உள்ளடக்கத்துக்குச் செல்

நெகிரிட்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செமாங் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மலேசியப் பழங்குடி மக்களில் முப்பெரும் பிரிவுகள் உள்ளன. அந்தப் பிரிவுகளில் செமாங் (Semang) அல்லது நெகிரிட்டோ (Negrito) என்பது மலாய் தீபகற்பத்தில் உள்ள ஒரு பழங்குடி மக்கள் பிரிவினர் ஆகும். [1]இவர்கள் தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதிகளிலும் பேராக், கெடா, பகாங் மாநிலங்களிலும் வாழ்கின்றனர். இவர்களை சக்காய் என்று அழைப்பதும் உண்டு. "சக்காய்" என்பது ஒரு தரக் குறைவான சொல். அதற்கு அடிமை என்று பொருள்.

துணைப்பிரிவுகளும் மக்கள் தொகையும்[தொகு]

தீபகற்ப மலேசியவில் நெகரிட்டோ மக்களின் தொகை மொத்தம் 3,507. இந்த நெகரிட்டோ மக்களில் ஆறு பிரிவுகள் உள்ளன. அதன் விவரம் வருமாறு:

  • பாடேக் பிரிவு 1,519 பேர்கள்
  • ஜஹாய் பிரிவு 1,244 பேர்கள்
  • கென்சியு பிரிவு 254 பேர்கள்
  • கின்டக் பிரிவு 150 பேர்கள்
  • லானோ பிரிவு 173 பேர்கள்
  • மென்ரிக் பிரிவு 167 பேர்கள்

ஆக மொத்தம்: 3,507 பேர்கள்

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Southeast Asian Negrito". Archived from the original on 2015-09-18. பார்க்கப்பட்ட நாள் 2016-06-09.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெகிரிட்டோ&oldid=3561003" இலிருந்து மீள்விக்கப்பட்டது