உள்ளடக்கத்துக்குச் செல்

பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிருவாகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(போர்னியோவில் பிரித்தானிய இராணுவ நிருவாகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிருவாகம்
British Military Administration of Borneo
1945–1946[1][2]
கொடி of
கொடி
சின்னம் of
சின்னம்
1945-இல் சப்பானியப் படைகள் லபுவானில் சரணடைவு
1945-இல் சப்பானியப் படைகள் லபுவானில் சரணடைவு
நிலைஇடைக்கால அரசாங்கம்
தலைநகரம்விக்டோரியா[3]
அரசாங்கம்இராணுவ நிர்வாகம்
தலைமை நிர்வாகி 
• 1945–1946
பிரிகேடியர் சார்லசு பிரடெரிக்
வரலாற்று சகாப்தம்போருக்கு பிந்தைய
15 ஆகத்து 1945
• பிரித்தானிய இராணுவ நிர்வாகம் அமைக்கப்படுதல்

12 செப்டம்பர் 1945
• முடியாட்சி உருவாக்கம்

1 சூலை 1946[1][2]
நாணயம்பிரித்தானிய வடக்கு போர்னியோ டாலர், சரவாக் டாலர்
முந்தையது
பின்னையது
பிரித்தானிய போர்னியோவில் சப்பானிய ஆக்கிரமிப்பு
சரவாக் முடியாட்சி
வடக்கு போர்னியோ முடியாட்சி
புரூணை
தற்போதைய பகுதிகள்மலேசியா
புரூணை

பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிருவாகம் (ஆங்கிலம்: British Military Administration of Borneo (BMA); மலாய்: Pentadbiran Tentera British (Borneo)) என்பது 1945 செப்டம்பர் 12-ஆம் தேதி தொடங்கி 1946 சூலை 1-ஆம் தேதி வரையில், சரவாக் மற்றும் வடக்கு போர்னியோ பகுதிகளை பிரித்தானிய இராணுவத்தினர் நிருவாகம் செய்ததைக் குறிப்பிடுவதாகும்.

இரண்டாம் உலகப் போர் முடிவு அடைந்த போது சப்பான் சரண் அடைந்தது. அந்த நிலையில் சரவாக், சபா, லபுவான் பகுதிகளில் நிர்வாக வெற்றிடம் ஏற்பட்டது. அதை நிரப்புவதற்காக ஒரு பாதுகாப்பு நிருவாகம் (Caretaker Government) உருவாக்கப்பட்டது.

அந்த நிருவாகம் தான் பிரித்தானிய போர்னியோவில் இராணுவ நிர்வாகம் எனும் தற்காலிக நிருவாகம் ஆகும்.[1]

பொது

[தொகு]

1946-இல் சரவாக் மற்றும் வடக்கு போர்னியோவில் பிரித்தானிய முடியாட்சி நிறுவுவதற்கு இடையில் இந்த நிருவாகம் செயல்பட்டது.[2]

லபுவான் தீவில் போர்னியோவின் பிரித்தானிய இராணுவ நிர்வாகத்தின் தலைமையகம் இருந்தது. அந்தத் தலைமையகம் பெரும்பாலும் ஆத்திரேலிய அரசாங்கத்தின் இராணுவப் படையினரால் (Australian Imperial Force) நிருவகிக்கப்பட்டது.[4]

அந்த நிருவாகத்தின் கீழ் இன்றைய லபுவான், சபா, சரவாக் புரூணை பகுதிகள் இருந்தன. அவற்றுள் சரவாக் மாநிலம் மட்டும் பிரித்தானிய போர்னியோ பொது விவகாரப் பிரிவின் (British Borneo Civil Affairs Unit) கீழ் ஆத்திரேலியர்களால் நிருவகிக்கப்பட்டது.

மேலும் காண்க

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 Walter Yust (1947). Ten eventful years: a record of events of the years preceding, including and following World War II, 1937 through 1946. Encyclopaedia Britannica. p. 382.
  2. 2.0 2.1 Tamara Thiessen (2008). Borneo. Bradt Travel Guides. pp. 211–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84162-252-1.
  3. Ooi Keat Gin (7 June 2010). The A to Z of Malaysia. Scarecrow Press. pp. 60–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4616-7199-2.
  4. Stephen R. Evans (1990). Sabah (North Borneo): Under the Rising Sun Government. Tropical Press.

மேலும் படிக்க

[தொகு]