பாரியோ

ஆள்கூறுகள்: 3°44′6″N 115°28′45″E / 3.73500°N 115.47917°E / 3.73500; 115.47917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரியோ நகரம்
Bario Town
சரவாக்
சூரியன் மறையும் போது பாரியோ
பாரியோ நகரம் is located in மலேசியா
பாரியோ நகரம்
பாரியோ நகரம்
      பாரியோ       மலேசியா
ஆள்கூறுகள்: 3°44′6″N 115°28′45″E / 3.73500°N 115.47917°E / 3.73500; 115.47917
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுமிரி
மாவட்டம்மிரி[1]
துணை மாவட்டம்[2]பாரியோ
கிறிஸ்தவத்தின் அறிமுகம்1939
அரசு
 • தலைவர்ராபர்ட்சன் பாலா
Robertson Bala[3]
பரப்பளவு
 • மொத்தம்3,850 km2 (1,490 sq mi)
மக்கள்தொகை (2013)
 • மொத்தம்1,487
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு98xxx
இணையதளம்www.unimas.my/ebario/

பாரியோ (மலாய் மொழி: Bario; ஆங்கிலம்: Bario; சீனம்: 巴里奥) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் மிரி பிரிவு; மிரி மாவட்டத்தில் உள்ள நிலப் பகுதி. சரவாக் - கலிமந்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. மிரி நகருக்கு கிழக்கே 178 கி.மீ. தொலைவில் உள்ளது.[4]

பாரியோ என்பது 1000 மீ (3280 அடி) உயரத்தில் உள்ள பீடபூமியாகும். 13 முதல் 16 கிராமங்களைக் கொண்டது. கெலாபிட் சமூகத்தினர் அந்த உயர்நிலத்தில் நெல் சாகுபடி செய்கிறார்கள். பாரியோவிற்கு மிரி; மருடி நகர்களில் இருந்து வழக்கமான விமானச் சேவைகள் உள்ளன.[5]

"பரியோ" என்ற பெயர் கெலாபிட் மொழியில் இருந்து வந்தது. "காற்று" என்று பொருள். பாரியோவை "ஷாங்க்ரி-லா" Shangri-La சொர்க்கம் என்றும் அழைக்கிறார்கள்.

வரலாறு[தொகு]

கெலாபிட் மக்களின் வாய்மொழி வரலாற்றின் படி, அனைத்து மனிதர்களும் மலைகளில் இருந்து தோன்றியவர்கள். பூமியில் ஒரு பெரிய வெள்ளம் ஏற்பட்டது. மலைகளில் வாழ்ந்த மக்களில் சிலர் படகுகளை உருவாக்கி கடலோரப் பகுதிகளுக்குச் சென்றனர். மலைப் பகுதியில் சிக்கிக் கொண்டவர்கள் கெலாபிட் இனத்தைச் சேர்ந்த மக்களாக வாழ்கிறார்கள்.[6]

1920-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் வரையில், கெலாபிட் மக்கள் தங்களின் சமூகத் தகுதியைத் தக்க வைத்துக் கொள்ள தலை வேட்டை (Headhunting) எனும் பழக்கத்தைப் பின்பற்றி வந்தனர்.[7] 1939-இல், போர்னியோ எவாஞ்சலிகல் (Borneo Evangelical Mission) சமயப் பரப்புரையாளர் பிராங்க் டேவிட்சன் (Frank Davidson) என்பவர் பாரியோவில் உள்ள கெலாபிட் மக்களைச் சந்தித்தார்.

ஜப்பானிய எதிர்ப்பு இராணுவ நடவடிக்கை[தொகு]

அதன் பின்னர், கெலாபிட் மக்கள் தங்கள் நம்பிக்கையை ஆனிமிசத்தில் இருந்து கிறிஸ்தவத்திற்கு மாற்றிக் கொண்டனர். கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்ட முதல் நபர்களில் ஒருவர் பா தெராப் (Pa’Terap) குடியேற்றத்தின் கிராமத் தலைவர், தாமான் புலான்.

மார்ச் 1945-இல் டாம் ஹாரிசன் என்பவரின் தலைமையில் கீழ் ஒரு சிறிய படை வான்குடை மூலம் இங்கு தரையிறங்கியது. ஜப்பானிய எதிர்ப்பு இராணுவ நடவடிக்கையான செமுட் நடவடிக்கை (Operation Semut) எனும் நடவடிக்கைக்கு பேரியோ ஒரு தளமாக மாறியது. சரவாக்கில் ஜப்பானிய நடவடிக்கைகளை முற்றுப் பெறச் செய்வதில் கெலாபிட் மக்கள் பங்கேற்றனர்.[8]

இந்தோனேசியா - மலேசியா மோதல்[தொகு]

பாரியோவில் முதல் பள்ளி 1946 இல் நிறுவப்பட்டது.[5] பாரியோவில் முதல் விமான ஓடுதளம் சமய நோக்கங்களுக்காக 1953-இல் கட்டப்பட்டது. சரவாக் காலனித்துவ அரசாங்கம் 1961-இல் அந்த விமான ஓடுதளத்தை கையகப்படுத்தியது. ஒரு புதிய விமான ஓடுதளம் 1996-இல் கட்டி முடிக்கப்பட்டது.[7]

1963-ஆம் ஆண்டில் இந்தோனேசியா - மலேசியா மோதல் (Indonesia-Malaysia Confrontation) ஏற்பட்ட போது, சரவாக் - கலிமந்தான் எல்லையில் இருந்த இரண்டு கிராமங்கள் எரிக்கப்பட்டன. மலேசிய அரசாங்கம் பாதுகாப்புக்காக பத்து கெலாபிட் கிராமங்களை பாரியோவிற்கு மாற்றியது.[9]

1999 ஆம் ஆண்டில், மலேசியா சரவாக் பல்கலைக்கழகம் (UNIMAS) இ-பாரியோ (eBario) திட்டத்தை உருவாக்கியது. இது பாரியோ மக்களுக்கான கணினி தொழில்நுட்பத் திட்டம். சுத்தமான நீர், மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரும் திட்டமாகும்.[10][11]

மக்கள்தொகை[தொகு]

பாரியோ கிராமப்புற மருந்தகத்தின் 2003-ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, பாரியோ சமூகத்தில் 1,487 மக்கள்தொகை கொண்ட 305 குடும்பங்கள் இருந்தன.[4]

பாரியோ நகரம் (Bario Asal) 29 குடும்பங்களையும் 192 மக்களையும் கொண்டுள்ளது.[7] அவர்களில் பெரும்பாலோர் வயதானவர்கள் அல்லது இளம் பெற்றோர்கள். சமூகத்தின் தொய்வான பொருளாதார நடவடிக்கைகள் காரணமாக இங்கு மிகக் குறைவான இளைஞர்கள் உள்ளனர்.

வறுமைக் கோடு[தொகு]

2006-ஆம் ஆண்டில், மக்கள் தொகையில் 55% விவசாயிகள்; 21% ஓய்வூதியம் பெறுபவர்கள்; மீதமுள்ளவர்கள் 7% அரசு ஊழியர்கள். பெரும்பாலான விவசாயிகள் ரிங்கிட் 500-க்கும் குறைவாகவே சம்பாதித்தனர். இது சரவாக்கின் வறுமைக் கோட்டிற்கு கீழே இருந்தது.[5]

தொழிலாளர் பற்றாக்குறைக் காரணமாக, அண்டை நாடான இந்தோனேசியாவின் கலிமந்தானில் இருந்து வெளிநாட்டு தொழிலாளர்கள் இங்கு விவசாய உற்பத்திக்காக பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

பாரியோவில் பேசப்படும் முக்கிய மொழி கெலாபிட் மொழி. இருப்பினும், மலாய் மொழியும் இங்கு பரவலாகப் பேசப்படுகிறது. ஒரு சிலர் ஆங்கில மொழியை நன்றாக பேசுகிறார்கள்.[5]

காலநிலை[தொகு]

முக்கா நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்கிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், பாரியோ
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 25.1
(77.2)
25.0
(77)
25.2
(77.4)
25.3
(77.5)
25.2
(77.4)
25.0
(77)
24.9
(76.8)
24.9
(76.8)
25.1
(77.2)
25.1
(77.2)
25.2
(77.4)
25.6
(78.1)
25.13
(77.24)
தினசரி சராசரி °C (°F) 21.5
(70.7)
21.5
(70.7)
21.5
(70.7)
21.7
(71.1)
21.6
(70.9)
21.4
(70.5)
21.3
(70.3)
21.2
(70.2)
21.4
(70.5)
21.5
(70.7)
21.6
(70.9)
22.0
(71.6)
21.52
(70.73)
தாழ் சராசரி °C (°F) 18.0
(64.4)
18.0
(64.4)
17.9
(64.2)
18.1
(64.6)
18.1
(64.6)
17.9
(64.2)
17.7
(63.9)
17.6
(63.7)
17.7
(63.9)
17.9
(64.2)
18.1
(64.6)
18.4
(65.1)
17.95
(64.31)
மழைப்பொழிவுmm (inches) 210
(8.27)
219
(8.62)
235
(9.25)
270
(10.63)
331
(13.03)
243
(9.57)
255
(10.04)
233
(9.17)
273
(10.75)
250
(9.84)
267
(10.51)
289
(11.38)
3,075
(121.06)
ஆதாரம்: Climate-Data.org[12]

பாரியோ காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. Sudan, Ajang (30 September 2015). "Daerah Kecil Bario di bawah bidang kuasa MBM (Bario sub-district is now under the jurisdiction of Miri City Council)". Utusan Borneo. https://www.pressreader.com/malaysia/utusan-borneo-sarawak/20150930/281668253787100. 
 2. "CM: Bario's elevation proof of govt's focus on rural devt". The Borneo Post. 2015-07-31. Archived from the original on 15 August 2015. பார்க்கப்பட்ட நாள் 5 August 2017.
 3. Aubrey, Samuel (25 April 2016). "Fuel shortage in Bario solved". The Borneo Post இம் மூலத்தில் இருந்து 8 May 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160508053640/http://www.theborneopost.com/2016/04/25/bario-folk-to-undergo-cert-programme-soon/. 
 4. "Distance from Bario to Miri". airmilescalculator.com. பார்க்கப்பட்ட நாள் 22 May 2017.
 5. 5.0 5.1 5.2 5.3 "The Context: Bario, The Kelabit and The Kelabit Highlands". eBario. eBario. Archived from the original on 5 ஆகஸ்ட் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 6. Bala, Poline. "A Brief Profile: The Kelabit of the Kelabit Highlands". University Malaysia Sarawak. Archived from the original on 18 January 2017. பார்க்கப்பட்ட நாள் 15 August 2017.
 7. 7.0 7.1 7.2 Roger, Harris; Poline, Bala; Peter, Songan; Guat Lien, Elaine Khoo; Trang, Tingang. "Challenges and Opportunities in Introducing Information and Communication Technologies to the Kelabit Community of North Central Borneo". eBario. University Malaysia Sarawak. Archived from the original on 29 ஏப்ரல் 2018. பார்க்கப்பட்ட நாள் 1 June 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. Ooi, Keat Gin. "Prelude to invasion: covert operations before the re-occupation of Northwest Borneo, 1944 – 45". Journal of the Australian War Memorial. https://www.awm.gov.au/journal/j37/borneo.asp. பார்த்த நாள்: 3 November 2015. 
 9. Batu Bala, Sagau (2014). Kelabit's story of the great transition. PartridgeIndia. பக். 220–221. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781482897425. https://books.google.com/books?id=8CVyAwAAQBAJ&pg=PA220. பார்த்த நாள்: 24 May 2017. 
 10. "World Teleport Association Announces Picks for Top Seven Intelligent Communities in the World". e-bario. intelligentcommunity.org. Archived from the original on 12 September 2016. பார்க்கப்பட்ட நாள் 21 May 2017.
 11. A Profile of the Public Service of Malaysia. Commonwealth Secretariat. 2004. பக். 62. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780850927009. https://books.google.com/books?id=hbXUpBXI6ToC&pg=PA62. பார்த்த நாள்: 21 May 2017. 
 12. "Climate: Bario". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
பாரியோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரியோ&oldid=3646001" இலிருந்து மீள்விக்கப்பட்டது