செக் ஓங் மக்கள்
Cheqwong / Chewong / Che' Wong / Ceq Wong Si Wong / Siwong / Siwang / Beri / Chuba / Cewong | |
---|---|
பகாங் குராவ் வனவிலங்கு காப்பகத்தில் குழந்தையுடன் ஒரு செக் ஓங் மனிதர். | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
மலேசியா: | |
பகாங் | 818 (2010)[1] |
மொழி(கள்) | |
செக் ஓங் மொழி, மலாய் மொழி | |
சமயங்கள் | |
ஆன்மவாதம்,இசுலாம், கிறிஸ்தவம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
ஜெகாய மொழிகள் பேசுவோர் மலேசியப் பழங்குடியினர் செனோய் மக்கள் |
செக் ஓங் அல்லது செக் ஓங் மக்கள் (ஆங்கிலம்: Cheq Wong people; மலாய்: Orang Cheq Wong) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் ஒராங் அஸ்லி இனக்குழுவைச் சேர்ந்தவர்கள்; பகாங் மாநிலத்தை மையமாகக் கொண்ட செனோய் மக்கள் ஆவார்கள்.
செனோய் மக்களின் உடல் தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், அவர்கள் பேசும் செக் ஓங் மொழி என்பது வடக்கு அசிலியான் மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது.[2]
பொது
[தொகு]செக் ஓங் மொழி என்பது வடக்கு அசிலியான் மொழிகளின் ஒரு பகுதியாகும்.[3] செக் ஓங் மக்களும்; கென்சியூ பழங்குடி மக்களும் தொலை தூரங்களில் வாழ்ந்தாலும், கென்சியூ மொழியில் இருந்து 4% சொற்கள், செக் ஓங் மொழிக்குள் கடன் வாங்கப்படு உள்ளன.[4]
செக் ஓங் மக்களில் பலர், தித்திவாங்சா மலைத்தொடர் மழைக்காடுகளின் விளிம்புகளில் வாழ்கின்றனர். இருப்பினும் இந்த மக்களில் பலர் பகாங் ரவுப் மாவட்டத்தில் அதிகமாக வாழ்கின்றனர்.
குடியிருப்புப் பகுதிகள் பாதிப்பு
[தொகு]செக் ஓங் மக்கள் முன்பு தீபகற்ப மலேசியா, பகாங் மாநிலத்தின், இரண்டு பகுதிகளில் மட்டுமே காணப்பட்டனர். அதாவது குராவ் வனவிலங்கு காப்பகம்; மற்றும் பகாங்கில் உள்ள ரவுப் மாவட்டம்.[5] இருப்பினும் தற்போது தெமர்லோ மற்றும் பகாங்கில் உள்ள ஜெராண்டுட் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் காணப் படுகின்றனர்.[6][7]
அண்மைய மேம்பாட்டுத் திட்டங்களினால், செக் ஓங் மக்களின் குடியிருப்புப் பகுதிகள் பாதிப்பு அடைந்துள்ளன. காட்டு மரம் வெட்டுதல், சாலைகள் அமைத்தல் மற்றும் சுற்றுலாவுக்கான கோலா கண்டா யானைகள் பாதுகாப்பு மையம் போன்ற செயல்பாடுகளினால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.[1] இந்தச் செயல்பாடுகளினால், செக் ஓங் மக்களின் சில குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப் பெருக்குகள் ஏற்படுகின்றன; ஆறுகளும் மாசுபடுவதற்கு வழிவகுக்கின்றன.[8]
செக் ஓங் மக்கள் தொகை
[தொகு]மலேசியாவில் செக் ஓங் மக்கள் தொகை (2010):-
ஆண்டு | 1960[9] | 1965[9] | 1969[9] | 1974[9] | 1980[9] | 1982[5] | 1996[9] | 2000 | 2003 | 2004[10] | 2010[1] |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மக்கள் தொகை | 182 | 268 | 272 | 215 | 203 | 250 | 403 | 234 | 664 | 564 | 818 |
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Kirk Endicott (2015). Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli. NUS Press. p. 2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4.
- ↑ Signe Howell (1984). Society and Cosmos: Chewong of Peninsular Malaysia. Oxford University Press. p. 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 01-958-2543-8.
- ↑ Đăng Liêm Nguyêñ (1974). South-East Asian Linguistic Studies, Volume 2. Department of Linguistics, Research School of Pacific Studies, Australian National University. p. 82. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 08-588-3143-0.
- ↑ Signe Howell (1984). Society and Cosmos: Chewong of Peninsular Malaysia. Oxford University Press. p. 8. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 01-958-2543-8.
- ↑ 5.0 5.1 Signe Howell (1982). Chewong Myths and Legends. Council of the M.B.R.A.S. p. xiii.
- ↑ Tarmiji Masron, Fujimaki Masami & Norhasimah Ismail (October 2013). "Orang Asli in Peninsular Malaysia: Population, Spatial Distribution and Socio-Economic Condition" (PDF). Journal of Ritsumeikan Social Sciences and Humanities Vol.6. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
- ↑ Project, Joshua. "Che Wong, Siwang in Malaysia". joshuaproject.net (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 12 September 2024.
- ↑ "High time to say 'tidak boleh'". The Star. 13 May 2017. பார்க்கப்பட்ட நாள் 2017-11-20.
- ↑ 9.0 9.1 9.2 9.3 9.4 9.5 Nobuta Toshihiro (2009). "Living On The Periphery: Development and Islamization Among Orang Asli in Malaysia" (PDF). Center for Orang Asli Concerns. பார்க்கப்பட்ட நாள் 2017-10-27.
- ↑ Alberto Gomes (2004). Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads. Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 11-341-0076-0.
சான்று நூல்கள்
[தொகு]- Kirk Endicott (2015), Malaysia's Original People: Past, Present and Future of the Orang Asli, NUS Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-99-716-9861-4
- Alberto Gomes (2004), Modernity and Malaysia: Settling the Menraq Forest Nomads, Routledge, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 11-341-0076-0
- Roy Davis Linville Jumper & Charles H. Ley (2001), Death Waits in the "dark": The Senoi Praaq, Malaysia's Killer Elite, Greenwood Publishing Group, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 03-133-1515-9
மேலும் படிக்க
[தொகு]- The Selling of the Senoi by Ann Faraday and John Wren-Lewis. URL: http://www.sawka.com/spiritwatch/selling.htm பரணிடப்பட்டது 2021-02-13 at the வந்தவழி இயந்திரம்
- Articles, Books, Notes and Summary of the Senoi and Kilton Stewart and The Marvelous Senoi Dream Controversy, a summary by Richard Wilkerson. URL: https://web.archive.org/web/20030421212819/http://www.shpm.com/qa/qadream/qadream8.html
- https://www.angelfire.com/ak/electricdreams/senoi.htm
- Original Wisdom: Stories of an Ancient Way of Knowing by Robert Wolff. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89281-866-2
வெளி இணைப்புகள்
[தொகு]- The Negrito of Malaysia
- The Negrito of Thailand (includes information about Negritos of Malaysia)
- http://projekt.ht.lu.se/rwaai RWAAI (Repository and Workspace for Austroasiatic Intangible Heritage)