கடல் தட்டு திசைக்கு கிழக்காகவும் பின்வாங்குகிறது.
அமைவிடம்
[தொகு]மொலக்கா கடலானது தெற்கே பாண்டா கடல் மற்றும் மேற்கில் செலிபஸ் கடல் வடக்கே பிலிப்பைன் கடல் மற்றும் கிழக்கே ஹல்மாஹரா கடல் ஆகியவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது. மொலக்கா கடலின் எல்லையோரங்களில் வடகிழக்கில் ஹல்மஹேரா தீவையும், மையத்தில் புரு மற்றும் செராம் தீவையும் மற்றும் மேற்கில் சுலவேசி தீவையும் கொண்டுள்ளது. டாலவ்டு தீவுகள் இக்கடலின் வடக்கு எல்லையாகக் கருதப்படுகிறது. இக்கடலின் பெயரால் அழைக்கப்படும் மொலக்கா நிலவியல் தட்டு வடக்கே நீண்டு செல்கிறது. சர்வதேச நீர்ப்பரப்பு நிறுவனமானது (IHO) மொலக்கா கடலை கிழக்கிந்திய ஆர்ச்சிபெலேகோ கடல்களுக்குள் ஒன்றாக வரையறுக்கிறது. சர்வதேச நீர்ப்பரப்பு நிறுவனமானது இக்கடலின் எல்லைகளைப் பின்வருமாறு வரையறுக்கிறது:[1]
வடக்கில் செலிபஸ் தீவுகளின் வடகிழக்கு ஓர எல்லையிலிருந்து சியாவு வழியாக சுலவேசி தீவுகள் மற்ம் சாங்கிர் தீவின் தெற்கு முனைக்கு வரையப்பட்ட கோடு (3°21′N 125°37′E / 3.350°N 125.617°E) அங்கிருந்து டாலவ்டு தீவுகளின் தெற்கு அதிஎல்லைக்கு இத்தீவுகளின் வழியாக வரையப்பட்டு பின் வடகிழக்கு அதிஎல்லைக்கும் (4°29′N 126°52′E / 4.483°N 126.867°E) மேலும் அங்கிருந்து மோரோட்டி தீவின் வடக்கு முனையான டான்ஜோங்கிற்கு வரையப்பட்ட கோடு
கிழக்கில் வாஜாபோயேலா அளவிற்குத் தெற்கில் டான்ஜோங் சோபியிலிருந்து மோரோடாயின் மேற்கு கடற்கரையோரம் (2°17′N 128°12′E / 2.283°N 128.200°E), அங்கிருந்து ஹால்மஹேரா மற்றும் டான்ஜோங் லிபோலோவின் தெற்கு அதிஎல்லைக்கு மேற்கு கடற்கரையின் கீழாக
தெற்கில் ஹால்மஹேராவின் தெற்கு அதிஎல்லையிலிருந்து பிசா(செடைல்) தீவின் வடமுனைக்கான கோடு, அங்கிருந்து ஒபி மேஜரின் வடக்கு அதி எல்லைக்கு, டான்ஜாங் அகே லாமோவின் தென்மேற்கு முனைக்கு இத்தீவின் வழியாக, அங்கிருந்து டான்ஜாங் டெஹேகோலனா,(சுலா தீவுகளின் சோயெலாவின் கிழக்கு அதியெல்லை), டான்ஜாங் மேரிகாசோவின் மேற்கு அதியெல்லைக்கு வடக்கு கரைகளின் வழியாக, அங்கிருந்து பாங்காய் தீவின் தென்கிழக்கு முனைக்கு ஒரு கோடு (1°43′S 123°36′E / 1.717°S 123.600°E).
மேற்கில். பாங்காயின் கிழக்கு கடற்கரை மற்றும் பெலெங் தீவுகளிலிருந்து வடக்கு பாங்காளான் வரை (1°10′S 123°18′E / 1.167°S 123.300°E) அங்கிருந்து Tg.போடோக்கிற்கு (செலிபெஸ்) (1°04′S 123°19′E / 1.067°S 123.317°E) கடற்கரையைச் சுற்றி Tg. பாசிர் பான்ட்ஜங்கிற்கு (0°39′S 123°25′E / 0.650°S 123.417°E) மற்றும் குறுக்காக Tg. டோம்பாலிலாடோவிற்கு (0°18′24″N 123°20′44″E / 0.30667°N 123.34556°E) எதிர் கரையில், அங்கிருந்து மேலாக கிழக்கு கரை Tg.போயிசான், செலிபெஸின் வடகிழக்கு அதியெல்லைக்கு.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Limits of Oceans and Seas, 3rd edition" (PDF). International Hydrographic Organization. 1953. Archived from the original (PDF) on 8 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 February 2010.