ஜேம்சு புரூக்
ஜேம்சு புரூக் James Brooke | |
---|---|
வெள்ளை இராஜா | |
ஆட்சிக்காலம் | 18 ஆகஸ்டு 1842 11 சூன் 1868 |
மலேசியா | 18 ஆகஸ்டு 1842 |
முன்னையவர் | 1. சுல்தான் தெங்கா சரவாக் (Sultan Tengah) 2. பெங்கிரான் இந்திரா மக்கோத்தா முகமது சாலே Pengiran Indera Mahkota Mohammad Salleh |
பின்னையவர் | சார்லசு புரூக் |
பிறப்பு | ஹூக்லி மாவட்டம், மேற்கு வங்காளம் | 29 ஏப்ரல் 1803
இறப்பு | 11 சூன் 1868 ஐக்கிய இராச்சியம் | (அகவை 65)
வாழ்க்கைத் துணைகள் | பெங்கீரான் அனாக் பத்திமா (Pengiran Anak Fatima) |
குழந்தைகளின் பெயர்கள் | 1 மகள் |
மரபு | புரூக் வம்சாவழி |
தந்தை | தோமசு புரூக் |
தாய் | அன்னா மரியா |
மதம் | கிறிஸ்துவம் |
சர் ஜேம்சு புரூக் (ஆங்கிலம்: Sir James Brooke; மலாய்: Raja Putih Sarawak) (பிறப்பு: 29 ஏப்ரல் 1803 – இறப்பு: 11 சூன் 1868), என்பவர் போர்னியோ தீவின் வடமேற்குப் பகுதியில் சரவாக் சுல்தானகம் எனும் சரவாக் இராச்சியத்தை (Raj of Sarawak) உருவாக்கியவர்.
சரவாக் மாநிலத்தில், வெள்ளை இராஜா (Rajah of Sarawak) எனும் புரூக் பரம்பரையைத் தோற்றுவித்தவர்; அதன் முதல் ராஜாவாக சரவாக் இராச்சியத்தில் கோலோச்சியவர்; 1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் சரவாக் இராச்சியத்தை ஆட்சி செய்தவர்.
வரலாறு
[தொகு]இந்தியாவில் கம்பெனி ஆட்சி (Company Raj) நடைபெற்ற போது மேற்கு வங்காளம், ஹூக்லி மாவட்டத்தில் ஜேம்சு புரூக் பிறந்தார்.[1]
இங்கிலாந்தில் சில வருடங்கள் கல்வி கற்ற பிறகு, 1819-ஆம் ஆண்டில், வங்காள இராணுவத்தில் (Bengal Army) பணியாற்றினார். 1825-ஆம் ஆண்டில் முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போரில் மிக மோசமாகக் காயமடைந்தார்.
முதலாம் ஆங்கிலேய-பர்மியப் போர்
[தொகு]இந்தப் போர் பிரித்தானியப் பேரரசுக்கும், கோன்பவுங் வம்சத்தின் பர்மியப் பேரரசுக்கும் இடையே நடைபெற்ற போராகும். ஜேம்ஸ் புரூக் உடனடியாக இங்கிலாந்திற்குத் திருப்பி அனுப்பப் பட்டார்.
1830-ஆம் ஆண்டில், ஜேம்ஸ் புரூக் மீண்டும் சென்னைக்கு வந்தார். ஆனால் பழைய இராணுவப் பிரிவில் மீண்டும் சேர மிகவும் தாமதமாகி விட்டது. பின்னர் தன் இராணுவ வேலையை ராஜினாமா செய்தார். மீண்டும் இங்கிலாந்து நாட்டிற்கே திரும்பினார்.
தூரக்கிழக்குப் பயணம்
[தொகு]இடையில், தான் ஒரு வணிகராக வேண்டும் என விருப்பப் பட்டார். தூரக்கிழக்கு நாடுகளில் வணிகம் செய்ய முயற்சிகள் செய்தார். பலன் அளிக்கவில்லை.
1835-ஆம் ஆண்டில் அவருடைய தந்தையார் இறந்ததும் வாரிசு சொத்து என £30,000 பெற்றார். அந்தப் பணத்தைக் கொண்டு அவர் 142-டன் எடை கொண்ட ஒரு கப்பலை வாங்கினார். அந்தக் கப்பலின் பெயர் ராயலிஸ்ட் (Royalist).[2]
புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன்
[தொகு]1838-ஆம் ஆண்டில் போர்னியோ தீவில் கூச்சிங்க் நகரை வந்தடைந்தார். அப்போது புரூணை சுல்தானுக்கு எதிரான கிளர்ச்சிகள் போர்னியோவில் பரவலாக இருந்தன. அந்த எதிர்ப்புகளை சமாதான முறையில் தீர்த்து வைக்கலாம் என ஜேம்ஸ் புரூக் விரும்பினார்.
புரூணை சுல்தானின் மாமா பெங்கிரான் மூடா அசீமை (Pangeran Muda Hashim) கூச்சிங்கில் சந்தித்தார். கிளர்ச்சியை நசுக்க உதவினார். இதன் மூலம் புரூணை சுல்தான் உமர் அலி சைபுதீன் II (Omar Ali Saifuddin II) அவர்களின் நன்மதிப்பைப் பெற்றார். சுல்தான் உமர் அலி சைபுதீன் II; புருணையின் 23-ஆவது சுல்தான் ஆவார். இவர் 1841-இல் புரூக் செய்த உதவிக்கு ஈடாக சரவாக்கின் கவர்னர் பதவியை புரூக்கிற்கு வழங்கினார்.
புரூணை மலாய் பிரபுக்கள்
[தொகு]அந்தக் காலக் கட்டத்தில் சரவாக் கடல் பகுதிகளில் கடற்கொள்ளைகள் பரவலாக இருந்தன. அந்த கடற்கொள்ளைகளை அடக்குவதில் ஜேம்சு புரூக் வெற்றிகரமாகச் செயல்பட்டார். இருப்பினும், அப்போது புரூணையில் இருந்த மலாய் பிரபுக்கள் சிலர், திருட்டுக்கு எதிரான புரூக்கின் தீவிரமான நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சி அடையவில்லை. அவை அவர்களுக்குப் பாதகமாக இருந்தன.
புரூணை சுல்தானின் மாமா பெங்கிரான் மூடா அசீமையும் (Pangeran Muda Hashim) மற்றும் அவரின் ஆதரவாளர்களையும் கொலை செய்வதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். பிரித்தானிய இராணுவத்தைக் கொண்டு, ஜேம்சு புரூக் அந்த முயற்சியை அடக்கினார். புரூணை ஆட்சியைச் சுல்தான் உமர் அலி சைபுதீனிடமே (Omar Ali Saifuddin II) மீட்டுக் கொடுத்தார்.
லபுவான் ஆளுநராக ஜேம்சு புரூக்
[தொகு]1842-ஆம் ஆண்டில், சுல்தான் உமர் அலி சைபுதீன், சரவாக்கின் முழு இறையாண்மையையும் ஜேம்சு புரூக்கிற்கு விட்டுக் கொடுத்தார். 1842 ஆகஸ்டு 18-ஆம் தேதி சரவாக் ராஜா என்ற பட்டம் ஜேம்சு புரூக்கிற்கு வழங்கப்பட்டது.
1844-இல் ஜேம்சு புரூக், தன் மேற்பார்வையில் இருந்த லபுவான் தீவை பிரித்தானிய அரசாங்கத்திற்கு வழங்கினார். 1848-இல் ஜேம்சு புரூக், லபுவானின் ஆளுநராகவும் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார்.
சொந்த வாழ்க்கை
[தொகு]ஜேம்சு புரூக்கிற்குச் சட்டப்படியாக முறையான திருமணம் எதுவும் நடைபெறவில்லை என்று அறியப் படுகிறது. இருப்பினும் இங்கிலாந்தில் அவருக்கு ஒரு மகன் இருந்ததாகவும் தெரிய வருகிறது. மனைவியின் அடையாளம் அல்லது மகனின் அடையாளம்; அல்லது அவர்களின் பிறந்த தேதிகள் தெளிவாகக் கிடைக்கப் பெறவில்லை.[3]
இருப்பினும் மகனின் பெயர் ரூபன் ஜார்ஜ் வாக்கர் (Reuben George Walker) என்றும்; அந்தப் பெயர் ஜார்ஜ் புரூக் (George Brooke) என மாற்றம் கண்டதாகவும் சொல்லப் படுகிறது.[4]
பெங்கீரான் அனாக் பத்திமா
[தொகு]ஆனாலும் ஜேம்சு புரூக்கிற்கு முஸ்லீம் முறைப்படி ஒரு முறை திருமணம் நடைபெற்று உள்ளது. புரூணை நாட்டைச் சேர்ந்த பெண்மணி பெங்கீரான் அனாக் பத்திமா (Pengiran Anak Fatima) என்பவரை முஸ்லீம் முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார்.
பிரான்சிஸ் வில்லியம் டக்ளஸ் (1874-1953) (Francis William Douglas) என்பவர், நவம்பர் 1913 முதல் சனவரி 1915 வரை, புரூணை மற்றும் லபுவான் பகுதிகளின் துணை ஆளுநராக (Acting Resident for Brunei and Labuan) பணி செய்தவர். அவர் 19 ஜூலை 1915-ஆம் தேதி லண்டனில் உள்ள பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் அந்தத் திருமணத்தைப் பற்றி குறிப்பிட்டு உள்ளார்.[5]
ஜேம்சு புரூக்கிற்குப் பிறந்த மகள்
[தொகு]பெங்கீரான் அனாக் அப்துல் காதிர் (Pengiran Anak Abdul Kadir) என்பவரின் மகளும், புருணையின் 21-ஆவது சுல்தானான சுல்தான் முகம்மது கன்சுல் ஆலாம் (Sultan Muhammad Kanzul Alam) என்பவரின் பேத்தி பெங்கீரான் அனாக் பத்திமா. இந்தத் திருமணம் ஐரோப்பாவில் செல்லுபடி ஆகாது.
இந்தத் திருமணத்தின் மூலமாக அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். 1864-இல் பிரான்சிஸ் வில்லியம் டக்ளஸ் என்பவரால் இந்தப் பெண்மணி, நேர்காணல் புரூக்கின் மகள் செய்யப் பட்டார். அத்துடன் மருத்துவர் டாக்டர் ஓகில்வி (Dr Ogilvie) என்பவர் புரூக்கின் மகளை 1866-இல் சந்தித்ததாகவும் பிரித்தானிய வெளியுறவு அலுவலகத்திற்கு எழுதிய கடிதத்தில் டக்ளஸ் குறிப்பிட்டு உள்ளார்.[6]
வாரிசு
[தொகு]ஜேம்சு புரூக்கிற்கு முறையான பிள்ளைகள் இல்லாததால், 1861-இல் அவர் தன் சகோதரியின் மூத்த மகனான கேப்டன் ஜோன் புரூக் ஜான்சன் புரூக் (Captain John Brooke Johnson Brooke) என்பவரைத் தன் வாரிசாகப் நியமித்தார்.
இருப்பினும் இருவருக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்பட்டன. வாரிசு பட்டியலில் இருந்து ஜோன் புரூக் தவிர்க்கப் பட்டார். இவருக்குப் பதிலாக, இவரின் ஜோன் புரூக்கின் இளைய சகோதரர், சார்லஸ் அந்தோனி ஜான்சன் புரூக் என்பவரைத் தன் வாரிசாக நியமித்தார்.
இறப்பு
[தொகு]ஜேம்சு புரூக்கின், இறுதி கட்டத்தின் பத்து ஆண்டுகளில், மூன்று முறை பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டார். 1868-ஆம் ஆண்டு ஜூன் 11-ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள டார்ட்மூர், டெவன்சையர் (Dartmoor, Devonshire) நகரில் இறந்தார். செயிண்ட் லியோனர்ட் தேவாலயத்தின் (St Leonard's Church) கல்லறையில் அடக்கம் செய்யப் பட்டார்.
வெள்ளை இராஜா வம்சாவழியினர்
[தொகு]பெயர் | தோற்றம் | பிறப்பு | இறப்பு |
---|---|---|---|
ஜேம்சு புரூக் (1841–1868) |
29 ஏப்ரல் 1803, இந்தியா | 11 ஜூன் 1868, இங்கிலாந்து | |
ஜோன் புரூக் Rajah Muda of Sarawak (1859–1863) |
1823, இங்கிலாந்து | 1 டிசம்பர் 1868, இங்கிலாந்து | |
சார்லசு புரூக் (1868–1917) |
3 ஜுன் 1829, இங்கிலாந்து | 17 மே 1917, இங்கிலாந்து | |
சார்ல்சு வைனர் புரூக் (1917–1946) |
26 செப்டம்பர் 1874, இங்கிலாந்து | 9 மே 1963, இங்கிலாந்து | |
பெர்த்திராம் புரூக் Tuan Muda of Sarawak (1917–1946) |
8 ஆகஸ்டு 1876, சரவாக் | 15 செப்டம்பர் 1965, இங்கிலாந்து | |
அந்தோனி புரூக் Rajah Muda of Sarawak (1939–1946) |
10 டிசம்பர் 1912, இங்கிலாந்து | 2 மார்ச் 2011, நியூசிலாந்து |
பொது
[தொகு]1840-ஆம் ஆண்டுக் காலக் கட்டத்தில், சரவாக்கை ஆட்சி செய்யத் தொடங்கிய புரூக் அரசக் குடும்பத் தலைவரையும்; சாதாரண புரூக் குடும்பத்தைச் சார்ந்தவர்களையும்; வேறுபடுத்திக் காட்டுவதற்காக வெள்ளை இராஜா எனும் அடைமொழி பயன்படுத்தப்பட்டது.
ஜேம்சு புரூக் என்பவர் அதன் முதல் ராஜாவாக ஆட்சி செய்தார். 1841-ஆம் ஆண்டில் இருந்து 1868-ஆம் ஆண்டு, அவர் இறக்கும் வரையில் சரவாக்கை ஆட்சி செய்தார்.[2]
புரூணை சுல்தானகம்
[தொகு]1800-ஆம் ஆண்டுகளில், சரவாக் நிலப்பகுதி புரூணை சுல்தானகத்திற்குச் சொந்தமான ஒரு காலனியாக இருந்தது. 1946-ஆம் ஆண்டு சரவாக்கைப் பிரித்தானிய அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் வரையில் சரவாக் இராச்சியத்தை வெள்ளை இராஜாக்கள் 95 ஆண்டு காலம் ஆட்சி செய்தார்கள்.
ஜேம்சு புரூக் முதன்முதலில் போர்னியோ தீவிற்கு வந்தபோது, சரவாக் நிலப்பகுதி புருணை சுல்தானகத்தின் அடிமை மாநிலமாக இருந்தது. அரசாங்க அமைப்பு முறை புருணை அரசாங்க நிர்வாகத்தை அடிப்படையாகக் கொண்டு இருந்தது.
பொதுச்சேவை சீர்த்திருத்தங்கள்
[தொகு]பிரித்தானிய அரசாங்க நிர்வாக அமைப்பைப் போல சரவாக் அரசாங்க நிர்வாகத்தையும் ஜேம்சு புரூக் மறுசீரமைத்தார். இறுதியில் சரவாக அரசாங்கத்தில் ஒரு பொதுச் சேவையையும் உருவாக்கினார்.
ஐரோப்பிய அதிகாரிகளை, குறிப்பாக பிரித்தானிய அதிகாரிகளை மாவட்டத்தின் வெளிமாநிலங்களை நிர்வகிப்பதற்கு நியமித்தார். இராஜா ஜேம்சு புரூக் மற்றும் அவரின் வாரிசுகளால், சரவாக் பொதுச் சேவைத் துறை தொடர்ந்து சீர்திருத்தம் செய்யப்பட்டது.
புரூக் குடும்பம்
[தொகு]சான்றுகள்
[தொகு]- Barley, Nigel (2002), White Rajah, Time Warner: London. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-316-85920-2.
- Cavendish, Richard, "Birth of Sir James Brooke", History Today. April 2003, Vol. 53, Issue 4.
- Jacob, Gertrude Le Grand. The Raja of Saráwak: An Account of Sir James Brooks. K. C. B., LL. D., Given Chiefly Through Letters and Journals. London: MacMillan, 1876.
- Wason, Charles William. The Annual Register: A Review of Public Events at Home and Abroad for the Year 1868. London: Rivingtons, Waterloo Place, 1869. pp. 162–163.
மேலும் படிக்க
[தொகு]- Foggo, George (1853) Adventures of Sir James Brooke, K.C.B., Rajah of Sarawak, "sovereign de facto of Borneo proper," late governor of Labuan: from Rajah Brooke's own diary and correspondence, or from government official documents, London: Effingham Wilson.
- Hahn, Emily (1953) James Brooke of Sarawak, London, Arthur Barker.
- Ingleson, John (1979) Expanding the empire: James Brooke and the Sarawak lobby, 1839–1868, Nedlands, W.A.: Centre for South and Southeast Asian Studies, University of Western Australia.
- Payne, Robert (1960) The White Rajahs of Sarawak, Robert Hale.
- Pybus, Cassandra (1996) 'White Rajah: A Dynastic Intrigue' University of Queensland Press.
- Runciman, Steve (1960) The White Rajahs: A History of Sarawak from 1841 to 1946, Cambridge University Press.
- Tarling, Nicholas (1982) The burthen, the risk, and the glory: a biography of Sir James Brooke, Kuala Lumpur; New York: Oxford University Press.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Birth and Baptism records http://indiafamily.bl.uk/ui/FullDisplay.aspx?RecordId=014-000031913
- ↑ 2.0 2.1 James, Lawrence (1997) [1994]. The Rise and Fall of the British Empire. New York: St. Martin's Griffin. pp. 244–245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-312-16985-X.
- ↑ "British Admiral wreck". Kingisland.net.au. பார்க்கப்பட்ட நாள் 6 February 2013.
- ↑ "September 2005 Meeting Report". Keyworth Local History Society. Archived from the original on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 6 February 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 28 February 2008. பார்க்கப்பட்ட நாள் 18 January 2008.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Reece, R. H. W. (March 1985). "A "Suitable Population": Charles Brooke and Race-Mixing in Sarawak" (in en). Itinerario 9 (1): 67–112. doi:10.1017/S0165115300003442. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-2827. https://www.cambridge.org/core/journals/itinerario/article/abs/suitable-population-charles-brooke-and-racemixing-in-sarawak/AB3E5E41B598AEE4EF73558EEAFCA433.
வெளி இணைப்புகள்
[தொகு]- The Brooke Trust – புரூக் வம்சத்தின் பாரம்பரியம் பற்றிய கூடுதல் தகவல்கள்