மலேசியத் தெலுங்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மலேசியத் தெலுங்கர் எனப்படுவோர் இந்தியாவிலிருந்து மலேசியாவிற்கு இடம்பெயர்ந்த தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர் ஆவர். பெரும்பாலான மலேசியத் தெலுங்கர்கள் மலேசியாவிற்கு ஆங்கிலேயர்களால் அழைத்து வரப்பட்டவர்களின் நான்காவது, ஐந்தாவது தலைமுறையினர் ஆவர். இவர்களின் தாயகம் சென்னை மாகாணம் (ஆந்திரப் பிரதேசமும் தமிழ்நாடும் இணைந்திருந்த பகுதி) ஆகும். சிலர் வங்காளத்திலிருந்தும் ஒரிசாவிலிருந்தும் மலேசியாவிற்கு வந்தவர்களாவர்.

அதிகாரப்பூர்வ அறிக்கை நாற்பதாயிரம் தெலுங்கு பேசும் மக்கள் மலேசியாவில் வசிப்பதாக தெரிவிக்கிறது. இருப்பினும் தெலுங்கர்களின் எண்ணிக்கை இருநூறாயிரம் இருக்கக் கூடும் என்று மலேசியத் தெலுங்கு சங்கம் தெரிவித்துள்ளது. [1] மலேசியாவில் வாழும் இந்தியர்கள் பெரும்பான்மையானோர் தமிழர்கள் எனினும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் மலையாளிகளும் தெலுங்கர்களும் சீக்கியர்களும் இங்கு வசிக்கின்றனர். ஒரு வகுப்பில் பதினைந்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரு மொழியைத் தாய்மொழியாக படிக்க விரும்பினால் மலேசிய அரசு அதற்கான வசதிகளை வழங்கும். இவ்வகையில் மலேசியாவில் இயங்கும் சில பள்ளிகளில் தெலுங்கும் தாய்மொழியாகக் கற்பிக்கப்படுகிறது. [2]

இவர்கள் யுகாதி பண்டிகையை கொண்டாடுகின்றனர். [3] [4]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசியத்_தெலுங்கர்&oldid=1706219" இருந்து மீள்விக்கப்பட்டது