உள்ளடக்கத்துக்குச் செல்

லுன் பாவாங் மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுன் பாவாங் மக்கள்
Lun Bawang People
Orang Lun Bawang
பாரம்பரிய உடையில் லுன் பாவாங் பெண்கள்.
மொத்த மக்கள்தொகை
39,461
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
போர்னியோ:
 மலேசியா
 சரவாக், சபா, லபுவான், தீபகற்ப மலேசியா
12,800 (1982 SIL)[1]
          சபா9,125 (2012 SIL)[2]
          சரவாக்16,038 (2010 census)[3]
 இந்தோனேசியா25,000 (1987 census)[4]
 புரூணை1,661[5]
மொழி(கள்)
லுன் பாவாங் மொழி (துணை மொழிகள்: துருசான், லுன் டாயே, பப்பாடி, லுன் டாயா, அடாங், தபூன், திரேங், கொலூர், படாஸ், லெப்பு பொத்தோங்), (இந்தோனேசிய மொழிகள்), மலேசிய மொழிகள், சரவாக் மலாய் மொழி
சமயங்கள்
கிறிஸ்தவம் (முதன்மையாக), ஆன்மீகம், இஸ்லாம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
கெலாபிட் மக்கள், லெங்கிலு, புடோ, சபான் மக்கள் & டிரிங்

லுன் பாவாங் மக்கள் அல்லது துருசான் மூருட் மக்கள் (ஆங்கிலம்: Lun Bawang; Trusan Murut; Southern Murut; மலாய்: Lun Bawang; Lundayeh; Murut kolor; Murut Sipitang; சீனம்: 伦巴旺族) என்பவர்கள் தென்கிழக்கு ஆசியாவின் போர்னியோ தீவில் காணப்படும் ஓர் இனக்குழு ஆகும்.

சபா மாநிலத்தின் (உட்பகுதி பிரிவு); சரவாக் மாநிலத்தின் (லிம்பாங் பிரிவு); வடக்கு கலிமந்தான்; மெந்தாராங் தேசியப் பூங்கா (Kayan Mentarang National Park); மற்றும் லோங் பாவான் (Long Bawan); புரூணை நாட்டின் தெம்புரோங் மாவட்டம் ஆகிய பகுதிகளில் காணப்படும் ஓர் இனப் பிரிவு மக்களாகும்.

பொது

[தொகு]

மலேசிய மாநிலமான சரவாக்கில், லுன் பாவாங் இனத்தவர் ("மூருட்" எனும் பிரிவின் கீழ்) சரவாக் அரசியலமைப்பால் (Constitution of Sarawak) அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளனர்.[6] ஓராங் உலு (Orang Ulu) மக்கள் பிரிவின் கீழ் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

சபா மாநிலத்திலும்; கலிமந்தானில் உள்ள கிரேயான் உயர்நிலத்திலும் (Krayan Highland), இவர்கள் "லுண்டாயே" (Lundayeh) அல்லது "லுன் டேயே" (Lun Daye) என்று அழைக்கப் படுகின்றனர்.

புரூணையில், இவர்கள் புரூணையின் 7 பூர்வீக மக்களில் (பழங்குடி மக்கள்) ஒரு பிரிவினராக அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அங்கு இவர்கள் "மூருட்" என்று அழைக்கப் படுகின்றனர். மற்றும் லின் லோட் (Lun Lod), லுன் பா (Lun Baa), லுன் தானா லூன் (Lun Tana Luun) போன்ற பிற பெயர்களும் உள்ளன.[7]

சொற்பிறப்பியல்

[தொகு]

லுன் பாவாங் என்ற சொல்லுக்கு நாட்டின் மக்கள் அல்லது பூர்வீக மக்கள் என்று பொருள். ஆற்றின் கீழ் அல்லது கடலுக்கு அருகில் வாழும் மக்கள் என்றும் பொருள் உண்டு.

மற்ற பெயர்கள் அவர்களின் நெல் சாகுபடியின் புவியியல் குறிப்பில் இருந்து பெறப் பட்டவை. எடுத்துக்காட்டாக, சதுப்பு நிலங்களில் ஈரமான நெல்லைப் பயிரிடுபவர்களுக்கு லுன் பா (Lun Baa) என்று பெயர். உலர் நெல்லைப் பயிரிடுபவர்களுக்கு லுன் தானா லூன் (Lun Tana' Luun) என்று பெயர்.[8]

லுன் பாவாங் மக்கள் தங்களை ஒருபோதும் "மூருட்" என்று அழைத்துக் கொள்வது இல்லை. இருப்பினும் பிரித்தானிய காலனித்துவ காலத்தில், லுன் பாவாங் மக்கள் "மூருட்" என்று அடையாளம் காணப்பட்டனர். மூருட் எனும் பெயர் மூருட் மலை என்ற சொல்லில் இருந்து பெறப்பட்டு இருக்கலாம்.[9]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Launching of Report On The Key Findings Population and Housing Census of Malaysia 2020". Department of Statistics Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2022-02-28.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Iban of Indonesia". People Groups. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  3. Buku Tahunan Perangkaan Sarawak / Yearbook of Statistics Sarawak 2015 (PDF). Jabatan Perangkaan Malaysia Negeri Sarawak / Department of Statistics Malaysia Sarawak. pp. 25–26. பார்க்கப்பட்ட நாள் 19 November 2017.
  4. Ethnologue report for language code:lnd
  5. Keat Gin, Ooi (2015-12-14). Brunei – History, Islam, Society and Contemporary Issues. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781317659983. பார்க்கப்பட்ட நாள் 3 March 2017.
  6. Constitution of Malaysia (ed.), Article 162 (7)
  7. Laws of Brunei, Chapter 15: Brunei Nationality Act, ed. (25 September 2010), 4(2) (PDF), p. 4{{citation}}: CS1 maint: numeric names: editors list (link)
  8. Daniel Chew, ed. (2004), Borders of kinship and ethnicity: cross-border relations between the Kelalan Valley, Sarawak, and the Bawan Valley, East Kalimantan, பார்க்கப்பட்ட நாள் 10 April 2008
  9. Appel, G.M., ed. (September 1969), The Status of Research among the Northern and Southern Muruts (PDF), vol. 1, Maine, USA: Association for Asian Studies at Brandeis University, pp. 18–21, பார்க்கப்பட்ட நாள் 10 April 2008

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lun Bawang people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுன்_பாவாங்_மக்கள்&oldid=4086510" இலிருந்து மீள்விக்கப்பட்டது